“இஞ்சி தின்ன குரங்கு”.. ஈரோடு மக்களை திட்டினாரா இயக்குநர் களஞ்சியம்? நாம் தமிழர் பிரச்சாரத்தில் பரபர

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட இயக்குநர் களஞ்சியம், மக்களை இஞ்சி தின்ற குரங்கு என்று திட்டியதாக ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட இயக்குநர் களஞ்சியம், தங்களை கண்டுகொள்ளாமல் சென்ற ஈரோடு கிழக்கு மக்களை இஞ்சி தின்ற குரங்கு மாதிரி செல்கிறார்கள் என்று பேசியதாக வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவேரா, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜனவரி மாதம் 4 ஆம் தேதி உயிரிழந்தார்.

இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியை தேர்தல் ஆணையம் காலியானதாக அறிவித்தது. வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

 திமுக கூட்டணி

திமுக கூட்டணி

இந்த தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவரும் திருமகன் ஈவேராவின் தந்தையுமான ஈவிகேஎஸ் இளங்கோவனை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவித்து உள்ளது. இதை தொடர்ந்து திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் ஈரோடு கிழக்கு தொகுதியில் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுக வேட்பாளர்

அதிமுக வேட்பாளர்

பிரதான எதிர்க்கட்சியான அதிமுக வேட்பாளர்களை அறிவிப்பதில் தாமதம் காட்டிய நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பு கே.எஸ்.தென்னரசுவையும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு செந்தில் முருகனையும் அதிமுக வேட்பாளராக அறிவித்தனர். இதனால் இரட்டை இலை சின்னம் முடங்கும் சூழல் ஏற்பட்ட நிலையில், ஓபிஎஸ் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

நாம் தமிழர் வேட்பாளர்

நாம் தமிழர் வேட்பாளர்

இதையடுத்து அதிகாரப்பூர்வ வேட்பாளராக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டார் தென்னரசு. தேமுதிக வேட்பாளராக ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா ஆகியோர் இந்த தேர்தலில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டார்கள். ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கிய ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் 7 ஆம் தேதி நிறைவடைந்தது.

77 வேட்பாளர்கள்

77 வேட்பாளர்கள்

வேட்புமனு பரிசீலனை நிறைவடைந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் சுயேட்சைகள் உட்பட 77 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து தமிழ்நாடு அமைச்சர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுக பிரச்சாரம்

அதிமுக பிரச்சாரம்

மறுபக்கம் அதிமுக வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர்களும், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதேபோல் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து பிரேமலதா கட்சியின் மூத்த நிர்வாகிகள், நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான் மற்றும் அக்கட்சியின் முக்கிய பேச்சாளர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

நாம் தமிழர் பிரச்சாரம்

நாம் தமிழர் பிரச்சாரம்

அந்த வகையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவுக்கு வாக்களிக்கக் கோரி ஈரோடு கிழக்கு தொகுதி வீதிகளில் திறந்த பிரச்சார வாகனத்தில் நின்றுகொண்டு வாக்கு சேகரித்தார் இயக்குநர் களஞ்சியம். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரச்சாரம் செய்த நாம் தமிழர் கட்சியினரை பொதுமக்கள் கவனிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

சர்ச்சை பேச்சு

இதனால், "கையெடுத்து கும்பிட்டு வாக்கு சேகரித்துக்கொண்டு இருந்த இயக்குநர் களஞ்சியம் ஒரு கட்டத்தில் கையை விரித்து காட்டி, அருகில் இருந்தவரிடம் "எல்லாம் இஞ்சி தின்ன குரங்கு மாதிரி போகுது." என்று சொல்வதை போல் வீடியோவில் உள்ளது. ஏற்கனவே அருந்ததியர் குறித்து சீமான் பேசியதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் இந்த வீடியோவும் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+