கிடு கிடுவென உயரும் வெங்காய விலை.. ஆடிப்போன மக்கள்! வியாபாரிகள் சொல்வது என்ன?
ஈரோடு: தமிழ்நாடு முழுவதும் பரவலாக கடந்த சில நாட்களாக வெங்காயம் விலை அதிகரித்து வருகிறது. ஈரோட்டிலும் மொத்த சந்தையில் வெங்காயத்தின் விலை வேகமாக உயர்ந்திருக்கிறது.
கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு வெங்காய வரத்து குறைந்திருந்தது. குறிப்பாக சென்னை கோயம்பேடு சந்தையில் வெங்காயம் கிலோ 60-70 வரையும் வெளி கடைகளில் கிலோ ரூ.80 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. இதே நிலைமைதான் தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக ஈரோடு மாவட்டத்தின் நேதாஜி தினசரி காய்கறி மற்றும் பழ சந்தைக்கு வரும் வெங்காயம் கணிசமாக குறைந்திருக்கிறது. இதன் காரணமாக முதல் தரம் வெங்காயம் கிலோ ரூ.70க்கும், இரண்டாம் தர வெங்காயம் ரூ.50க்கும் விற்பனையாகிறது.

வெங்காயத்தை பொறுத்த அளவில் மகாராஷ்டிர மற்றும் மத்தியப் பிரதேசத்தைதான் நம்பிதான் தமிழ்நாடு இருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்ல மற்ற மாநிலங்களும் இதனை நம்பிதான் இருக்கின்றன. நாட்டில் உற்பத்தியாகும் மொத்த வெங்காயத்தில் 30.41 சதவீதம் மகாராஷ்டிர மாநிலத்தில் விளைகிறது. அதற்கு அடுத்தபடியாக கர்நாடகா 15.51 சதவீதம், மத்திய பிரதேசம் 13.66 சதவீதம் விளைவிக்கிறது. தமிழ்நாட்டில் வெறும் 1.65% விளைச்சல்தான் இருக்கிறது. மகாராஷ்டிராவில் வழக்கமாக தென்மேற்கு பருவமழையை நம்பிதான் விவசாயிகள் வெங்காயத்தை விளைவிப்பார்கள்.
ஆனால் இந்த முறை மழை ஏமாற்றமளித்ததால் விவசாயிகள் வெங்காயத்தை பயிர் செய்யவில்லை. எனவே அக்டோபர் மாதத்தில் நடைபெறும் வழக்கமான அறுவடை நடைபெறவில்லை. இதனால்தான் தமிழகத்திற்கு தேவையான வெங்காயம் கிடைக்கவில்லை. ஈரோடு மார்கெட்டில் இது குறித்து வியாபாரிகள் கூறுகையில்,
"மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசத்தில் கடும் வெள்ளம் ஒரு பக்கமும், போதிய மழை இல்லாதது மறுபுறமும் வெங்காய விளைச்சலை பாதித்திருக்கிறது. எனவே போதுமான வரத்து இல்லை. இந்த மாத தொடக்கத்தில் கிலோ வெங்காயம் ரூ.30க்கு விற்பனையானது. மூன்று வாரமும் இதே நிலை நீடித்தது. ஆனால் கடைசி வாரத்தில் விலை கிடுகிடுவென உயர தொடங்கிவிட்டது. இப்படியே போனால் கிலோ வெங்காயம் ரூ.100க்கு விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரத்து குறைவு ஒரு பக்கம் இருந்தாலும், பண்டிகை காலம் நெருங்குகிறது. தீபாவளி காலத்தில் வெங்காயத்தின் தேவை அதிகமாக இருக்கும். எனவே வெங்காயம் உரிக்காமலேயே கண்ணீர் வரவைக்கும் என்பதில் சந்தேகம் இருக்காது. அதேபோல சின்ன வெங்காயம் கிலோ ரூ.90-130 வரை விற்பனை செய்யப்படுகிறது" என்று கூறியுள்ளனர்.
-
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
வாடகை வீட்டில்.. பழுதுபார்ப்பு செலவு யாருடைய பொறுப்பு? தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம்! -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
கேள்வி கேட்டா கரண்ட் வருமா? வாய் விட்ட மகேந்திரன்! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! இப்போ மன்னிப்பு வீடியோ -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
அடி வெளுக்கப்போகும் கனமழை! 7 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications