26 வது முறையாக 100 அடியை எட்டிய பவானி சாகர் அணை ...விவசாயிகள் மகிழ்ச்சி!!
ஈரோடு: பவானி சாகர் அணை தொடர்ந்து 26 வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கன கழை பெய்து வரும் காரணத்தால் பவானி அணை கிடு கிடுவென நிறைந்துள்ளது.
இந்த அணை மூலம் கரூர், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 47 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதியை அளித்து வருகிறது. கடந்த வாரம் முதல் நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்து வந்த காரணத்தினால், இந்த அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்தது.

இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தின் குடிநீருக்கும் முக்கிய ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 26 வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக அணை முழு கொள்ளளவை எட்டி இருந்தது. இந்த நிலையில் இன்னும் தென்மேற்கு பருவ மழைக்காலம் இருப்பதால், இந்த ஆண்டும் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அணைக்கு தற்போது நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரத்து 453 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக 1000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
நீலகிரி மலை அடிவாரத்தில் மேட்டுப்பாளையத்தில் பில்லூர் அணை அமைந்துள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் 100 அடியாகும். அணையின் நீர்மட்டம் கடந்த வாரம் 95 அடியில் இருந்து 97 அடியாக உயர்ந்தது. இதனால் அணையின் 4 மதகுகள் வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அணையில் இருந்து வினாடிக்கு 22 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கையும் கடந்த வாரம் விடப்பட்டு இருந்தது.
கடந்த ஜூலை மாதம் இந்த அணை தூர்வாரப்பட்டு இருந்தது. 40 -50 சதவீதம் வரை வண்டல்களால் நிரம்பி இருந்தது. இவை நீக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அணை நிரம்பியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications