குக்கரால் விலகிய தினகரன்.. “ட்விஸ்ட்”! விடாமல் போராடி பெற்ற நாதக.. “வட போச்சே”.. குமுறும் அமமுகவினர்
குக்கர் சின்னம் கிடைக்காததால் அமமுக விலகிய நிலையில், ராஜா என்பவருக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு : குக்கர் சின்னம் ஒதுக்கமுடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்ததால் ஈரோடு இடைத்தேர்தல் போட்டியிலிருந்து அமமுக விலகிய நிலையில், குக்கர் சின்னம், கொங்கு தேச மறுமலர்ச்சி மக்கள் கட்சி வேட்பாளர் கே.பி.எம்.ராஜாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் நாம் தமிழர் கட்சி போராடி கரும்பு விவசாயி சின்னத்தையே பெற்றுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 96 பேர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்த நிலையில் அதில் 83 பேரின் மனுக்கள் ஏற்பட்டன. அதில் 6 பேர் மனுக்களை திரும்பப் பெற்றதால் 77 பேர் களத்தில் உள்ளனர்.
டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படாத நிலையில் அவர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

அதிமுக வேட்பாளர்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 7ஆம் தேதி நிறைவடைந்தது. கடைசி நாளன்று அதிமுக எடப்பாடி பழனிசாமி அணியின் வேட்பாளர் தென்னரசு வேட்பு மனு தாக்கல் செய்தார். எடப்பாடி பழனிசாமி அறிவித்த வேட்பாளர் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்க வசதியாக ஓ.பன்னீர்செல்வம் தனது தரப்பு வேட்பாளரை வாபஸ் பெற்றுவிட்டார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உட்பட 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

கட்சி சின்னங்கள்
இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்து தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்துள்ளார். அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கை சின்னம் வழங்கப்பட்டுள்ளது. தேமுதிக வேட்பாளர் ஆனந்த்துக்கு முரசு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

குக்கர் சின்னம்
மேலும், மநீம சின்னமான டார்ச் லைட், அமமுக சின்னமான குக்கர் ஆகிய சின்னங்கள் சுயேச்சைகளுக்கான சின்னம் பட்டியலில் இடம்பெற்றன. இதில், கொங்கு தேச மறுமலர்ச்சி மக்கள் கட்சி வேட்பாளர் கே.பி.எம்.ராஜாவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. குக்கர் சின்னத்தை 4 சுயேட்சை வேட்பாளர்கள் கோரியதால் குலுக்கல் முறையில் சின்னத்தை ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, குலுக்கல் முறையில் கொங்கு தேச மறுமலர்ச்சி மக்கள் கட்சி வேட்பாளர் கே.பி.எம்.ராஜாவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அமமுக சின்னம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுக சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த சிவபிரசாத்திற்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் ஒப்புக்கொள்ளாததால் டிடிவி தினகரன் தனது வேட்பாளரை திரும்பப் பெறுவதாக அறிவித்திருந்தார். அதன்படி இன்று அமமுக வேட்பாளர் சிவபிரசாத் வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். இந்நிலையில், கொங்கு தேச மறுமலர்ச்சி மக்கள் கட்சி வேட்பாளர் கே.பி.எம்.ராஜாவுக்கு குலுக்கல் முறையில் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கரும்பு விவசாயி
ஒன்றுக்கும் மேற்பட்டோர் ஒரே சின்னத்தை கோரியபோது குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கரும்பு விவசாயி சின்னத்தை சுயேட்சை வேட்பாளர்கள் இருவரும் கோரினர். குலுக்கல் முறையில் சின்னம் தேர்வு செய்ய நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் முகவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், அக்கட்சிக்கு குலுக்கல் முறை இன்றி கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அமமுகவினர் குமுறல்
குலுக்கல் முறையில் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்க நாதக எதிர்ப்பு தெரிவித்ததால் அக்கட்சிக்கே கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. அமமுக களத்தில் நின்றிருந்தால் அதேபோல நாம் ஏற்கனவே நின்று வென்ற குக்கர் சின்னத்தை கேட்டுப் பெற்றிருக்கலாம், கடந்த தேர்தலில் நமக்கு விழுந்த வாக்குகள் குக்கர் சின்னத்தில் நிற்பவருக்கு விழப்போகின்றன என அமமுகவினர் குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications