ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதியில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர். மாலை 5 மணிக்கே 70.58% பேர் வாக்களித்திருந்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா காலமானார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இத்தொகுதியில் இன்று பதிவாகும் வாக்குகள் மார்ச் 2-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸின் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக தென்னரசு, தேமுதிக ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் மேனகா உட்பட 77 பேர் களத்தில் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
Feb 27, 2023, 5:22 pm IST
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் 5 மணி நிலவரப்படி 70.58 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது
Feb 27, 2023, 3:37 pm IST
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மதியம் 3 மணி நிலவரப்படி 59.22% வாக்குகள் பதிவாகியுள்ளன. 2.27 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில் கடந்த 8 மணி நேரத்தில் 1,04,750 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். ஆண்கள் 65,350 பேரும், பெண்கள் 69,400 பேரும் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Feb 27, 2023, 1:39 pm IST
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் மதியம் 1 மணி நிலவரப்படி 44.56 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி உள்ளது. காலை 7 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவில் இதுவரை 1.01 லட்சம் மக்கள் ஓட்டளித்துள்ளனர். அதன்படி ஈரோடு கிழக்கில் 49,740 ஆண் வாக்காளர்கள், 51,749 பெண் வாக்காளர்கள் வாக்கு செலுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Feb 27, 2023, 12:54 pm IST
ஈரோடு பெரியார் வீதியில் மகாஜன பள்ளியில் வாக்காளர் அடையாள அட்டை உள்பட ஓட்டளிக்க கூடிய பிற ஆவணங்கள் ஏதும் இன்றி பூத் சிலிப்பை மட்டும் வைத்து வாக்களிப்பேன் என வாக்காளர் பிடிவாதம் பிடித்ததால் பரபரப்பு. வாக்குச்சாவடி அலுவலர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. பிடிவாதம் பிடிக்கும் வாக்காளர்களுடன் தேர்தல் அலுவலர்கள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் கேட்காத நிலையில் தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் சிறிது நேரம் அங்கு ஓட்டுப்பதிவு பாதிக்கப்பட்டது. பிறகு அவரிடம் போலீசார் தனியாக பேசிய நிலையில் மீண்டும் ஓட்டுப்பதிவு துவங்கியது.
Feb 27, 2023, 12:07 pm IST
ஈரோடு கிழக்கு தொகுதி கருங்கல் பாளையத்தில் வாக்காளர்கள் திடீர் போராட்டம். காமராஜர் பள்ளி வாக்குச்சாவடியில் தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதியில்லை என வாக்காளர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Feb 27, 2023, 11:35 am IST
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 27.89 சதவீதம் ஓட்டுப்பதிவுகள் பதிவாகி உள்ளது. காலை 7 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு 238 வாக்குச்சாவடி மையங்களில் அமைதியாக நடந்து வரும் நிலையில் காலை 11 மணி நிலவரப்படி மொத்தம் 63,469 பேர் வாக்கு செலுத்தி உள்ளனர். இதில் 32 ஆயிரத்து 562 பேர் ஆண் வாக்காளர்களாகவும், 30 ஆயிரத்து 907 பேர் பெண் வாக்காளர்களாவும் உள்ளனர்.
Feb 27, 2023, 11:08 am IST
ஈரோடு வீரப்பன் சத்திரம் 45வது வாக்குச்சாவடி மையத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தில் திடீர் கோளாறு. இதனால் வாக்குப்பதிவு பாதிப்பு.
Feb 27, 2023, 10:50 am IST
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுகவினர் பரபரப்பான புகார். அனைத்து வாக்குச்சாவடிகளில் திமுகவினர் விதிகளை மீறுவதாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை இ-மெயிலில் புகார். ஈரோடு அசோகபுரத்தில் வாக்குச்சாவடி 138, 139 அருகே திமுகவினர் கட்சிக்கொடியுடன் இருப்பதாகவும் பணப்பட்டுவாடா நடப்பதாக புகாரில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்.
Feb 27, 2023, 10:06 am IST
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சிரமப்படும் வாக்காளர்கள். மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒரு ஓட்டுச்சாவடியில் 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் வேட்பாளர்களின் பெயர், சின்னத்தை பார்த்து ஓட்டளிப்பதில் வாக்காளர்கள் சிரமப்படுவதாக தகவல். குறிப்பாக முதியவர்கள் ஓட்டளித்து வெளியே வர கூடுதல் நேரம் ஆவதால் மக்கள் நீண்டவரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது.
Feb 27, 2023, 9:46 am IST
அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்களித்தார்
Feb 27, 2023, 9:34 am IST
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வாக்களித்தார். அதன்பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, ‛‛மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளரான இளங்கோவனுக்கு என் வாக்கினை செலுத்தி இருக்கிறேன். ஈரோடு கிழக்கில் இருக்கும் மக்களின் பெரும்பாலானவர்கள் அதாவது 80 சதவீதம் பேர் கைச்சின்னத்தில் தான் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் கரங்களை வலுப்படுத்தவும், அவரது 20 மாத ஆட்சியின் அடையாளமாக இந்த தேர்தல் வெற்றி அமையும். அதேபோல் ராகுல் காந்தியின் தியாக நடைப்பயணத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த தேர்தல் முடிவு இருக்கும். மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாகவும், வெள்ளோட்டமாகவும் இந்த தேர்தல் முடிவு இருக்கும்’’ என்றார்.
Feb 27, 2023, 9:20 am IST
ஈரோட்டில் காலை 9 மணி நிலவரப்படி 10.10 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகி உள்ளது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கிய நிலையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
Feb 27, 2023, 8:58 am IST
கச்சேரி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்கை செலுத்தினார் இளங்கோவன்
Tamil Nadu | DMK backed Congress candidate from Erode-East, EVKS Elangovan casts his vote in bypoll
"We will win the bypoll with a big margin. The outcome from this election will reflect in the parliamentary elections in 2024. We'll win both elections," he says. pic.twitter.com/AN3nFl5MZt
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்களித்தார் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன்
Feb 27, 2023, 8:48 am IST
ஈரோடு பெரியார் நகர் பகுதியில் அதிமுக, திமுகவினர் இடையே கடும் வாக்குவாதம். காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக திமுகவினரும், தங்கள் கட்சி வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக அதிமுகவினரும் ஒன்றாக வாக்கு சேகரித்த நிலையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது
Feb 27, 2023, 8:47 am IST
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு மையங்களை கண்காணிக்க மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் வாக்குச்சாவடி மையங்கள் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் இருந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
Feb 27, 2023, 8:28 am IST
ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையங்களில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நடக்க இயலாத முதியவர்கள் வீல்சேர்களில் வாக்குப்பதிவு மையங்களுக்குள் அழைத்து வரப்பட்டு வாக்களிக்கின்றனர்.
Feb 27, 2023, 8:13 am IST
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி சம்பத் நகரில் வரிசையில் நின்று மாவட்ட கலெக்டர் கிருஷ்ணன் உன்னி ஓட்டு போட்டார். அதன்பிறகு அவர் கூறுகையில், ‛‛ஈரோடு கிழக்கில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு வருகிறது’’ என்றார்.
Feb 27, 2023, 8:11 am IST
ஈரோடு கிழக்கு தொகுதி சம்பத் நகர் பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடியில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணன் உன்னி வரிசையில் நின்று தனது ஓட்டை பதிவு செய்தார்
Feb 27, 2023, 8:11 am IST
ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்களித்தவர்கள் விரலில் வைக்கப்பட்ட மை அழிவதாக அதிமுக புகார்
Feb 27, 2023, 8:11 am IST
மை அழிவதாக அதிமுக தெரிவித்த புகாருக்கு வாக்காளர்கள் மறுப்பு
Feb 27, 2023, 8:11 am IST
மை அழிந்தால் பொதுமக்கள் தங்களிடம் புகாரளிக்கலாம் என தேர்தல் அதிகாரிகள் தகவல்
Feb 27, 2023, 7:57 am IST
ஈரோடு கிழக்கு அக்ரஹாரம் மகளிர் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குச்சாவடி அலுவலருக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம். வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் தான் வாக்களிக்க முடியும் என வாக்குச்சாவடி அலுவலர் கூறியதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு. தேர்தல் ஆணையம் கூறிய 12 விதமான அடையாள அட்டைகளை அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் கூறியதால் வாக்குவாதம்.
Feb 27, 2023, 7:47 am IST
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
Feb 27, 2023, 7:37 am IST
ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓட்டளித்த பிறகு தேமுதிக வேட்பாளர் ஆனந்த் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இதுபற்றி ஆனந்த், ‛‛தேர்தலில் எனது ஓட்டை பதிவு செய்துள்ளேன். இளைஞர்கள், பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தங்களின் ஓட்டை பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொருவரும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். எந்த வேலை இருந்தாலும் கூட தேர்தலில் ஓட்டளிப்பது என்பது மிக முக்கியம். மக்கள் நல்ல வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை மீட்டு எடுக்கும் வேட்பாளர் யார்? என்பதை யோசித்து மக்கள் வாக்களிக்க வேண்டும்’’ என கோரிக்கை
Feb 27, 2023, 7:31 am IST
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தாமதமாக வாய்ப்பு
Feb 27, 2023, 7:30 am IST
77 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் 4 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ளன
Feb 27, 2023, 7:28 am IST
வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் சின்னங்களை தேடி வாக்களிக்க தாமதமாவதாக தகவல்
Feb 27, 2023, 7:25 am IST
செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்த பிறகே ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்களிக்க அனுமதி
Feb 27, 2023, 7:24 am IST
வாக்காளர்கள் தங்கள் செல்போன்களை ஸ்விட் ஆஃப் செய்த பிறகு அறைக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்
READ MORE
6:30 AM, 27 Feb
ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை வாக்குப் பதிவு நடைபெறும்
6:32 AM, 27 Feb
286 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது
6:33 AM, 27 Feb
வாக்கு சாவடிகளில் 1,206 அலுவலர்கள் தேர்தல் பணிகளீல் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
6:33 AM, 27 Feb
ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 2.27 லட்சம் வாக்காளர்கள்
6:33 AM, 27 Feb
ஒவ்வொரு வாக்கு சாவடியிலும் தேர்தல் பணியில் 4 அலுவலர்கள்
6:33 AM, 27 Feb
ஈரோடு கிழக்கு தொகுதியில் 1430 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்
6:33 AM, 27 Feb
ஈரோடு கிழக்கு தொகுதியில் 32 வாக்கு சாவடிகள் பதற்றமானவை
6:33 AM, 27 Feb
மார்ச் 2-ந் தேதி சித்தோடு ஐஆர்டிடி பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்
6:47 AM, 27 Feb
12 இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு விடிய விடிய சோதனை
6:48 AM, 27 Feb
1,200 வாக்காளர்களுக்கு அதிகமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப் படை பாதுகாப்பு
6:48 AM, 27 Feb
பதற்றமான 32 வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பில் ஈடுபட உள்ளார்கள்
6:48 AM, 27 Feb
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது
6:48 AM, 27 Feb
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் இன்னும் சற்று நேரத்தில் ஓட்டுப்பதிவு துவக்கம். காலை 7 மணிக்கு துவங்க உள்ள நிலையில் பூத் ஏஜென்ட்டுகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நிறைவு
6:50 AM, 27 Feb
மாதிரி வாக்குப்பதிவின் மூலமாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதிக்கப்பட்டன
6:51 AM, 27 Feb
7 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது
6:51 AM, 27 Feb
ஈரோடு கிழக்கு தொகுதியில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது
7:05 AM, 27 Feb
மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பதற்காக நீண்ட வரிசையில் நின்று வருகிறார்கள்
7:05 AM, 27 Feb
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது
7:14 AM, 27 Feb
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா தேர்தலில் ஓட்டளிப்பு
7:16 AM, 27 Feb
ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா தேர்தலில் வாக்களித்தார். அதன்பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, ‛‛தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதனை நாம் தான் செய்ய வேண்டும். பெருமகிழ்ச்சியோடு மக்கள் வந்து வாக்களிக்க வேண்டும். வீதிகளில் இறங்கி போராடாமல் இருக்க வேண்டும் என்றால் இன்று அனைவரும் வாக்களிக்க வர வேண்டும். வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் நன்றாக உள்ளது. எனது வெற்றி வாய்ப்பு நன்றாக இருக்கிறது. மக்கள் ஆர்வத்தை பார்த்து அதனை புரிந்து கொள்ள முடிகிறது’’ என நம்பிக்கை தெரிவித்தார்.
7:20 AM, 27 Feb
ஈரோடு கிழக்கு தொகுதியில் தேமுதிக வேட்பாளர் ஆனந்துக்கும், தேர்தல் நடத்தும் அலுவலருக்கும் இடையே வாக்குவாதம். ஆனந்த் அக்ரஹாரம் மதரஸா பள்ளியில் ஓட்டு செலுத்த வந்த நிலையில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனந்த் தேமுதிக கட்சியின் துண்டு மற்றும் அந்த கட்சியின் கரை வேட்டி கட்டியிருந்தார். இது கட்சியை குறிப்பிடும் என்பதால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர் அங்கிருந்து சென்றார்.
7:24 AM, 27 Feb
வாக்காளர்கள் தங்கள் செல்போன்களை ஸ்விட் ஆஃப் செய்த பிறகு அறைக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்
7:25 AM, 27 Feb
செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்த பிறகே ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்களிக்க அனுமதி
7:28 AM, 27 Feb
வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் சின்னங்களை தேடி வாக்களிக்க தாமதமாவதாக தகவல்
7:30 AM, 27 Feb
77 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் 4 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ளன
7:31 AM, 27 Feb
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தாமதமாக வாய்ப்பு
7:37 AM, 27 Feb
ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓட்டளித்த பிறகு தேமுதிக வேட்பாளர் ஆனந்த் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இதுபற்றி ஆனந்த், ‛‛தேர்தலில் எனது ஓட்டை பதிவு செய்துள்ளேன். இளைஞர்கள், பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தங்களின் ஓட்டை பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொருவரும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். எந்த வேலை இருந்தாலும் கூட தேர்தலில் ஓட்டளிப்பது என்பது மிக முக்கியம். மக்கள் நல்ல வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை மீட்டு எடுக்கும் வேட்பாளர் யார்? என்பதை யோசித்து மக்கள் வாக்களிக்க வேண்டும்’’ என கோரிக்கை
7:47 AM, 27 Feb
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
7:57 AM, 27 Feb
ஈரோடு கிழக்கு அக்ரஹாரம் மகளிர் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குச்சாவடி அலுவலருக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம். வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் தான் வாக்களிக்க முடியும் என வாக்குச்சாவடி அலுவலர் கூறியதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு. தேர்தல் ஆணையம் கூறிய 12 விதமான அடையாள அட்டைகளை அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் கூறியதால் வாக்குவாதம்.
8:11 AM, 27 Feb
மை அழிந்தால் பொதுமக்கள் தங்களிடம் புகாரளிக்கலாம் என தேர்தல் அதிகாரிகள் தகவல்
Erode East By Election (ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு) Polling LIVE News Updates in Tamil: Check the LIVE News Updates on Erode East Assembly Constituency By Election 2023 Polling and Other News Highlights Exclusively in Tamil at Oneindia Tamil.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.