எடப்பாடியை முதல்வர் ஆக்கியது மன நிறைவு.. ‘பன்னீர்’.. பிளேட்டையே திருப்பிப் போட்ட சசிகலா.. என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

ஈரோடு : கொங்கு மண்டலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள சசிகலா, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கியது குறித்துப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொங்கு மக்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கும் வகையிலேயே இந்தப் பகுதியை சேர்ந்த நிர்வாகியை மாநிலத்தின் முதல்வராக ஆக்கினேன். இயக்கத்தின் நலன் காக்க உண்மையான பங்களிப்பை செய்த மன நிறைவு உள்ளது என சசிகலா பேசியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி குறுக்கு வழியில் முதலமைச்சர் ஆனதாக ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியது மன நிறைவு என சசிகலா பேசியுள்ளது ஓபிஎஸ் டீமுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகில் நின்றபடி, எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கும் வகையில் சசிகலா பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓபிஎஸ் - ஈபிஎஸ் - சசிகலா

ஓபிஎஸ் - ஈபிஎஸ் - சசிகலா

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் அதிகார யுத்தம் நடத்தி வரும் நிலையில் சசிகலா, டிடிவி தினகரனுடன் சேர்ந்து ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸுக்கு நெருக்கடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சசிகலாவோடு, ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ச்சியாகப் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சசிகலாவை ஓபிஎஸ் விரைவில் சந்திப்பார் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் தமிழக முழுவதும் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

சசிகலா டூர்

சசிகலா டூர்

இந்த நிலையில் தான் சேலம், நாமக்கல் ஈரோடு மாவட்டங்களில் சசிகலா சுற்றுப்பயணத்தைத் திட்டமிட்டார். இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவை அடுத்து நாடு முழுவதும் 11ஆம் தேதி என்று தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்பட்டதால் சேலம், ஈரோடு மாவட்ட புரட்சி பயணத்தை ஒரு நாள் தள்ளி வைத்தார் சசிகலா. அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார் சசிகலா.

 சேலம் - ஈரோடு

சேலம் - ஈரோடு

சசிகலா இன்று சேலம் மாவட்டம் அரியானூரில் தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார். அங்கிருந்து சங்ககிரி, பள்ளிபாளையம் பகுதிகளை தொடர்ந்து ஈரோட்டில் தொண்டர்களைச் சந்தித்தார். ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா அருகே அவரது ஆதரவாளர்கள் பூங்கொத்து வழங்கி அவரை வரவேற்றனர். கொங்கு மண்டலத்தில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட சசிகலா ஈரோட்டில் தொண்டர்களிடம் பேசினார்.

 எடப்பாடியை முதல்வர் ஆக்கினேன்

எடப்பாடியை முதல்வர் ஆக்கினேன்

அங்கு பேசிய அவர், "அதிமுகவையும் கொங்கு மக்களையும் பிரிக்க முடியாது. இது இன்று நேற்று ஏற்பட்ட பந்தம் அல்ல. அதிமுகவை எம்ஜிஆர் உருவாக்கிய காலம் முதல் அன்பும் ஆதரவும் அளித்து வருகிறீர்கள். இதற்காக கொங்கு மக்களுக்கு உரிய அங்கீகாரம் அளித்து வருகிறோம். இதனை மனதில் வைத்தே, ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஆட்சியை காப்பாற்றுவதற்கான நெருக்கடி நிலை ஏற்பட்ட போது, இந்தப் பகுதியை சேர்ந்த நிர்வாகியை மாநிலத்தின் முதல்வராக ஆக்கினேன்.

 மன நிறைவா இருக்கு

மன நிறைவா இருக்கு

இதன் மூலம் எந்தவித பிரதிபலனும் பாராமல் இயக்கத்தின் நலன் காக்க உண்மையான பங்களிப்பை செய்த மன நிறைவு உள்ளது. மீண்டும் இயக்கத்தை பேரியக்கமாக கொண்டு வருவேன். நியாயமும் உண்மையும் தோற்காது. நாடாளுமன்ற தேர்தலில் நமது இயக்கம் சிறப்பான வெற்றியை பெற்று அம்மாவின் எண்ணத்தை காப்பாற்றுவோம்.

ஜெயலலிதாவை உடனிருந்து பார்த்தேன்

ஜெயலலிதாவை உடனிருந்து பார்த்தேன்

ஜெயலலிதா என்னுடன் அருகில் இருந்து அனைத்தையும் பார்த்து கொண்டுள்ளார். நட்புக்கு இலக்கணமாய் நல்ல சகோதரிகளாய் இருந்தோம். ஜெயலலிதா கட்சிக்கு பொறுப்பேற்றபோது ஏற்பட்ட சிரமங்களை உடனிருந்து பார்த்தவள் நான். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் அனைவரையும் அரவணைத்து சமமாக நடத்தினார்கள். அதே வழியில் நானும் பயணிக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

ஈபிஎஸ் + சசிகலா ?

ஈபிஎஸ் + சசிகலா ?

ஓபிஎஸ் சசிகலா சந்திப்பு எந்த நேரத்திலும் நடக்கலாம் என்றிருந்த நிலையில் சமீபத்தில் வந்த தீர்ப்பு, ஓபிஎஸ்ஸுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால், சசிகலாவும் பின்வாங்கியதாக கூறப்பட்டது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் ஏரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சசிகலா, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியது பற்றிப் பேசுகையில், பிரதிபலன் பாராமல் இயக்கத்தின் நலன் காக்க உண்மையான பங்களிப்பை செய்த மன நிறைவு உள்ளது எனக் கூறியிருப்பது ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+