ரொம்ப முக்கியம்.. ஸ்டாலின் உத்தரவு.. 11 பேரா? அப்படியே இறங்கிய டீம்.. திரும்பி பார்த்த அதிமுக, பாஜக

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் திமுக தீவிரமாக பணியாற்ற தொடங்கி உள்ளது. இடைத்தேர்தல்தான் என்றாலும் கூட பெரிய அணியையே இறக்கி இங்கே தேர்தல் பணிகளை திமுக செய்ய தொடங்கி உள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நெருங்கி வருகிறது. வரும் பிப்ரவரி 27ம் தேதி இங்கே இடைத்தேர்தல் நடக்க உள்ளது. மார்ச் 3ம் தேதி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தவர் ஈவெரா திருமகன். இவர் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார். உடல்நிலை மோசமான நிலையில் ஈவெரா திருமகன் கடந்த ஜனவரி 4ம் தேதி மரணம் அடைந்ததார்.

இடைத்தேர்தல்

இடைத்தேர்தல்

இதையடுத்து இங்கே இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதியில் திமுக என்ன செய்ய போகிறது என்ற கேள்வி இருந்தது. கடந்த முறை நடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பாக ஈவெரா திருமகன் போட்டியிட்டு வென்றார். நியாயப்படி பார்த்தால் இங்கே காங்கிரஸ்தான் போட்டியிட வேண்டும். அதன்படியே திமுக மீண்டும் இந்த தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கே கொடுத்தது. இதையடுத்து இங்கே யாரை போட்டியிட வைக்க போகிறார்கள் என்ற கேள்வி நிலவியது. முதலில் ஈரோட்டில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் இளைய மகன் சம்பத் போட்டியிட போவதாக செய்திகள் வந்தன. இளங்கோவன் கூட இளைய தலைமுறைக்கு வழிவிட வேண்டும் என்று கூறி இருந்தார்.

சம்பத்

சம்பத்

அதேபோல் சம்பத் கூட இங்கே போட்டியிடுவதற்காக விருப்பமனு வாங்கி இருந்தார். ஆனால் திடீரென இங்கே ஈவிகேஎஸ் இளங்கோவன் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். தேசிய காங்கிரஸ் கட்சியின் முடிவு காரணமாகவும், திமுக கொடுத்த சில சர்வே முடிவுகள் காரணமாகவும் ஈவிகேஎஸ் இளங்கோவன் இங்கே களமிறக்கப்பட்டு இருக்கிறார். காங்கிரஸ் கட்சியில் மக்கள் ராஜன் இந்த தொகுதியில் போட்டியிடுவதற்கு திட்டமிட்டு வந்தார். அவருக்கு சான்ஸ் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான் திடீர் ட்விஸ்ட்டாக ஈவிகேஎஸ் இளங்கோவன் இங்கே போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஈவிகேஎஸ் இளங்கோவன்

இந்த நிலையில்தான் ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் திமுக தீவிரமாக பணியாற்ற தொடங்கி உள்ளது. இடைத்தேர்தல்தான் என்றாலும் கூட பெரிய அணியையே இறக்கி இங்கே தேர்தல் பணிகளை திமுக செய்ய தொடங்கி உள்ளது. இங்கே வேட்பாளர் அறிவிக்கும் முன்பே தேர்தல் பணிகளை திமுக தொடங்கிவிட்டது. தற்போது மிகப்பெரிய டீம் ஒன்றையும் திமுக இங்கே களமிறக்கி உள்ளது. இதற்காக அமைச்சர்கள் அடங்கிய 11 பேர் கொண்ட குழுவையும் திமுக நியமனம் செய்துள்ளது. கே.என். நேரு தலைமையில்தான் இங்கே தேர்தல் பணிகள் நடந்து வருகின்றன.

பணிகள்

பணிகள்

எஸ். முத்துசாமி, எ.வ. வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தா.மோ. அன்பரசன், அர. சக்கரபாணி, மு.பெ.சாமிநாதன், வி. செந்தில்பாலாஜி, ஆவடி சா.மு. நாசர், கயல்விழி செல்வராஜ், ஆகியோரும் இங்கே தேர்தல் பணிகளை செய்ய தொடங்கி உள்ளனர். மொத்தமாக பெரிய அமைச்சர்கள் அணியையே இங்கே திமுக களமிறக்க காரணம் இந்த தேர்தலை அந்த அளவிற்கு திமுக சீரியஸாக கருதுகிறது என்பதுதான். திமுகவின் இந்த வேகம் அதிமுக, பாஜகவை திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்த இடைத்தேர்தல் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்த பின் நடக்கும் முதல் இடைத்தேர்தல். அதனால் இதில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதில் திமுக தீர்க்கமாக இருக்கிறது.

லோக்சபா தேர்தல்

லோக்சபா தேர்தல்

அதேபோல் இந்த தேர்தலில் வெற்றிபெறுவது லோக்சபா தேர்தலிலும் திமுகவிற்கு நல்ல உத்வேகத்தை கொடுக்கும். ஏற்கனவே உடைந்து இருக்கும் அதிமுகவிற்கு இது மேலும் பின்னடைவை கொடுக்கும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் தமிழ்நாடு தங்களை எதிர்க்கட்சி என்று கூறி வரும் பாஜகவிற்கும் உண்மையான களநிலவரம் என்ன என்பதை இது உணர்த்திவிடும். இதை முன்னிட்டு இந்த தேர்தலில் தீவிரமாக களப்பணிகளை செய்ய முதல்வர் ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். இதையடுத்தே 11 பேர் கொண்ட அமைச்சர்கள் படையை திமுகவும் இங்கே களமிறக்கி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+