முதல்வன் படம் பார்த்தீங்கல்ல.. அர்ஜுனை போல் என்னையும் ஒருநாள் முதல்வராக்குங்களேன் ப்ளீஸ்.. சீமான்
என்னை ஒருநாள் முதல்வராக்குங்களேன் ப்ளீஸ்- பிரச்சாரத்தில் சீமான் கோரிக்கை
ஈரோடு: என்னை ஒருநாள் முதலமைச்சராக்குங்க. ப்ளீஸ் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நகைச்சுவையாக கோரிக்கை விடுத்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது. அதிமுக சார்பில் கே.எஸ். தென்னரசுவும், திமுக கூட்டணி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவனும், நாம் தமிழர் சார்பில் மேனகா நவநீதனும், தேமுதிக சார்பில் ஆனந்தும் போட்டியிடுகிறார்கள்.
தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ளதால் பரப்புரை சூடு பிடித்துள்ளது. நாம் தமிழர் கட்சியின் சீமான், மேனகா நவநீதனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டிருந்தார்.

நாம் தமிழர் கட்சி
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில் இயக்குநர் ஷங்கரின் முதல்வன் படத்தில் அர்ஜுன் நடித்திருந்தாரே அது போல் எனக்கு ஒருநாள் முதல்வர் பதவி கொடுங்களேன். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பதவி கொடுங்கள்.

ஒருநாள் முதல்வர்
ஒரே ஒரு நாள் கொடுங்களேன் ப்ளீஸ்! இல்லல்ல ஒரு சாம்பிள் பிட். அம்பானி சொன்னாரே ஜியோ சிம்மிற்கு 6 மாதம் ப்ரீ மாதிரி எனக்கு ஒரு நாள் கொடுங்கள். எத்தனை காலத்திற்குத்தான் இந்த ஆட்சியாளர்கள் ஏமாற்றுவார்கள், நம் மக்களும் மறந்துவிடுகிறார்கள். இது குறித்து ஆட்சியாளர்களிடம் கேட்பதில்லை. அது நினைவில் இருப்பது இல்லை.

மக்கள் இயல்பு
மறந்துவிடுவது மக்களின் இயல்பு. அதை நினைவுப்படுத்திக் கொண்டே இருப்பது போராளிகளின் கடமை. என் மக்களுக்கு மீள முடியாத அடர்த்தியான வறுமை. வறுமைக்கு ஒரு குழந்தை அது அறியாமை, அறியாமைக்கும் வறுமைக்கும் ஒரு குழந்தை அதற்கு பெயர் மறதி. இது மூன்று இந்த தலைவர்களுக்கு முதலீடாகி போயிருக்கிறது அதுதான் பிரச்சினை.

ரூ 1000 கொடுத்தார்களா
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என சொன்னார்கள், குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 என சொன்னார்கள். இதுகுறித்து யாராவது கேட்டால் அதற்கு நிதி இல்லை என்கிறார்கள். இதுக்கு காசில்லை என்றால் வோட்டுக்கு மட்டும் எங்கிருந்து வருகிறது காசு? மாட்டை அடைத்து வைத்திருப்பது போல் வாக்காளர்களை அடைத்து வைத்திருக்கிறார்கள். அங்கு கறி சோறு போட்டு காசு கொடுக்கிறார்கள்.

என்னா ஒரு ஆட்சி முறை
இந்த பக்கம் திரும்பினால் அறுப்பதற்கு ஆட்டை ஏற்றிக் கொண்டு செல்கிறார்கள். அது போல் அந்த பக்கம் திரும்பினால் அதே லாரியில் நம் மக்களை ஏற்றிச் செல்கிறார்கள். என்னா ஒரு ஆட்சி முறை? சீமான் முதல்வரானால் நல்லா இருக்கும் என பேசுகிறார்கள். நான் வரதுக்கு தயார்தான், நீங்கள்தானே ஓட்டு போடணும்! ஒரு தடவைதான் சீமானுக்கு ஓட்டு போடுங்களேன். புதுசாவா இரட்டை இலைக்கு போட போறீங்க, புதுசாவா உதயசூரியனுக்கு போட போறீங்க. அவங்க வீட்ல விடியுது, நீங்கள்லாம் இருட்டில்தானே இருக்கிறீங்க.

5000 ஏக்கரை பறிப்பார்கள்
அதிகாரம் என்பது அரக்கக் குணமும் இரக்கமற்றது. அதிகாரத்திற்கு கண்கள் உண்டு, கண்ணீரே கிடையாது. அதற்கு காதுகளே இல்லை. அகன்ற வாயும், நீள கால்களும்தான் இருக்கிறது. மக்களுக்கு அநீதி கிடைக்கும். பரந்தூரில் விமான நிலையம் கட்டுவதற்காக 5000 ஏக்கரை பறிக்கும். போராடுகிற மக்களை நீண்ட கால்களை வைத்து மிதிக்கும். அவற்றை நியாயப்படுத்தி இந்த அகன்ற வாயை வைத்து பேசும். மக்கள் கதறுவார்கள், காயமடைவார்கள், கண்ணீர் விடுவார்கள். அதை அந்த கண்கள் பார்க்கும், ஆனால் கண்ணீர் வடிக்காது. அப்படிப்பட்ட அதிகாரத்தை தகர்க்காமல் ஒழிக்காமல் நல்லாட்சி தர முடியாது. இவ்வாறு சீமான் ஆக்ரோஷமாக பேசியிருந்தார்.
-
என்னது வாக்காளர்கள் பணம் வாங்கணுமா.. உளறி கொட்டிய விஜய்.. சிபிஐ வீரபாண்டியன் புகாரால் தவெக ஷாக் -
மருமகள் சவுமியாவுக்கு எதிராக வேட்பாளரை அறிவித்த ராமதாஸ்.. வெளியானது 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் -
ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. கேரளாவில் கிறிஸ்துமஸ் - ஓணத்தை கையிலெடுத்த பாஜக.. தேர்தல் வாக்குறுதி -
பாஜகவில் இணைந்தார் முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் போட்டியிட வாய்ப்பு -
காட்டுமன்னார்கோவிலுக்கு கிளம்பும் திருமாவளவன்.. டெல்லி துறப்பு முடிவின் பின்னணி இதுதானா? விசிக பலே -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
யாருக்கு ஓட்டு போட போறீங்க! வாரிசு அரசியலுக்கா? சீமான் சட்டசபைக்கு போகனும்! சீனுக்குள் வந்த சேரன்! -
Thirumavalavan: சிதம்பரம் இடைத்தேர்தல் செலவை திருமாவளவன் ஏற்பாரா? சீமான் கேள்வி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் வெளியானது.. சின்னதுரைக்கு மீண்டும் வாய்ப்பு! -
ஆதவ் உட்பட ஒரே குடும்பத்திலிருந்து களமிறங்கும் 3 வேட்பாளர்கள்.. கட்சி வேறு வேறு.. சுவாரஸ்யம்! -
வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்.. அன்புமணி அறிவித்த வேட்பாளர்களை எதிர்த்து போட்டி!












Click it and Unblock the Notifications