ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தாய்லாந்து பயணியின் மரண வாக்குமூலம்.. ஈரோட்டில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா.. எப்படி பரவியது?

ஈரோட்டில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா பரவியது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

ஈரோடு: ஈரோட்டில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா பரவியது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொரோனா பரவல் எப்படி ஏற்பட்டது என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.

கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் 834 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டும் 166 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்து கோயம்புத்தூரில் 66 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் 58 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதில் ஈரோடு நான்காவது இடத்தில் இருக்கிறது. அங்கு மொத்தம் 53 பேருக்கு கொரோனா நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

ராயபுரம் முதல் கோடம்பாக்கம் வரை.. சென்னையில் 6 கொரோனா ஹாட்ஸ்பாட்கள்.. மிக கவனமாக இருக்க வேண்டும்! ராயபுரம் முதல் கோடம்பாக்கம் வரை.. சென்னையில் 6 கொரோனா ஹாட்ஸ்பாட்கள்.. மிக கவனமாக இருக்க வேண்டும்!

எப்படி நடக்கிறது

எப்படி நடக்கிறது

ஈரோடும் கொரோனா காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ஐந்தாவது கேஸ் ஈரோட்டில்தான் ஏற்பட்டது. அங்கு 75 வயது நபர், ஐஆர்டி மெடிக்கல் கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 21ம் தேதி டெல்லியில் இருந்து இவர் ஈரோடு வந்துள்ளார். இவருக்கு கொரோனா ஏற்பட்டது. அதன்பின் வரிசையாக பலருக்கு அங்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதேபோல் 6வது கேஸ் அதே நாளில் ஈரோடு வந்த தாய்லாந்து பயணி ஆவார்.

தாய்லாந்து பயணி

தாய்லாந்து பயணி

இவர்கள் இருவர் மூலம் பலருக்கு வரிசையாக கொரோனா பரவி இருக்கிறது. தமிழகத்தில் பதிவான 26வது கேஸ் மற்றும் கேஸ் எண் 47, 48, 49, 50 ஆகிய நபர்களுக்கு ஈரோட்டில் இருந்துதான் கொரோனா ஏற்பட்டது. அதேபோல் கேஸ் எண் 56 முதல் 65வது நோயாளிகள் வரை ஈரோட்டில் இருந்து கொரோனா வைரஸ் ஏற்பட்டது. இதில் ஈரோட்டில் ஏற்பட்ட தாய்லாந்து பயணியின் கேஸ்தான் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது.

அவர் கொடுத்த வாக்குமூலம்

அவர் கொடுத்த வாக்குமூலம்

கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்போடு சிகிச்சை பெற்று வந்த அந்த தாய்லாந்து பயணி கடந்த மாதம் பலியானார். இவர் தன்னுடைய மரணத்திற்கு முன் முக்கிய வாக்குமூலம் ஒன்றை கொடுத்தார். அவர், தான் சந்தித்த ஆட்கள் குறித்த விவரங்களை பகிர்ந்து கொண்டார். தமிழகத்தில் தான் ஒரு வாரத்தில் எங்கு எல்லாம் சென்றேன் என்பதை பட்டியலிட்டார். யாரை எல்லாம் சந்தித்தேன் என்பதை தன்னுடைய மரணத்திற்கு முன் விளக்கமாக கொடுத்தார்.

முக்கியமான விஷயம்

முக்கியமான விஷயம்

இதில் அவர் சொன்ன மிக முக்கியமான விஷயம், தமிழகத்திற்கு நான் மட்டும் வரவில்லை. என்னுடன் மேலும் 6 பேர் வந்து இருக்கிறார்கள். எல்லோரும் தாய்லாந்தை சேர்ந்தவர்கள். அவர்கள் எல்லோரும் ஈரோட்டில் இருக்கிறார்கள் என்று கூறினார். இதையடுத்து ஈரோட்டில் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தீவிரமாக சோதனை செய்யப்பட்டது. இரண்டு நாட்கள் இந்த தீவிர சோதனை நடந்தது.

கடைசியில் கண்டுபிடிப்பு

கடைசியில் கண்டுபிடிப்பு

கடைசியில் ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியில் 6 பேரும் தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் மூன்று பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்கள் மூலம்தான் முதலில் ஈரோட்டில் 10 பேருக்கு கொரோனா பரவியது. அதன்பின் அவர்களை தொடர்பு கொண்ட நபர்கள் மூலம் 20 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. இதுவரை ஈரோட்டில் கொரோனா ஏற்பட தாய்லாந்து க்ளஸ்டர் காரணம்.

டெல்லி மாநாடு

டெல்லி மாநாடு

அதன்பின் டெல்லி மாநாடு காரணமாக வேகமாக கொரோனா பரவியது. ஈரோட்டில் கடந்த ஐந்து நாட்களாக யாருக்கும் கொரோனா இல்லை. நேற்றுதான் 28 பேருக்கு கொரோனா வந்தது. முக்கியமாக டெல்லி மாநாடு காரணமாக அங்கு பெரிய அளவில் கொரோனா ஏற்படவில்லை. எனினும் அங்கு டெல்லி மாநாடு சென்றவர்கள் மருத்துவமனையில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்தனர். இதை எல்லாம் சேர்த்து நேற்று மொத்தம் புதிதாக 28 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.

எத்தனை பேர் மொத்தம்

எத்தனை பேர் மொத்தம்

இது போக ஈரோட்டில் மருத்துவர் ஒருவருக்கும் கொரோனா ஏற்பட்டது. இவர் மூலம் 3 பேருக்கு கொரோனா பரவி உள்ளது. இந்த மருத்துவர் சிகிச்சை பார்த்த நபர்களுக்கும் கொரோனா பரவி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். அதன்படி தாய்லாந்து பயணிகள், டெல்லி கூட்டம் மற்றும் மருத்துவர் மூலம்தான் ஈரோட்டில் மொத்தமாக 53 பேருக்கு கொரோனா ஏற்பட்டு இருக்க வேண்டும் என்கிறார்கள்.

ராயபுரம் முதல் கோடம்பாக்கம் வரை.. சென்னையில் 6 கொரோனா ஹாட்ஸ்பாட்கள்.. மிக கவனமாக இருக்க வேண்டும்!

English summary
Coronavirus: Why Erode got too many patients in single day? - Here is the reason.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X