தம்பி டீ கொடுப்பா! டீ குடிக்கத் தான் வந்திருக்கிறேன்! ஓட்டுக்கேட்டு வரல! எடப்பாடி அடித்த ஜோக்!
டீ கடைக்கு சென்று கேசுவலாக டீ குடித்துக் கொண்டே டிஸ்கஷன் செய்த எடப்பாடி பழனிசாமி.
ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதியில் முகாமிட்டு தேர்தல் பணிகளை கவனித்து வரும் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை கட்சிக்காரர்களுடன் டீ கடைக்கு சென்று டீ குடித்தார்.
அப்போது எடப்பாடி பழனிசாமி இரட்டை இலை சின்னத்துக்கு தான் ஓட்டுக் கேட்டு வந்திருக்கிறார் என நினைத்த டீ கடைகாரரும், டீ மாஸ்டரும் சரிங்க ஓட்டுப்போடுகிறோம் என்ற சைகையுடன் தலை அசைத்திருக்கின்றனர்.
''கொடுப்பா.. தம்பி டீ கொடு''.. டீ குடிக்கத் தான் வந்திருக்கிறேன்,ஓட்டுக்கேட்டு வரல'' என எடப்பாடி பழனிசாமி கூறியது அங்கிருந்தவர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 24 மற்றும் 25ஆம் தேதியும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் 19 மற்றும் 20ஆம் தேடியும் ஈரோட்டில் பிரச்சாரம் செய்யவிருக்கிறார்கள். இதனிடையே எடப்பாடி பழனிசாமியோ சேலத்திலிருந்து தினமும் ஈரோடுக்கு சென்று தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டு வருவதுடன் களப்பணிகளை கவனமாக கண்காணித்து வருகிறார்.

டீ கடையில் எடப்பாடி
நேற்று தொழிலதிபர்களுடனான சந்திப்புக்கு பிறகு சேலம் புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி, இடையே ஒரு டீ குடிக்கலாம் வாங்க என வேட்பாளர் தென்னரசு, செங்கோட்டையன், தமாகா யுவராஜ் ஆகியோருடன் ஒரு டீ கடைக்கு சென்றார். அங்கு அவர் சென்று அமர்ந்த பின்னரும் கைக்கு டீ வரவில்லை. டீ கடைக்காரரும், டீ மாஸ்டரும் எடப்பாடி எதற்கு வந்திருக்கிறார், டீ குடிக்க வந்திருக்கிறாரா, ஓட்டுக்கேட்டு வந்திருக்கிறாரா என புரியாமல் நின்றுக் கொண்டிருந்தனர்.

தம்பி டீ கொடுப்பா
அப்போது எடப்பாடி பழனிசாமி தனக்கே உரிய டோனில், ''கொடுப்பா.. தம்பி டீ கொடு''.. டீ குடிக்கத் தான் வந்திருக்கிறேன்,ஓட்டுக்கேட்டு வரல'' எனக் கூறினார். டீயை வேகமாக குடித்துவிட்டு அங்கிருந்து புறப்பட தயாரான எடப்பாடி பழனிசாமியிடம் ''அண்ணே இன்னும் கொஞ்சம் டீ குடிங்க, கொஞ்சமாக போடச் சொல்லலாம்'' என அங்கிருந்த ரத்தத்தின் ரத்தம் ஒருவர் உருகினார். வயிறு நிரம்பிவிட்டதாக சைகை செய்து காட்டிய எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனிடம் மட்டும் தீவிரமாக டிஸ்கஷன் நடத்தினார்.

வேன் பிரச்சாரம்
சேலத்திலிருந்து எடப்பாடி பழனிசாமி தினமும் ஈரோடு வந்து சென்றாலும் கூட வேன் பிரச்சாரத்தை எப்போது தொடங்குகிறார் என்ற விவரம் இன்னும் வெளியாக வில்லை. 15ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு மாலை நேரங்களில் மட்டும் அவர் தொடர் பிரச்சாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications