Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரோட்டில் பெற்றோரை மீறி காதல் திருமணம் செய்த பெண்.. இப்படியுமா? நெஞ்சை உறைய வைத்த கணவன்!

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த பெண்ணை வரதட்சணை கேட்டு கணவர் கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே பூமாண்டகவுண்டனூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் பூரணி (28). பி.இ பட்டதாரியான இவர், பெங்களூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் கல்லூரி படித்துக் கொண்டிருந்த காலத்தில், சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த யுவராஜ் என்பவரின் மகன் மதன்குமார் (29) என்பவரை காதலித்துள்ளார்.

Do you know what happened to the woman who had a love marriage near Erode?

இருவரும் ஒரே ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்றாலும், பூரணியின் காதலை பெற்றோர் ஏற்க மறுத்துவிட்டனர். தங்களது எதிர்ப்பை மீறி மதன்குமாரை கல்யாணம் செய்து கொண்டால் சொத்தில் பங்கு தர மாட்டோம் எனவும் கூறியிருக்கிறார்கள். ஆனால் அதனையும் மீறி, பூரணி கடந்த ஆண்டு பெற்றோர் எதிர்ப்பை மீறி, காதலன் மதன்குமாரை கல்யாணம் செய்திருக்கிறார்.

காதல் திருமணத்திற்குப் பிறகு இருவரும் பெங்களூரில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்துள்ளார்கள். இந்நிலையில் கர்ப்பிணியாக இருந்த பூரணிக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன் கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதனையடுத்து சின்னியம்பாளையத்தில் உள்ள கணவர் வீட்டில் குழந்தையுடன் பூரணி வசித்து வந்துள்ளார். கடந்த அக்டோபர் 10ஆம் தேதி, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தாக கூறப்படுகிறது. அவரை சிசிச்சைக்காக சேர்த்தபோது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பூரணி ஏற்கனவே இறந்து விட்டதாகவும் கூறியுள்ளனர்.இதனையடுத்து அவரின் சடலத்தை பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு, பிரேத பரிசோதனை செய்ய அனுப்பி வைத்து பின்னர் உடலை அடக்கம் செய்ய ஒப்படைத்தனர். உடலும் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், கடந்த மாதம் பூரணியின் பிரேத பரிசோதனை அறிக்கை காவல்துறையினருக்கு வந்தது. அதில் பூரணி கழுத்து நெரிக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து கவுந்தபடி காவல்நிலையத்தில் கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்த வீட்டிற்கு சென்றனர். அப்போது குடும்பத்துடன் மதன்குமார் மாயமாகி இருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து மூவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

போலீசார் தீவிரமாக தேடிய போது, செவ்வாய்கிழமை அன்று பூரணியின் கணவர் மதன்குமார் மற்றும் அவர்களது பெற்றோர் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளது. பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி பூரணி திருமணம் செய்து கொண்டதால் பூரணியிடம் பேசுவதை அவரது பெற்றோர் நிறுத்திவிட்டனர். இந்த பக்கம் திருமனத்திற்குப் பிறகு பலமுறை வரதட்சணை கேட்டு மதன்குமார் மற்றும் அவரது பெற்றோர் பூரணியை கொடுமைபடுத்தி உள்ளார்கள்.

இந்நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் பூரணிக்கு குழந்தை பிறந்த தகவல் அறிந்து அவரது பெற்றோர் மகளையும், பேத்தியையும் பார்க்கச் சென்றுள்ளனர். அப்போது வரதட்சணை கிடைக்காத விரக்தியில் மதன்குமாரும், அவரது குடும்பத்தினரும் பூரணியின் பெற்றோரிடம் சண்டையிட்டு திருப்பி அனுப்பினார்கள். இதனிடையே பூரணியிடம் பலமுறை சொத்தை பிரித்து வாங்கி வருமாறு மதன்குமார் டார்ச்சர் செய்துள்ளார். ஆனால் பூரணி மறுத்துவிட்டார்.

இதனால் ஆத்திரமடந்த மதன், மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, தாய்ப்பால் கொடுத்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்து விட்டதாக நாடகமாடியது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.. இதற்கு அவரது பெற்றோரும் உடந்தையாக இருந்திருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட மதன்குமார் உள்ளிட்ட மூவரையும், போலீசார் கோபியில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த பெண்ணுக்கு நடந்த இந்த கொடுமை ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+