Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரோட்டில் தென்னை மரம் ஏறும்போது, மண்வெட்டியை தூக்கிய 3 பேர்! சிவகிரி தோட்டத்தில் போராடி தோற்ற தம்பதி

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே கடந்த 20 தினங்களுக்கு முன்பு வயதான தம்பதியினர் கொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் மாநிலத்தையே அதிர வைத்திருந்தது.. இந்த ஈரோடு இரட்டை கொலையில், குற்றவாளிகள் கைதாகி உள்ளார்கள்.. இவர்களை கைது செய்தது குறித்தும், கொலையாளிகள் யார் என்பது குறித்தும் கோவை மாவட்ட ஐஜி செய்தியாளர்களுக்கு விரிவான பேட்டி ஒன்றை தந்துள்ளார். என்ன நடந்தது?

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு மேகரையான் தோட்டத்தை சேர்ந்தவர் ராமசாமி.. 75 வயதாகிறது.. இவரது மனைவி பாக்கியம்.. 65 வயதாகிறது.. இவர்களுக்கு 2 பிள்ளைகள் இருக்கிறார்கள்.

Erode Sivagiri coconut climbing workers

இரட்டை கொலை - திருப்பூர்

வயதான தம்பதி இருவரும் தனியாக தோட்டத்து வீட்டில் வசித்துக்கொண்டே, விவசாயத்தை கவனித்து கொண்டு வந்தனர்.. கடந்த 1ம் தேதி ராமசாமியையும், பாக்கியமும் வீட்டில் மர்ம நபர்களால் கொடூரமாக அடித்து கொல்லப்பட்டனர்.. பாக்கியம் கழுத்து, காதில் அணிந்திருந்த 11 சவரன் நகை, வீட்டின் பீரோவில் வைத்திருந்த பணம் போன்றவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்..

இந்த இரட்டை கொலையானது, தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதையடுத்து, கொலையாளிகளை பிடிக்க ஈரோடு எஸ்பி சுஜாதா தலைமையில் 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை ஆரம்பமானது..

ஒரே மாதிரியான சம்பவம்

பல்லடம் அருகே சேமலைக்கவுண்டன்பாளையத்தில், தெய்வசிகாமணி (78), அவரது மனைவி அலமேலு (75), அவரது மகன் செந்தில்குமார் (46) ஆகியோரும், கடந்த வருடம் இதுபோலவே, கடந்த நவம்பர் 28ம் தேதி தோட்டத்து வீட்டில் மர்மநபர்களால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர்.. அவர்களது நகை, பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. அத்துடன், சிவகிரி, பல்லடம் இரு கொலைகளும் ஒரே மாதிரியாக நடந்திருப்பதால், இவைகளை நடத்தியதும் ஒரே கும்பலாக இருக்குமோ என்ற சந்தேகம் போலீசாருக்கு கிளம்பியது.

தேங்காய் பறிக்கும் கும்பல்

இந்நிலையில், சிவகிரியில் 3 பேர் மீது சந்தேகம் இருந்ததால், அவர்களை பிடித்து விசாரித்தனர்.. அறச்சலூர் ஆச்சியப்பன் (48), மாதேஸ்வரன் (53), ரமேஷ் (52) என்பதும், இவர்கள் 3 பேருமே தேங்காய் பறிக்கும் மரம் ஏறும் தொழிலாளிகள் என்பதும் தெரியவந்தது. இவர்கள்தான் பாக்கியத்தை கொன்று நகைகளை பறித்தவர்கள் என்பதும் உறுதியானது. சம்பவத்தன்று, ராமசாமி, பாக்கியம் தம்பதி தோட்டத்தில் தென்னை மரம் ஏறுவதற்காக இவர்கள் 3 பேரும் சென்றார்களாம்..

அப்போது தம்பதி இருவரையும் கொலை செய்து, நகைகளை கொள்ளையடிக்க முடிவு செய்துள்ளனர்.. இதற்காக மண்வெட்டியின் கைப்பிடி உருளையால் தம்பதியின் தலையில் தாக்கி கொன்றுவிட்டு, நகை பணத்தை திருடி சென்றதையும் ஒப்புக் கொண்டார்கள். அதுமட்டுமல்லாமல், இந்த 3 பேரின் செல்போன் நம்பர்களும் அதே இடத்தில் பதிவாகியிருந்தது உறுதி செய்யப்பட்டது. விவசாய தோட்டத்தில் தங்கியிருப்பவர்களை டார்கெட் செய்து கொலை செய்து, கொள்ளையடிப்பதுதான் இவர்களது வாடிக்கையாகும்.

12 தனிப்படை - கேமரா

இதுகுறித்து கோவை சரக ஐ.ஜி. செந்தில்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில், "மேகரையான் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியினர் ராமசாமி-பாக்கியம்மா கொலை செய்து 11 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது குறித்து 12 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.. பழமையான குற்றவாளிகள், சிசிடிவி போன்றவை கொண்டு விசாரணையும் நடத்தி வந்தோம்

அரச்சலூர் பகுதியில் ஆச்சியப்பன், ரமேஷ்,மாதேஸ்வரன் ஆகியோர் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.. அவர்களது பைக்குகள், மரக்கட்டை, கிளவுஸ் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.. ராமசாமியின் செல்போனையும் இவர்கள் 3 பேரும் வைத்திருந்தனர்.. அதேபோல, தோட்டத்தில் பதிவாகியிருந்த கால் தடங்கள் அடிப்படையிலும் கொலை குற்றவாளிகளுடன் ஒப்பிட்டு பார்த்தோம்.. இந்த கொலையை செய்வதற்கு 15நாட்கள் முன்பே, 3 பேரும் தோட்டத்து வீட்டை நோட்டமிட்டிருக்கிறார்கள்..

தங்கம், வெள்ளி நகைகள்

கொள்ளையடிக்கப்பட்ட நகையை, சென்னிமலை பகுதியை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் உருக்கி தந்துள்ளார்.. இப்போது அவரையும் கைது செய்து, 85 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளோம்..

இதில் ஆச்சியப்பன் என்பவர் மீது 5 வழக்குகள் உள்ளன.. தேங்காய் உரிப்பது, தோட்டத்தில் வேலை செய்வது போன்ற வேலைகளில் ஈடுபட்டு கொண்டே, சம்பந்தப்பட்ட தோட்ட வீட்டை நோட்டமிடுவார் நாச்சியப்பன்.. அப்படித்தான் கடந்த 28ம் தேதி இரவு 10.30 மணிக்கு கரும்பு காட்டில் இருந்து பதுங்கியும், மின் தடை ஏற்பட்டதை பயன்படுத்தியும், இந்த கொலையை நடத்தியிருக்கிறார்கள்.

10க்கும் மேற்பட்ட கேஸ்கள்

ஆனால், இந்த தம்பதி கொலையில் வெறும் நகை மட்டுமே எடுத்ததாகவும், பணம் எதுவும் எடுக்கவில்லை என்றும் சொல்கிறார்கள்.. இவர்கள் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டால் போதை பொருள் பயன்படுத்த மாட்டார்களாம்.. சிவகிரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு பல்லடம் கொலை வழக்கிலும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு கைதாகி 9 மாதம் சிறையில் இருந்து வெளியே வந்திருக்கிறார்கள்.. 10 க்கும் மேற்பட்ட வழக்குகள், கைதான 3 பேர் மீதும் உள்ளது.. கோவை, ஈரோடு, திருப்பூர் பகுதியில் இவர்கள் கொள்ளையடிப்பது வாடிக்கையாகும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+