4 ஆண்டுகள் முடிஞ்சிருச்சு.. மதுரை எய்ம்ஸ்-க்கு ஒரேயொரு செங்கல் தான்.. உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் மதுரை எய்ம்ஸ் செங்கலுடன் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, பொதுத்தேர்தலை போல், மீண்டும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கப்படாததை விமர்சிக்கும் வகையில், செங்கலுடன் பேசியது வாக்காளர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரம் ஒவ்வொரு நாளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக முக்கிய தலைவர்கள் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு மத்திய அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யாதது குறித்து திமுகவினர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் செங்கலுடன் பிரச்சாரம் செய்வாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மீண்டும் செங்கல்?
ஏனென்றால் சட்டமன்றத் தேர்தலின் போது உதயநிதி ஸ்டாலின் மதுரை எய்ம்ஸ் செங்கலுடன் பிரச்சாரம் செய்தது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டுமான பணிகள் தாமதமாவது குறித்து மக்களிடையே உதயநிதி ஸ்டாலின் செங்கல் காட்டி பேசியது எளிதாக புரிந்துகொள்ளும்படி அமைந்தது. இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் செங்கலுடன் உதயநிதி ஸ்டாலின் வருவாரா என்று எதிர்பார்க்கப்பட்டது.

உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்
இந்த நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்தவெளி வேனில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், அமைச்சரான பின் முதல்முறையாக ஈரோடு மக்களை சந்திக்க வந்திருக்கிறேன். மகன் திருமகன் ஈவெரா விட்டுச் சென்ற பணிகளை தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்வதற்காக வாய்ப்பு கேட்டு வந்துள்ளேன். இன்னும் பெருமையாக சொல்ல வேண்டுமென்றால், பெரியாரின் பேரனுக்கு, கலைஞரின் பேரன் வாக்கு சேகரிக்க வந்துள்ளேன். கடந்த முறையை விட இம்முறை ஈவிகேஎஸ் இளங்கோவனை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ஆளுநருக்கு அதிமுக ஆதரவு
தொடர்ந்து, ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை என்று சொன்னவர் அண்ணா. அதே அண்ணாவின் பெயரை கட்சியில் வைத்துக் கொண்டு, ஆளுநருக்கு அடிமையாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. மக்கள் பிரச்சினைகளுக்காக பிரதமர் மோடியிடம் ஒருநாளும் சென்றதில்லை. அதேபோல் அதிமுகவின் தலைவர்கள் டெல்லியில் உள்ள மோடி மற்றும் அமித் ஷா ஆகியோருக்கு மட்டும் உண்மையாக இருப்பதாகவும் விமர்சித்தார்.

திமுகவின் திட்டங்கள்
பின்னர், திமுக ஆட்சிக்கு வந்த பின் பல்வேறு திட்டங்களை அறிவித்தது. இந்த 2 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக சென்னையில் பன்னாட்டு மருத்துவமனை பணிகள் விரைவாக செய்யப்பட்டு வருகிறது. அதற்கு ஆதாரம் இதுதான். அதேபோல் மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகத்தின் புகைப்படம் இதுதான்.

ஒரேயொரு செங்கல்
அதேபோல் 2019ம் ஆண்டு மதுரை வந்த பிரதமர் மோடி, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் மதுரை எய்ம்ஸ் எழுதப்பட்ட செங்கலை மக்கள் மத்தியில் காட்டிய உதயநிதி ஸ்டாலின், இதுதான் அதிமுக மற்றும் பாஜக இணைந்து மதுரையில் கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனை. இருந்தது ஒரே ஒரு செங்கல் தான் என்று தெரிவித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications