ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஈரோட்டில் பெரியாருக்கு 3 என்ன? 300 சிலைகளையே அமைப்போம்.. வலதுசாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி!

Google Oneindia Tamil News

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தந்தை பெரியாருக்கு 3 என்ன 300 சிலைகளையே கூட அமைப்போம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் வலதுசாரி சித்தாந்தவாதிகள் தந்தை பெரியார் சிலையை சேதப்படுத்துவது, காவி வர்ணம் பூசுவது என்பதை தொடர்ந்து செய்து வருகின்றனர். தமிழகத்தில் தந்தை பெரியார் சிலையை அகற்றுவோம் என பேசிய பாஜக தலைவர்கள் தங்களது சமூக வலைதளப் பக்க அட்மின்கள் மீது பழியைப் போட்டு தப்பிய கதைகளும் உண்டு.

கலவர வழக்கு.. பாஜக எம்எல்ஏ ஜடேஜாவை காக்க குஜராத் அரசு முயற்சி! ஓபனாக விமர்சித்த உயர்நீதிமன்ற நீதிபதி கலவர வழக்கு.. பாஜக எம்எல்ஏ ஜடேஜாவை காக்க குஜராத் அரசு முயற்சி! ஓபனாக விமர்சித்த உயர்நீதிமன்ற நீதிபதி

தேர்தல் நிதி

தேர்தல் நிதி

இருந்தபோதும் தமிழகத்தில் ஆளும் திமுக அரசு தந்தை பெரியார்- பேரறிஞர் அண்ணா- கருணாநிதி வழியிலான திராவிட மாடல் அரசு என்பதில் உறுதியாக செயல்பட்டு வருகிறது. இந்த பின்னணியில் ஈரோட்டில் இன்று திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
இன்றைக்கு திருமண வரவேற்பு விழாவில் 5 லட்சம் ரூபாய் நிதி தந்துள்ளார். 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முதல் நிதி தரப்பட்டுள்ளது.

 தொடர் மழை

தொடர் மழை

திமுக ஆட்சிக்கு வந்த புதியதில் கொரோனா எனும் கொடிய நோயை சந்தித்தோம். அதில் இருந்து மீண்ட காலத்தில் 10 நாட்கள் இடைவிடாமல் தொடர் மழையை எதிர்கொண்டோம். மக்களால் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல் அப்போதும் மழை பெய்தது.
அதேபோல் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் மழை பெய்து கொண்டே இருக்கிறது. அது நம்ம ராசி.. என் ராசி மட்டுமல்ல. உங்க ராசியும் சேர்ந்துதான்.

300 பெரியார் சிலைகள்

300 பெரியார் சிலைகள்

சீர்திருத்த திருமணங்கள் பற்றி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார். இது தந்தை பெரியார் பிறந்த மாவட்டம். இந்த மாவட்டத்தில் 3 சிலைகள் என்ன 300 சிலைகளைக் கூட இந்த மாவட்டத்தில் அமைப்போம். ஒருகாலத்தில் சீர்திருத்த திருமணங்களை கேலி செய்தவர்கள் கொச்சைபடுத்தியவர்கள் உண்டு. ஆனால் இன்று சீர்திருத்த திருமணம் நடைபெறவில்லை என்றால்தான் ஆச்சரியம்.

சொல்லாத வாக்குறுதிகள்

சொல்லாத வாக்குறுதிகள்

அண்ணாதான் சீர்திருத்த திருமணத்தை சட்டப்படி செல்லும் என சட்டப்பூர்வமாக்கினார். நமது ஆட்சியில் மழை தொடர்ந்து மக்களுக்கும் விவசாயிகளுக்கும் பயன் கிடைக்கிறது. குடிக்கிற தண்ணீருக்கு பஞ்சம் ஏற்படாத சுபிட்ச நிலையை உருவாக்கி உள்ளோம். தேர்தல் கால வாக்குறுதிகளைவிட சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி இருக்கிறோம். அனைவரும் இந்த ஆட்சிக்கு பக்க பலமாக இருக்க வேண்டும். இவ்வாறு முதவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

English summary
Tamilnadu Chief Minsiter MK Stalin said that DMK will install 300 Periyar Statues in Erode Dist.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X