ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜக இல்லைனா.. ப்ளஸ்.. மைனஸ் என்ன? சட்டென கூட்டத்தில் கேட்ட எடப்பாடி.. அடித்து தூக்கும் அதிமுக!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் இருக்கும் பல்வேறு சிக்கல்கள் குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை செய்து இருக்கிறார்.

Google Oneindia Tamil News

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக இல்லாமல் இருப்பதாக நமக்கு நல்லதா, கெட்டதா என்று எடப்பாடி பழனிசாமி அதிமுக கட்சி கூட்டத்தில் ஆலோசனை செய்ததாக அதிமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக மிக தீவிரமாக கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. இந்த தேர்தலுக்காக தீவிரமான பணிகளை அவர்கள் செய்ய தொடங்கி உள்ளனர்.

இதையடுத்தே 111 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை நேற்று எடப்பாடி பழனிசாமி தரப்பு நியமனம் செய்தது. செங்குட்டுவன் தலைமையில் மாஜி அமைச்சர்கள் படையே அங்கே களமிறக்கப்பட்டு உள்ளது. வேட்பாளர் அறிவித்ததும் இவர்கள் பிரச்சாரத்தை தொடங்குவார்கள் என்று கூறப்படுகிறது.

பிரதமர் மோடி குறித்த ஆவணப்படம்- தவறு இருந்தால் விளக்கம் கேட்டு உண்மையை சொல்லுங்களேன்..கி.வீரமணி பிரதமர் மோடி குறித்த ஆவணப்படம்- தவறு இருந்தால் விளக்கம் கேட்டு உண்மையை சொல்லுங்களேன்..கி.வீரமணி

ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம்

இந்த நிலையில் மூன்றாவதாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளரை இன்றே அறிவிக்க எடப்பாடி முடிவு செய்துள்ளாராம்.எடப்பாடி பழனிசாமி நேற்று அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார். மொத்தமாக 7 மணி நேரம் பிரேக் எடுத்து பிரேக் எடுத்து எடப்பாடி பழனிசாமி தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டார். விருப்பமனு தாக்கல் செய்த நிர்வாகிகளை பற்றிய பைலை மேஜையில் வைத்து அதை பிரித்துக்கொடுத்து ஆய்வு செய்துள்ளனர். இதையடுத்து இன்றும் எடப்பாடி ஆலோசனை செய்து வருகிறார். விரைவில் அவர் வேட்பாளரை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலையில் இருந்து தீவிரமாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

சின்னம் பற்றி ஆலோசனை

சின்னம் பற்றி ஆலோசனை

கடந்த 7 மணி நேரமாக நடக்கும் இந்த கூட்டத்தில் அதிமுக சின்னம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு உள்ளதாம். இரட்டை இலை நமக்குத்தான். இதற்கான அனைத்து பணிகளையும் செய்து வருகிறோம். சட்ட ரீதியாக போராட உள்ளோம். எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஆதரவு நம்மிடம் உள்ளது. இதை வைத்து எப்படியும் சின்னத்தை மீட்க நடவடிக்கை எடுப்போம். நீங்கள் சின்னம் பற்றி கவலைப்பட வேண்டாம். ஆனால் சின்னம் இல்லாமல் போட்டியிட்டால் களநிலவரம் எப்படி இருக்கும். வாக்குகள் எப்படி சிதறும் என்பதை கண்டுபிடிக்க வேண்டும், என்று எடப்பாடி பழனிசாமி பேசி இருக்கிறாராம். சின்னம் இல்லாமல் போனால் புல்லட் பைக் சின்னத்தில் போட்டியிடலாமா? வேறு சின்னம் மக்களை கவரும் வகையில் தேர்வு செய்யலாமா என்றும் எடப்பாடி ஈரோடு மாவட்ட நிர்வாகிகளிடம் கேட்டுள்ளாராம்.

இஸ்லாமிய வாக்குகள்

இஸ்லாமிய வாக்குகள்

ஈரோடு கிழக்கில் 17 சதவிகிதம்தான் கவுண்டர்கள் இருக்கிறார்கள். 36 சதவிகிதம் செங்குந்த முதலியார்கள் இருக்கிறார்கள். 17 சதவிகிதம் மைனாரிட்டிகள் இருக்கிறார்கள். 6 சதவிகிதம் அருந்ததியர்கள் இருக்கிறார்கள். இதில் கவுண்டர்கள் வாக்குகளை விட மற்றவர்களை சேர்த்தால் அதிக வாக்குகள் வருகிறது. முக்கியமாக செங்குந்த முதலியார்கள்தான் இங்கு தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறார்கள். இதில் பாஜக இல்லாமல் மைனாரிட்டிகள் நமக்கு வருமா? மைனாரிட்டிகள்தான் கடந்த தேர்தலில் நாம் தோல்வி அடைய முக்கிய காரணம். அவர்களின் வாக்குகளை ஈரோடு கிழக்கில் திரும்ப பெறுவது எப்படி என்றும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை செய்துள்ளார்.

பாஜக கூட்டணி இல்லை

பாஜக கூட்டணி இல்லை

அதேபோல் பாஜக கூட்டணி இல்லாமல் இறங்கினால் ஈரோடு கிழக்கில் சாதகமா என்றும் கேட்டு உள்ளனராம் . ஏனென்றால் ஈரோட்டில் ஏற்கனவே பாஜகவிற்கு ஒரு எம்எல்ஏ இருக்கிறார். மொடக்குறிச்சியில் பாஜக ஆச்சர்ய வெற்றிபெற்றது. பாஜக சரஸ்வதியின் வெற்றி பாஜகவிற்கு இங்கே நல்ல ஆதரவு உள்ளதையே காட்டுகிறது. அப்படி இருக்க பாஜக இல்லாமல் போட்டியிடுவது சரியா? அவர்கள் இல்லை என்றால் வாக்குகள் சிதறுமா? என்றும் எடப்பாடி பழனிசாமி விசாரித்து இருக்கிறாராம்.

பெண் அல்லது தென்னரசு

பெண் அல்லது தென்னரசு

இது போக பெண் வேட்பாளர் ஒருவரை நிறுத்தலாமா என்றும் ஆலோசனை செய்து இருக்கிறாராம். அங்கே விருப்பமனு அளித்த 3 முக்கிய பெண் நிர்வாகிகளில் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கலாமா என்று எடப்பாடி ஆலோசனை செய்து இருக்கிறாராம். அந்த பெண் வேட்பாளர் இல்லை என்றால் முன்னாள் எம்எல்ஏ தென்னரசுக்கு வாய்ப்பு கொடுக்கலாமா என்றும் ஆலோசனை செய்து இருக்கிறார்களாம். இன்று இரவிற்குள் எப்படியும் இதில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்கிறார்கள்.

English summary
Is contesting without BJP alliance a Plus or Minus asks Edappadi Palanisamy on Erode East by-election?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X