ரைட்டு விடுங்க.. ஈரோடு கிழக்கில் புதிய ரெக்கார்டு.. "நோ ஜீரோ.." அப்பாடா.. சுயேச்சைகள் நிம்மதி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட 77 வேட்பாளர்களும் குறைந்தபட்சம் ஒரு வாக்கையாவது பெற்றுள்ளனர். எந்த ஒரு வேட்பாளரும் பூஜ்ஜியம் பெறவில்லை
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 48 சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 77 பேர் போட்டியிட்டனர். இதில் அனைத்து வேட்பாளர்களும் குறைந்தபட்சம் ஒரு வாக்கையாவது பெற்றுள்ளனர். எந்த ஒரு வேட்பாளரும் பூஜ்ஜியம் பெறவில்லை.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27-ந் தேதி நடந்தது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டார்.
அதிமுக வேட்பாளராக கே.எஸ்.தென்னரசுவும், தே.மு.தி.க. வேட்பாளராக எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா நவநீதன் உள்பட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டன.

5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்
தேர்தல் களத்தில் மொத்தம் 77 வேட்பாளர்கள் இருந்ததால் 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 2,27,547- வாக்காளர்கள் இருந்த நிலையில், 1, 70, 192 பேர் வாக்களித்தனர். அதாவது 74.79 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. சித்தோட்டில் உள்ள அரசு இன்ஜினியரிங் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படன.

ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை
இன்று காலை 8 மணிக்கு வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே தபால் வாக்குகளில் தொடங்கி அனைத்து சுற்றுக்களிலும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்தார். ஒவ்வொரு சுற்றுக்களாக செல்ல செல்ல ஆவரது வாக்கு வித்தியாசம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் அதிமுக வேட்பாளர் தென்னரசு டெபாசிட் தக்க வைப்பாரா? என்ற சந்தேகம் கூட மக்களுக்கு ஏற்பட்டது.

நாம் தமிழர் கட்சி
எனினும் அடுத்தடுத்த சுற்றுக்களில் கணிசமான வாக்குகளை பெற்று தொடர்ந்து 2-வது இடத்திலேயே இருந்த அதிமுக டெபாசிட் வாங்கியது. நாம் தமிழர் கட்சி 3- ஆம் இடமும், தேமுதிக 4 ஆம் இடம் பெற்றது. துவக்கத்தில் இருந்தே குறைவான வாக்குகளை பெற்று வந்த தேமுதிக 4 இலக்க எண்ணிக்கையை எட்டுமா என்ற சந்தேகம் கூட ஏற்பட்டது. எனினும், வாக்கு எண்ணிககையின் கடைசி சுற்றுக்கள் நெருங்கும் போது ஆயிரம் வாக்குகளை தேமுதிக கடந்தது.

ஒரு வாக்கினையாவது பெற்ற சுயேட்சைகள்
இந்த தேர்தலை பொறுத்தவரை 77 வாக்களர்கள் களத்தில் இருந்தனர். இதில் பல சுயேட்சை வேட்பாளர்கள் பல சுற்றுக்கள் ஆகியும் ஒரு வாக்கு கூட பெற கடுமையாக போரடினர். ஆனாலும் அடுத்தடுத்த சுற்றுக்களில் சில ஓட்டுக்களை சுயேட்சைகள் பெற்றனர். இன்னும் சொல்லப்போனால் அனைத்து வேட்பாளர்களும் வாக்குகளை பெற்றுள்ளனர். குறைந்தபட்சமாக ராஜேந்திரன், கீர்த்தனா என்ற சுயேட்சை வேட்பாளர்கள் ஒரு வாக்குகளை பெற்றுள்ளனர். சுயேட்சை வேட்பாளர்களில் முத்துபவா என்ற வேட்பாளர் அதிகபட்சமாக 321 வாக்குகள் பெற்றுள்ளார். பிரபல யூடியூபர் தீபன் சக்ரவர்த்தி 203 வாக்குகள் பெற்றுள்ளார். நோட்டாவுக்கு 418 வாக்குகள் கிடைத்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications