ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நோட்டாவிற்கு இத்தனை வாக்குகளா? வெளியான தகவல்
ஈரோடு : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நோட்டாவிற்கு 0.4 சதவீதம் பேர் வாக்களித்துள்ளார்கள் என்பது தேர்தல் ஆணையத்தின் வெப்சைட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 500க்கும்மேற்பட்டோர் நோட்டாவிற்கு வாக்களித்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27 ம் தேதி நடந்து முடிந்தது. மொத்தம் 74.79 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. தொடக்கம் முதலே காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வந்தார்.
காலை 11 மணி நிலவரப்படி ஈவிகேஎஸ் இளங்கோவன் 20 ஆயிரத்திற்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார் இவரை தொடர்ந்து 2ம் இடத்தில் உள்ள அதிமுக வேட்பாளர் தென்னரசை விட முன்னிலையில் உள்ளார். மேலும் நாம் தமிழர் மற்றும் தேமுதிக கட்சி வேட்பாளர்கள் பின்தங்கி உள்ளனர்.

யாருக்கு எத்தனை
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் 398 தபால் ஓட்டுகள் பதிவாகின. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 250 ஓட்டுகளை பெற்றார். அதிமுகவின் தென்னரசுவுக்கு 104 ஓட்டுகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவுக்கு 10 தபால் ஓட்டுகளும் கிடைத்தது. மாறாக 67 பேர் ஒரு தபால் ஓட்டுகளை கூட பெறவில்லை. மேலும் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் கருணாகரனுக்கு 2 தபால் ஓட்டுகள் கிடைத்த நிலையில் தேமுதிக வேட்பாளர் ஆனந்துக்கு ஒரு தபால் ஓட்டு மட்டுமே பெற்றுள்ளார். மொத்தம் 25 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.

45 ஆயிரம் வித்தியாசம்
முதல் சுற்றில் இருந்து 15 வது சுற்று வரை ஒவ்வொரு சுறறிலுமே ஈவிகேஎஸ் இளங்கோவனே முன்னிலை பெற்று வந்தார். ஈரோடு கிழக்கில் கடைசி சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 110556 வாக்குகள் பெற்று சுமார்66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை தோற்கடித்தார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43891 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 7984 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 1115 வாக்குகளும் பெற்றனர்.

7 வேட்பாளர்கள்
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஐந்தாவது சுற்று முடிவில் 7 வேட்பாளர்கள் தலா ஒரு ஓட்டு மட்டுமே பெற்றுள்ளனர். 73வது வேட்பாளரான ராஜேந்திரன் என்பவர் ஒரு வாக்கு பெறவில்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. 8.1 சதவீதம் வாக்குகள் இதுவரை சுயேட்சைகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத கட்சிகள் பெற்றுள்ளன. 66 சதவீதம் வாக்குகளை காங்கிரஸ் பெற்றிருக்கிறது. அதிமுக 24.3 சதவீதம் வாக்குகளை பெற்றிருக்கிறது. தேமுதிக ஒரு சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது. எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை 77 பேர் போட்டியிட்டுள்ளனர். அதில் கவனம் பெற்றவர்கள் 4 பேட்பாளர்கள் மட்டுமே. அதில் கடைசியில் ஈவிகேஎஸ் இளங்கோவனே வெற்றியை தொட்டுள்ளார்.

காங்கிரஸ் அதிகம்
தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள விவரத்தில் காங்கிரஸ் கட்சி 65.8 சதவீதம் வாக்குகளை வாங்கி உள்ளது. அதற்கு அடுத்தபடியாக அதிமுக 24.6 சதவீதம் வாக்குகளை வாங்கி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்திற்கும் முதல் இடத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம் சதவீத அடிப்படையில் காணப்படுகிறது. வாக்கு சதவீத அடிப்படையில் தேமுதிக 0.88 சதவீம் வாக்குகளை வாங்கி உள்ளது. நாம் தமிழர் கட்சி மாநில கட்சி அந்தஸ்தை இதுவரை பெறவில்லை என்பதால் அந்த கட்சி வாங்கிய வாக்குகள் விகிதம் மற்றவர்கள் லிஸ்டில் உள்ளது. சரியான புள்ளி விவரம் தெரியவில்லை. மற்றவர்கள் என்று 8.2 சதவீதம் ஆக உள்ளது.

எத்தனை சதவீதம்
நோட்டாவிற்கு 555 பேர் வாக்களித்திருந்தனர். ஒட்டுமொத்தமாக 0.45 சதவீதம் பேர் நோட்டாவிற்கு வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. எந்த கட்சிக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பவர்கள் நோட்டாவிற்கு வாக்களிக்கலாம் என்ற முறை உள்ளது. தேர்தல் ஆணையம் இறுதி நிலவரத்தை வெளியிட்ட பின்னரேநோட்டாவிற்கு எத்தனை பேர் வாக்களித்தார்கள் என்பது தெரியவரும்.

இறுதி நிலவரம் என்ன
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கடுமையான சவாலை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட அதிமுக பெரிய சரிவினை சந்தித்துள்ளது. தேமுதிகவும், நாம் தமிழர் கட்சியும் மிகமிக குறைவான வாக்குகளையே பெற்றுள்ளன. இந்த தேமுதிக மற்றும் நாம் தமிழர் கட்சிகளுக்கு டெபாசிட் கிடைக்கவில்லை. அதிமுக டெபாசிட்டை தக்க வைத்துள்ளது.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications