அதிமுக தோல்விக்கு சில துரோகிகள் தான் காரணம்.. அடையாளம் காட்டப்பட்ட வேண்டும்.. விடாத செங்கோட்டையன்
ஈரோடு: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன் இடையே சலசலப்பு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், இன்று ஈரோட்டில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த முறை தோல்வியை தழுவ சில துரோகிகளே காரணம் என்றும் அவர்கள் அடையாளம் காணப்பட வேண்டும் என்று பேசியுள்ளார்.
அதிமுகவில் உட்கசி மோதல் ஏற்பட்டுள்ளது. அத்திக்கடவு அவினாசி திட்டத்தை செயல்படுத்தியதற்காக முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் அதிமுகவின் முக்கிய தலைவர்கள் பலரும் கலந்துகொண்ட நிலையில், முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.

மேலும் அவர் எம்ஜிஆர், ஜெயலலிதா படம் இல்லை என்றும் இதனாலேயே பங்கேற்கவில்லை என்றும் கூறினார். எனினும் இதற்கு பின்னால் வேறு காரணம் இருக்கிறது என்றும், கட்சியில் இருந்து செங்கோட்டையன் ஓரங்கட்டப்படுவதாலேயே அவர் பங்கேற்காமல் இப்படி ஒரு காரணத்தை சொல்லுவதாகவும் பேசப்பட்டது. ஆனால் இது பற்றி செங்கோட்டையனிடம் கேட்டபோது, அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடர்பான பாராட்டு விழா அழைப்பிதழ்கள் மற்றும் மேடையில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் இடம்பெறாத நிலையில், தனது உணர்வை வெளிப்படுத்தும் வகையில் விழாவில் பங்கேற்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.
மேலும் எத்தனையோ வாய்ப்புகள் வந்தபோதும் அதுபற்றி கவலைப்படாமல் இந்த இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தவன் நான். என்னை சோதிக்காதீர்கள் என்றும் கூறினார். எனினும் இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி இதுவரை எதுவும் கூறாத நிலையில் இன்று பேசிய செங்கோட்டையன், கடந்த முறை தோல்வியை தழுவ சில துரோகிகளே காரணம் என்றும் அவர்கள் அடையாளம் காணப்பட வேண்டும் என்று பேசியுள்ளார். ஈரோட்டில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
தலைவரோடு பயணித்தோம். தலைவர் தந்த வழியிலேயே நாம் அனைவரும் பயணித்தோம். இங்கே நீங்கள் இவ்வளவு பேர் இருக்கின்றீர்கள் என்றால், இந்த இயக்கத்திற்காக, இந்த இயக்கம் வளர வேண்டும் என்பதற்காக.. இயக்கத்திற்காக எந்த தியாகத்தையும் செய்யக்கூடிய தொண்டர்கள் எந்த இயக்கத்திலும் இல்லை. இந்த அதிமுகவில் மட்டும் தான் இருக்கிறார்கள். இதனை எதற்காக சொல்கிறேன் என்றால், இயக்கத்தை பொறுத்தவரை இந்த முறை மட்டும் தான் நாம் தோல்வியை தழுவியுள்ளோம். இதற்கு சில துரோகிகள் தான் காரணம். இதனை எதற்காக சொல்கிறேன் என்றால், அவர்கள் அடையாளம் காணப்பட வேண்டியவர்கள். இவ்வாறு அவர் கூறினார்.
-
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
பத்திரிகையாளர்களை மிரட்டினாரா செங்கோட்டையன்.. முற்றிய வாக்குவாதம்.. ப்ரஸ்மீட்டில் பரபரப்பு












Click it and Unblock the Notifications