ஈரோட்டில் வெள்ளை வவ்வால் சர்ப்ரைஸ்.. சென்னை காசிமேட்டில் குவிந்த சங்கரா, இறால்! தங்கம் விலையில் மீன்
ஈரோடு: மீன்பிடி தடைக்காலம் முடிந்து, மீனவர்கள் ஆழ்கடலுக்கு தற்போதுதான் சென்றுள்ளனர்.. எனவே, இன்றுவரை மீன்களின் விலை உயர்ந்தே காணப்படுகிறது.. சென்னை காசிமேடு, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மீன் விலையை கேட்டு மீன்பிரியர்கள் அதிர்ச்சியடைந்து விட்டனர்.. எதிர்பார்த்த மீன்களும் இல்லாமல் ஏமாற்றமடைந்தனர்.. மீன் விலை எப்போது குறையும்? மீனவர்கள் சொல்வதென்ன?
தமிழகத்தில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு, ஆண்டுதோறும் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15 ம் தேதி முதல் ஜூன் 14 ம் தேதி நள்ளிரவு வரை மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.

மீன்பிடித் தடைக்காலம்
அந்த வகையில் இந்த வருடமும் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டது.. இந்த மீன்பிடி தடை காலத்தில் மீனவர்கள் தங்களது படகுகள், வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இரண்டு மாத தடைக்காலம் நேற்று முன்தினம் நள்ளிரவுடன் முடிவடைந்தது,
இதையொட்டி தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க தயாரானார்கள்.. ஆழ் கடலில் தங்கி மீன்பிடிக்க ஏதுவாக ஐஸ் கட்டிகள், உணவு தயார் செய்ய தேவையான அத்தியாவசியப் பொருட்கள் ஆகியவற்றை விசைப்படகில் வெள்ளிக்கிழமை இரவே ஏற்றிவிட்டார்கள்..
நாகை மீனவர்கள் ஏமாற்றம்
ஆனால், வங்க கடலில் பருவ மாற்றத்தால் பலத்த காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், மறு அறிவிப்பு வரும் வரை அனுமதி டோக்கன் வழங்கப்படாது என மீன்வளத்துறை நேற்றுமுன்தினம் அறிவித்துவிட்டது.. நாகை உள்ளிட்ட மீனவர்கள் ஏமாற்றத்துடன் வீடுகளில் முடங்கினர்.
சென்னை காசிமேட்டை பொறுத்தவரை, சிறு படகுகள் வாயிலாக பிடித்து வரப்பட்ட மீன் வகைகள் மட்டுமே விற்கப்பட்டு வருகின்றன.. அந்தவகையில்,நேற்று ஞாயிற்றுக்கிழமை விடிகாலையில் இருந்தே பொதுமக்கள், மீன் பிரியர்கள், வியாபாரிகள் மீன் வாங்குவதற்காக காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் குவிந்திருந்தனர்.
அதிர்ந்த மீன்பிரியர்கள்
ஆனால், வழக்கம்போல் பெரிய அளவில் மீன்கள் வரத்து இல்லை.. இதன்காரணமாக மீன்களின் விலை டபுள் மடங்கு உயர்ந்து விற்பனையானது. இந்த விலையை கேட்டதுமே மீன் பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.. எனினும் சிலர் விலையை பார்க்காமல் மீன்களை வாங்கி சென்றனர்.
சங்கரா ஒரு கிலோ ரூ.650, கொடுவா ரூ.500, நண்டு ரூ.550, இறால் ரூ.600, கடமா ரூ.450 ரூபாய் சிறிய வகை வஞ்சரம் ரூ.1100 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது.
சென்னை காசிமேடு
சென்னை காசிமேட்டில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து, ஒவ்வொரு படகிலும், 15 நாட்கள் தங்கி மீன்பிடிக்கும் வகையில், 6,500 லிட்டர் டீசல், 170 டன் ஐஸ் பார், 12,000 லிட்டர் தண்ணீர், 15 நாள்களுக்கு தேவையான மளிகை பொருட்களுடன், கிட்டத்தட்ட 7 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து படகுகளை மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.. எப்படியும் பெரிய பெரிய மீன்களை பிடித்து
வருவார்கள் என்று நம்பப்படுகிறது.
இவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றிருப்பதால், கரை திரும்ப 15 நாட்கள் ஆகுமாம்.. எனவே அடுத்த வாரம்தான் பெரிய வகை மீன்கள் அதிக அளவில் வரத்து வரும் என்றும், அப்போது மீன்விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் மீனவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
வெள்ளை வவ்வால்
அதேபோல, ஈரோடு உள்ளிட்ட மீன் மார்க்கெட்களிலும் விலை அதிகமாகவே காணப்பட்டது.. கேரளாவிலிருந்து கடல் மீன், 9 டன் ஈரோடு மார்க்கெட்டிற்கு வந்திருந்தது.. இதில், அதிகபட்சமாக வெள்ளை வவ்வால் கிலோ, 1,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
தேங்காய் பாறை-600, வசந்தி-400, திருக்கை 450, கனவா-600, டுயானா-700, மத்தி-300, ஐயிலை-350, ப்ளூ நண்டு-750, பெரிய இறால்-800, சின்ன இறால்-600, விளாமீன் 600, சங்-கரா-450, கிளி மீன்-600, மயில் மீன் 700, முரல்-400, சால்மோன்-900, வஞ்சிரம் 1,100, கருப்பு வாவல்-900, கடல் கொடுவா 800 என்று விற்பனையானது..
தற்போது கேரளாவில் மீன்பிடி தடைக்காலம் துவங்க உள்ளதாலும், பெரிய மீன்களை பிடிக்க மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்றிருப்பதாலும், வரும் ஞாயிற்றுக்கிழமையன்று மீன்கள் வரத்து அதிகரித்து, விலையும் குறையும் என்று மீன்பிரியர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர்.
-
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications