Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜக ஒரு மிஸ்டு கால் கட்சி.. கொங்கு மண்டலம் முதல்வரின் கோட்டை.. ஈரோட்டில் களமிறங்கிய செந்தில் பாலாஜி

பாஜக ஒரு மிஸ்டு கால் கட்சி என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையல்ல என்றும், அது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோட்டையாகும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அதேபோல் பாஜக ஒரு மிஸ்டு கால் கட்சி என்று விமர்சித்துள்ள செந்தில் பாலாஜி, ஈரோட்டில் பாஜகவுக்கு எத்தனை பூத் கமிட்டி இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் தமிழ்நாடு அரசியலில் சூடுபிடித்துள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அக்கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.

அதேபோல் அதிமுக சார்பாக இரு அணிகளும் ஒன்றிணைந்து போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது. இதுமட்டுமல்லாமல் அமமுக, தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தனித்து களமிறங்கியுள்ளன.

செங்கோட்டையன் பேட்டி

செங்கோட்டையன் பேட்டி

அதிமுக தரப்பில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், தேர்தல் பணிகள் தொடங்கப்படாமல் இருக்கிறது. இருப்பினும் கொங்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு பெரும் ஆதரவு இருப்பதால், இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெறும் என்றும், கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறி இருக்கிறார்.

மிஸ்டு கால் கட்சி

மிஸ்டு கால் கட்சி

இந்த நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், திமுகவில் ஒரு கோடிக்கும் அதிகமான தொண்டர்கள் இருக்கிறார்கள் என்பதை நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறேன். ஆனால் அண்ணாமலை இருக்கும் தமிழ்நாடு பாஜகவில் எவ்வளவு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். பாஜக ஒரு மிஸ்டு கால் கட்சி. ஈரோடு கிழக்கில் பாஜகவுக்கு எவ்வளவு பூத் கமிட்டி இருக்கிறது என்று கேட்டு சொல்லுங்கள். ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள 238 பூத் கமிட்டியில், திமுக தரப்பில் கமிட்டி அமைக்கப்பட்டு பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

மு.க.ஸ்டாலினின் கோட்டை

மு.க.ஸ்டாலினின் கோட்டை

இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பாஜகவை மையப்படுத்தி நடப்பது போல் உருவாக்க வேண்டாம். உள்ளாட்சித் தேர்தலில் எவ்வளவு மாநகராட்சிகளை கைப்பற்றினார்கள், எவ்வளவு வார்டுகளை கைப்பற்றினார்கள் என்பதை கணக்கிட்டு கொள்ளுங்கள். இந்த இடைத்தேர்தலில் இமாலய வாக்கு வித்தியாசத்தில் திமுக கூட்டணி வேட்பாளர் வெற்றிபெறுவார். அதேபோல் கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையல்ல. அது முதலமைச்சரின் கோட்டையாகும்.

திமுக ஆட்சி

திமுக ஆட்சி

இந்த ஒன்றரை ஆண்டுகளில் திமுக கொடுத்த 85 சதவிகித வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் நிச்சயமாக மீதமுள்ள வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார். தொடர்ந்து, மாதாந்திர மின் கணக்கீடு பற்றிய கேள்விக்கு, மாதாந்திர மின் கணக்கீடு முறை சாத்தியமில்லை என்று சொல்லவில்லை. நிச்சயம் விரைவாக அது செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது மின் கணக்கீடு செய்யக்கூடிய பணியாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.

மாதாந்திர மின் கணக்கீடு

மாதாந்திர மின் கணக்கீடு

கிட்டத்தட்ட 50 சதவிகிதம் வரை காலி பணியிடங்களாக இருக்கின்றன. அது நிரப்பப்பட வேண்டும். அதேபோல் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான டெண்டர் பணிகள் நடந்து வருகிறது. அதன் பின்னர் மாதாந்திர மின் கணக்கீடு முறை அமலுக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார். பின்னர், விசைத்தறிகள் இப்பகுதியில் அதிகமாக இருக்கிறது. அதிமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தப்படாதது போல் அக்கட்சியினர் சொல்கிறார்கள்.

அதிமுக ஆட்சி

அதிமுக ஆட்சி

அதிமுக ஆட்சியில் வீடுகளுக்கு மின் கட்டணம் 600 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு 117 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் விசைத்தறிகளுக்கு ஆயிரம் யூனிட் பயன்படுத்துவோருக்கு ரூ.400க்கும் மேல் உயர்த்தப்பட்டது. விசைத்தறியை பொருத்தவரைக்கும் 750 யூனிட் முதல் 1,000 யூனிட் வரை இலவச மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+