ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ரெய்டு!
ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவகுமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு.
ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ரெய்டு- இடைத்தேர்தல் அதிகாரி!
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி ஆணையரும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிகாரியுமான சிவக்குமார் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென அதிரடி சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரோடு மாநகராட்சி ஆணையராக சிவக்குமார் பணியாற்றி வருகிறார். இதற்கு முன்னர் திருப்பூர் மாநகராட்சி ஆணையர், பல்லவபுரம் நகராட்சி ஆணையராகவும் பணியாற்றினார்.

பல்லவரபும் நகராட்சி ஆணையராக சிவக்குமார் பணிபுரிந்த போது அவர் மீது ஏராளமான ஊழல் முறைகேடு, லஞ்ச புகார்கள் அரசுக்கு சென்றன. இது தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டு நிலுவையில் இருந்து வந்தன. அத்துடன் மேல்நடவடிக்கைக்கும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. பின்னர் பதவி உயர்வு அடிப்படையில் திருப்பூர் மாநகராட்சி ஆணையராக சிவக்குமார் மாற்றப்பட்டார். இதையடுத்து ஈரோடு மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டார்.
அண்மையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. ஈரோடு மாநகராட்சி ஆணையர் என்ற அடிப்படையில் ஈரோடு கிழக்கு தொகுதி அதிகாரியாகவும் செயல்பட்டார் சிவக்குமார்.

இந்நிலையில் பல்லவபுரம் நகராட்சியில் பணியாற்றிய காலத்தில் குவிந்த புகார்களைத் தொடர்ந்து சிவக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளில்தான் இன்று ஈரோட்டில் சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையில் 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழு இந்த சோதனையை நடத்தியது. இது ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications