என் உயிர் இருக்கும் வரை உழைப்பேன்..புதிய புகழ் தேவையில்லை..முதல்வர் ஸ்டாலின் உருக்கம்
ஈரோடு: என் உயிர் இருக்கும் வரை உழைத்து கொண்டேதான் இருப்பேன், புதிய புகழ் எனக்கு தேவையில்லை இருக்கும் புகழே போதும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். ஈரோட்டில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
பெருந்துறையில் ரூ.183.70 கோடியில் 1,761 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். விழாவில் ரூ.2261.57 கோடியில் நிறைவுற்ற 135 திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பெருந்துறை என்பது வரலாற்று பெருமை கொண்ட ஊர், இதன் அருகே தமிழ்ச்சங்கம் இருந்ததாக செப்பேடு சொல்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக ஈரோடு மாவட்டத்திற்கு நேற்று வந்தார். கோபி அருகே கள்ளிப்பட்டியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்த மு.க.ஸ்டாலின் அங்கிருந்து ஈரோடு வந்தார். அப்போது பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முதல்வர் ஸ்டாலின்
இன்று காலை 10.30 மணிக்கு பெருந்துறை அருகே நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ரூ.261.57 கோடி மதிப்பில் முடிவுற்ற 135 திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து அவர் ரூ.183.70 கோடி மதிப்பீட்டில் 1,761 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் பேசினார்.

திராவிட மாடல் ஆட்சி
அப்போது அவர், இந்தியாவிலேயே சிறந்த கல்வி நிறுவனங்கள் தமிழகத்தில்தான் உள்ளன. பெண் தொழில் முனைவோர் தமிழகத்தில் தான் அதிகம்.பல்வேறு மாநிலங்கள் தமிழக திட்டங்களை பின்பற்றி வருகின்றன. இந்தியாவுக்கே வழிகாட்டியாக திராவிட மாடல் ஆட்சி உள்ளது.

திராவிட மாடல் ஆட்சி
அப்போது அவர், இந்தியாவிலேயே சிறந்த கல்வி நிறுவனங்கள் தமிழகத்தில்தான் உள்ளன. பெண் தொழில் முனைவோர் தமிழகத்தில் தான் அதிகம்.பல்வேறு மாநிலங்கள் தமிழக திட்டங்களை பின்பற்றி வருகின்றன. இந்தியாவுக்கே வழிகாட்டியாக திராவிட மாடல் ஆட்சி உள்ளது.

வளர்ச்சி என்பது என்ன?
அதிமுக ஆட்சியில் கைவிடப்பட்ட பல்வேறு திட்டங்களை மீண்டும் செயல்படுத்துகிறோம். பாதாள சாக்கடைத் திட்டம் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. யாரோ ஒருசில தொழிலதிபர்கள் மட்டும் வளர்வது அல்ல வளர்ச்சி, அனைவரும் வளர்வதுதான் வளர்ச்சி. நாட்டிலேயே தனிநபர் வருமானம் தமிழ்நாட்டில் தான் அதிகம்.

உயிர் உள்ளவரை உழைப்பேன்
முதல்வராக மட்டுமல்ல உங்களில் ஒருவனாக இருந்து செயல்பட்டு வருகிறேன். என் உயிர் இருக்கும் வரை உழைத்து கொண்டேதான் இருப்பேன், புதிய புகழ் எனக்கு தேவையில்லை இருக்கும் புகழே போதும் என்று கூறினார். மக்களை காக்கக்கூடிய அரசாக மட்டுமில்லாமல் மண்ணையும் காக்கக் கூடிய அரசாக தமிழ்நாடு அரசு உள்ளது. நெல் உற்பத்தியில் தமிழ்நாடு புதிய சாதனை படைத்துள்ளது. அனைத்து மக்களும் பயனடையும் வகையில் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications