மழை வேண்டி அமைச்சர் செங்கோட்டையன் வருண யாகம்.. அதிமுக நிர்வாகிகள் பங்கேற்பு!
Recommended Video
ஈரோடு: மழை வேண்டி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வருண யாகம் நடத்தினார். இதில் ஈரோடு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. குடிநீருக்கு கூட மக்கள் குடத்துடன் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
பருவமழையும், கோடை மழையும் போதுமான அளவு பெய்யாததே இதற்கு காரணம். ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்தாலும் அது வெப்பத்தை மட்டுமே தணிக்கிறதே தவிர குடிநீர் பற்றாக்குறையை போக்கவில்லை.

யாகம் நடத்த உத்தரவு
இந்நிலையில் மழை வேண்டி யாகம் நடத்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அதிமுகவினருக்கு நேற்று உத்தரவு பிறப்பித்தனர்.

பச்சைமலை முருகன் கோவிலில்
இதைத்தொடர்ந்து இன்று காலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பச்சைமலை பால முருகன் கோவிலில் அதிமுக சார்பில் சிறப்பு வருண யாகம் நடத்தினார்.

மதுரையில் யாகம்
இதில் ஈரோடு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். இதேபோல் மதுரையில் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் மழை வேண்டி யாகம் நடைபெறுகிறது.

ராஜன் செல்லப்பா தலைமையில்
திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் அதிமுக சார்பில் மழை வேண்டி வருண யாகம் நடைபெறுகிறது. இதில் ராஜன் செல்லப்பாவுடன் மேலுர் எம்எல்ஏ பெரிய புள்ளான் உட்பட 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்றுள்ளனர்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications