வெளியே வராத ஓபிஎஸ்.. எட்டிக்கூட பார்க்கலையாமே.. "அந்த" திட்டத்தையும் கைவிடுகிறாராம்.. போச்சா?
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக தரப்பு தீவிரமாக பிரச்சாரம் செய்து வரும் நிலையில் ஓ பன்னீர்செல்வம் வெளியே வராமல் வீட்டிற்கு உள்ளேயே முடங்கி உள்ளார். இரட்டை இலைக்காக பிரச்சாரம் செய்வேன் என்று கூறிய ஓ பன்னீர்செல்வம், பிரச்சாரம் செய்யும் மனநிலையில் இல்லை என்று கூறப்படுகிறது.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் அரசியல் ரீதியாக ஓ பன்னீர்செல்வத்திற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. தொட்டதெல்லாம் தோல்வி என்று சொல்லும் அளவிற்கு மிகப்பெரிய சரிவை ஓ பன்னீர்செல்வம் சந்தித்து இருக்கிறார்.
அவரின் அரசியல் வாழ்க்கையில் அடுத்து என்ன? பெரும் சரிவை சந்தித்து இருக்கும் அவர் எப்படி மீண்டு வர போகிறார் என்று கேட்கும் அளவிற்கு நிலைமை மோசமாகி உள்ளது.

எடப்பாடி எழுச்சி
இந்த இடைத்தேர்தல் மூலம் எடப்பாடி பழனிசாமியை தன் பக்கம் இழுக்கலாம், சின்னம் முடங்குவதாக பிரஷர் கொடுத்து எடப்பாடியை தனது வழிக்கு கொண்டு வரலாம் என்று நினைத்தார். முக்கியமாக அதிமுகவிற்குள் மீண்டும் என்ட்ரி கொடுக்க இந்த இடைத்தேர்தல் உதவும் என்று ஓ பன்னீர்செல்வம் நினைத்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அது எதற்கும் அஞ்சுவதாக இல்லை. தொடக்கத்தில் இருந்தே அவர் சின்னம் முடங்குவதை பற்றி எந்த கவலையும் அடையவில்லை. சின்னம் போனால் போகட்டும்.. நாம் நமது வேட்பாளரை நிறுத்துவோம் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருந்தார். பாஜக சார்பாக போய் பேசியும் கூட எடப்பாடி பழனிசாமி தனது வேட்பாளரை பின்வாங்குவதில் விருப்பம் காட்டவே இல்லை. கே. எஸ் தென்னரசுவை வேட்பாளராக அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கினார்.

சரிவு 1
இதில் இருந்துதான் ஓ பன்னீர்செல்வத்தின் சரிவு அடுத்தடுத்து தொடங்கியது. அதன்படி உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும், அதை பொதுக்குழு உறுப்பினர்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது கேட்க கொஞ்சம் ஓ பன்னீர்செல்வத்திற்கு சாதகமாக இருந்தாலும், எடப்பாடிக்குதான் மறைமுகமாக இந்த தீர்ப்பு சாதகமாக அமைந்து இருந்தது. இந்த பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் இடம்பெறலாம். வேட்புமனுவில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கையெழுத்து போடட்டும். இந்த உத்தரவு இடைத்தேர்தலுக்காக மட்டுமே, என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுக்குழுவை உடனே கூட்ட முடியாத பட்சத்தில் கடிதம் மூலம் பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆலோசனையை பெற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு இடைக்கால உத்தரவு போட்டது. அதன்படியே எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வேட்பாளர் தென்னரசு பொது வேட்பாளர் ஆனார். அதோடு அவருக்கு சின்னமும் கிடைத்தது

சரிவு 2
இதையடுத்து ஓ பன்னீர்செல்வம் தனது தரப்பு வேட்பாளர் செந்தில் போட்டியில் இருந்து விலகுவார் என்று அறிவித்தார். இதனால் ஈரோடு கிழக்கு ரேஸில் இருந்தே ஓபிஎஸ் டீம் வெளியேறியது. இதையடுத்து எடப்பாடி தரப்பு வேட்பாளரை ஆதரிப்பதாக அண்ணாமலை கூறினார். அண்ணாமலை ஒரு படி மேலே போய் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளர் என்று கூறி அறிக்கை வெளியிட்டார். ஓ பன்னீர்செல்வத்தை அதில் வெறும் அண்ணன் என்று குறிப்பிட்டு இருந்தார். தன்னை வெறும் அண்ணன் என்று பாஜக அழைத்ததால் ஓ பன்னீர்செல்வம் கடும் மன வருத்தத்தில் இருக்கிறாராம். இதையும் குறிப்பிட்டு அவர் நேற்று வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

பிரச்சாரம்
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக தரப்பு தீவிரமாக பிரச்சாரம் செய்து வரும் நிலையில் ஓ பன்னீர்செல்வம் வெளியே வராமல் வீட்டிற்கு உள்ளேயே முடங்கி உள்ளார். இரட்டை இலைக்காக பிரச்சாரம் செய்வேன் என்று கூறிய ஓ பன்னீர்செல்வம், பிரச்சாரம் செய்யும் மனநிலையில் இல்லை என்று கூறப்படுகிறது. அதாவது நான் தென்னரசுவிற்கு பிரச்சாரம் செய்ய மாட்டேன். ஆனால் இரட்டை இலைக்கு பிரச்சாரம் செய்வேன் என்று ஓ பன்னீர்செல்வம் கூறி இருந்தார். தான் இன்னும் அதிமுகதான் என்பதை நிரூபிப்பதற்காக ஓ பன்னீர்செல்வம் இந்த திட்டத்தை போட்டதாக கூறப்பட்டது.

தொண்டர்கள்
பாருங்க.. அவருக்கு சின்னம் கிடைக்கவில்லை என்றாலும் இரட்டை இலைக்காக பிரச்சாரம் செய்கிறார் என்ற நல்ல பெயரை தொண்டர்களிடம் பெற ஓ பன்னீர்செல்வம் இந்த பிரச்சார திட்டத்தில் இறங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது தனக்கு பெரிய ஆதரவு இல்லை என்பதாலும், ஈரோடு கிழக்கில் தன்னை வரவேற்க நிர்வாகிகள் தயாராக இல்லை என்பதாலும் ஓ பன்னீர்செல்வம் பிரச்சாரத்தில் இறங்க மாட்டார் என்று கூறப்படுகிறது. கொங்கு மாஜிக்கள் எல்லோரும் எடப்பாடி பக்கம் இருப்பதால் பிரச்சாரம் செய்யும் திட்டத்தை ஓ பன்னீர்செல்வம் கைவிடும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
-
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு -
சென்னை RK நகரில் அதிமுக வேட்பாளருக்கு.. அஜித் ரசிகர்கள் கொடுத்த ஷாக்! இது நல்லா இருக்கே! -
விந்தியா பேசும்போதே குறுக்கே நபர்.. மைக் ரிப்பேர்.. திமுகவையும் திட்டணும்.. கடலூரில் செம டென்ஷன் -
மதுரை வடக்கு தொகுதி.. தளபதிக்கு குடைச்சல் கொடுக்கும் சரவணன்.. தவெக பிரிக்கப் போகும் வாக்குகள்! -
"கவுண்டர்" தான் ஆளப்போகிறார்.. எடப்பாடியின் ஜாதியை சொல்லி வாக்கு கேட்ட திண்டுக்கல் சீனிவாசன்! சர்ச்சை -
எடப்பாடி பழனிசாமிக்கு 'செக்' வைக்கும் விஜய்! களமிறங்கும் ரகசிய வேட்பாளர்.. அதிர்ச்சியில் அதிமுக -
"தமிழகத்தில் டெல்லி மாடல்.." அதிமுக பெரும்பான்மை பெற்றாலும் என்டிஏ ஆட்சிதான்.. ராம்தாஸ் அத்வாலே பரபர -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம்












Click it and Unblock the Notifications