ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆ.ராசா விவகாரம்:பனாரஸ் இந்து பல்கலை சனாதன தர்மம் நூலை PDF-ல் அனுப்பும் திமுக கார்த்திகேய சிவசேனாபதி

Google Oneindia Tamil News

ஈரோடு: சூத்திரன் யார்? என மனுஸ்மிருதியில் சொல்லப்பட்டதை முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக மூத்த தலைவருமான ஆ.ராசா சுட்டிக்காட்டி பேசியது பெரும் சர்ச்சையானது.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆ.ராசா, ஹிந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன்; சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள் என்கின்ற கேள்வியை உரக்க சொன்னால் தான் அது சநாதனத்தை முறியடிக்கின்ற அடிநாதமாக அமையும் என்பதை விடுதலையும், முரசொலியும், திராவிட முன்னேற்ற கழகமும், திராவிடர் கழகமும் எடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது என பேசி இருந்தார். மனுஸ்மிருதியை மேற்கொள்காட்டி ஆ.ராசா பேசியிருந்தார். ஆனால் தமிழக தாய்மார்களை பிறப்பின் அடிப்படையில் ஆ.ராசா இழிவுபடுத்திவிட்டதாக பொய் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பரபரத்த பிரஸ் மீட்.. ஆ.ராசா பற்றி கேள்வி.. பாதி பேட்டியில் வெளியேறிய மதுரை ஆதீனம் பரபரத்த பிரஸ் மீட்.. ஆ.ராசா பற்றி கேள்வி.. பாதி பேட்டியில் வெளியேறிய மதுரை ஆதீனம்

ஆ.ராசா ஆதரவு

ஆ.ராசா ஆதரவு

இந்நிலையில் ஆ.ராசாவுக்கு ஆதரவாக திமுகவினர் பல்வேறு கட்ட பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக சுற்றுச் சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, பனாரஸ் இந்து பல்கலைக் கழகம் வெளியிட்ட சனாதன தர்மம் நூலின் பிடிஎப் வடிவத்தை வேண்டுவோருக்கு இலவசமாக அனுப்பி வருகிறார். அதில் சூத்திரர்கள் குறித்து இழிவாக சொல்லப்பட்டதை படித்து பார்க்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழக வழிபாட்டு முறைகள்

தமிழக வழிபாட்டு முறைகள்


இது தொடர்பாக கார்த்திகேய சிவசேனாபதி கூறியிருப்பதாவது: குலதெய்வ வழிபாடு நமது பாரம்பரியமிக்க வழிபாட்டு முறை.
முன்னோர் வழிபாடு நம் பாரம்பரியம் மிக்க வழிபாட்டு முறை. கௌமாரம் - முருகப் பெருமான் வழிபாடு, சைவம் - சிவபெருமான் வழிபாடு
"தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!" வைணவம் - பெருமாள் வழிபாடு சௌரம்- சூரியனை முழு முதற் வழிபடுகடவுளாகக் கொள்வது. கணபதியம் - விநாயகர் வழிபாடு "குள்ள குள்ளனே வெள்ளி கொம்பனே" என்று வாதாபியிலிருந்து ஏழாம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்கள் கொண்டுவந்தது, மூலம் விநாயகப்பெருமானை வழிபடுகின்றோம். சக்தி வழிபாடு - அம்மன் வழிபாடு

சனாதன தர்மம் என்பது என்ன?

சனாதன தர்மம் என்பது என்ன?

இப்படி பல்வேறு விதமான தெய்வங்களையும், சாய்பாபா வழிபாடு, சீரடி சாய்பாபாவையும் வழிபடுகின்றோம்.வரைக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை உண்டு . அந்த நம்பிக்கையை மதிக்கவேண்டும், யாருடைய நம்பிக்கையையும் புண்படுத்துவது நோக்கம் கிடையாது .இப்படி பல்வேறு விதமான தெய்வங்களும் வழிபாட்டு முறைகளும் நம்பிக்கையும் இருக்கிறது . ஆனால் இதையெல்லாம் விட்டுவிட்டு சனாதன தர்மம் என்றால் என்ன ? அது வழிபாட்டு முறையா ?? மதமா ? இயக்கமா ? வழிமுறையா ?? இதற்குப் பதில் தெரியாத பலரும், பதில் தெரிந்த சிலரும், பதிலளிக்காமல் இருப்பதே வேடிக்கை.

பனாரஸ் நூல் பிடிஎப் வடிவில்..

பனாரஸ் நூல் பிடிஎப் வடிவில்..

அதற்காகத்தான் சனாதன தர்மம் என்றால் என்ன ? என்ற பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் அவர்கள் வெளியிட்ட புத்தகங்களை PDF வடிவமாக யார் யாருக்கு எல்லாம் தேவையோ, படித்துப் பாருங்கள் என்று அனுப்பி இருக்கின்றேன் . தமிழில் சனாதன தர்மம் புத்தகம் தந்தை பெரியார் நூலகத்தில், சென்னையில் கிடைக்கிறது . அந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு பரவாயில்லை அதில் இருக்கிறதை நான் ஏற்றுக் கொள்கின்றேன், நான் சனாதன தர்மத்தைச் சார்ந்தவன், என்று கூறக்கூடியவர்களுக்கு எந்த பதிலும் விவாதமும் செய்யக்கூடிய அவசியமில்லை. படிக்காமல் ஒன்று புரிந்து கொள்ளாமல், தொடர்ந்து பொய்களையும், புரட்டுகளையும், நம்பிக்கொண்டு இருப்பவர்களைக் கண்டால் பரிதாபம் மட்டுமே மிச்சமாகிறது . இவ்வாறு கார்த்திகேய சிவசேனாபதி எழுதியுள்ளார்.

English summary
DMK Environment Wing Secretary Karthikeya Sivasenapathy sent Sanatana Dharma book to party cadres.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X