ஓவர் டார்ச்சர் செய்த சேவியர்.. கல்லால் அடித்தே கொன்ற மேரி.. அலறி போன அந்தியூர்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஓவர் டார்ச்சர் செய்ததால், கல்லாலேயே கணவனை அடித்து கொன்றுவிட்டார் மேரி.. இது அந்தியூரையே அலற வைத்துள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ளது நகலூர் என்ற பகுதி.. இங்கு வசித்து வந்தவர் பிரான்ஸ் சேவியர் - மதலைமேரி தம்பதி. 3 மகள்கள், ஒரு மகனும் உள்ளனர்.

lockdown crime: wife killed husband near erode

மேரிக்கு 41 வயதாகிறது.. சேவியர் ஒரு கூலி தொழிலாளி.. ஆனால் சரியாக வேலைக்கு போகாமல் இருந்துள்ளார்.. இதில் சேவியருக்கு குடிப்பழக்கமும் இருந்துள்ளது.. அடிக்கடி தண்ணியை போட்டுவிட்டு மேரியுடன் சண்டை தகராறு செய்தபடியே இருந்துள்ளார்.. இதனால் எப்ப பார்த்தாலும் கோபித்து கொண்டு அம்மா வீட்டுக்கு போய்விடுவது மேரியின் வழக்கமாக இருந்திருக்கிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று அம்மா வீட்டில் இருந்துள்ளார் மேரி.. வழக்கம்போல் அங்கேயும் போய் சேவியர் சண்டை போட்டுள்ளார்.. வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி, குடும்பத்தினரையும், பிள்ளைகளையும் தெருவில் எல்லார் முன்பும் அசிங்கமாக திட்டி உள்ளார்... ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாத மேரி, கீழே கிடந்த பெரிய பாறாங்கல்லை எடுத்து சேவியர் தலையில் தூக்கி போட்டார்.

இதில் படுகாயமடைந்த சேவியர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தகவலறிந்து அந்தியூர் போலீசார் விரைந்து வந்தனர்.. சேவியர் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.. அதற்குள் மேரி தலைமறைவாகிவிட்டார்.

ஆனாலும் போலீசார் அவரை தேடிவந்த நிலையில், மேரியே நாகலூர் கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்தார்.. அவரை கைது செய்த போலீசார் விசாரணையும் நடத்தினர். குடித்துவிட்டு வந்து தன்னையும், தன் மகனையும் தினமும் டார்ச்சர் செய்வதாகவும், தண்ணி அடிக்க பணம் தராவிட்டால் ஆபாசமாக பேசுவதாகவும் வாக்குமூலம் தந்தார்.. இப்போது மேரி சிறையில்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+