Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரோடு கிழக்கு தொகுதியில் சீமான் பிரசாரத்துக்கு தடை ? மாநகராட்சி கமிஷனரிடம் அருந்ததியர் புகார்!

ஈரோடு கிழக்கு தொகுதியில் சீமான் பிரசாரம் மீது நடவடிக்கை எடுக்க கோரி அருந்ததியர் மக்கள் புகார் கொடுத்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: அருந்ததியர் ஜாதியினரை இழிவாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவகுமாரிடம் அச்சமூக மக்கள் புகார் அளித்துள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னத்தில் மேனகா போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவை ஆதரித்து பேசிய சீமான், ஆந்திராவில் இருந்து மலம் அள்ளுவதற்காக அருந்ததியினரை விஜயநகர பேரரசர்கள் கொண்டு வந்துவிட்டனர் என்ற பொருளில் பேசி இருந்தார். இது அருந்ததியினர் ஜாதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

Erode East By Poll: Election Commission to ban Naam Tamilar Seeman Campaign?

ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சியினர் பிரசாரம் செய்ய முடியாத அளவுக்கு அருந்ததியினர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். அருந்ததியினர் பகுதிக்குள் நுழைய முயன்ற நாம் தமிழர் கட்சியினர் விரட்டியடிக்கப்பட்டனர். அத்துடன் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் சீமானின் கொடும்பாவி எரித்து போராட்டம் நடத்தினர் அருந்ததியினர்.

திண்டுக்கல் மேற்கு மாவட்ட தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் நேற்று பழனி பேருந்து நிலையம் முன்பு சீமானைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் இளம்புலிகள் அமைப்பு மாவட்ட செயலாளர் இரணியன் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தின் போது சீமானை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் சீமானின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டதாக தமிழ்ப்புலிகள் கட்சி, திராவிடர் விடுதலை கழக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநகராட்சி ஆணையாளர் சிவகுமாரிடம் அருந்ததிய சமூகத்தினர் நேற்று மனு கொடுத்தனர். அம்மனுவில், அருந்ததியர் சமூக மக்களாகிய நாங்கள் தோல் பொருட்கள் தயார் செய்து வருகிறோம். கடந்த 13-ந்தேதி ஈரோடு திருநகர் காலனி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எங்களது சமூகத்தை சாதி ரீதியாக இழிவு படுத்தும் வகையில், துப்புரவு பணி செய்வதற்காக ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்டவர்கள் தான் அருந்ததியர்கள் என்று பேசினார். இது ஆதித் தமிழர்களான அருந்ததியர் சமூகத்தை சார்ந்த எங்களுக்கு வேதனையும், அவமானமும், மன உளைச்சலும் ஏற்பட்டு உள்ளது.

Erode East By Poll: Election Commission to ban Naam Tamilar Seeman Campaign?

இந்திய விடுதலை போராட்டத்தில் முதன்மை களப்போராளியாக உயிர் தியாகம் செய்த மாமன்னர் ஒண்டிவீரன், வீரத்தாய் குயிலி, மாவீரன் பொல்லான் உள்ளிட்ட ஆதித்தமிழர்களான அருந்ததியர் சமூக வீரர்களுக்கு மணிமண்டபங்கள் அமைத்து தமிழ்நாடு அரசு போற்றி வருகிறது. தற்போது அருந்ததியர் சமூகத்தை இழிவுபடுத்தி சீமான் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பேசி வருகிறார்.

மேலும் அருந்ததியர் சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் வாக்கு சேகரிக்க செல்வதாக வரும் சீமான் கட்சியினர் சீமான் பேசியதையே அருந்ததியர்கள் துப்புரவு பணிக்காக ஆந்திராவில் இருந்து கொண்டு விடப்பட்டதாக அம்மக்களிடையே வீண் பதற்றத்தையும், சட்டம், ஒழுங்கு சீர்குலைவுக்காக முயற்சியையும் ஏற்படுத்தி வருகின்றனர். ஈரோடு மாநகரில் 35 ஆயிரம் வாக்காளர்களை கொண்ட 100-க்கும் மேற்பட்ட அருந்ததியர் பகுதி மக்களிடையே தொடர்ந்து இவ்வாறு சாதி ரீதியாக வெறுப்பு பிரசாரம் செய்து வருவது மிகப்பெரிய சமூக பதற்றத்தை உருவாக்கும். எனவே சீமான் மீதும் அவருடைய கட்சியினர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர். இந்த மனு மீது விசாரணை நடத்தப்பட்டு சீமானின் பிரசாரத்துக்கு தடை விதிக்கப்படுமா? என்பது விரைவில் தெரியவரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+