தும்பிக்கையில் குச்சியை விட்டு.. 28 யானைகளுக்கு கொரோனா பரிசோதனை.. முரண்டு பிடித்த யானைகள்!
ஈரோடு: முதுமலை தொப்பைக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் 28 யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
பரிசோதனைக்கு முரண்டு முடித்த யானைகளுக்கு பாகன்கள் உதவியுடன் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மனிதர்களின் வாழ்க்கையை சிதைத்த கொரோனா வைரஸ் இப்போது விலங்குகளையும் தாக்க தொடங்கி விட்டது.

சிங்கத்தை சாய்த்த கொரோனா
சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கபட்டு வந்த 11 சிங்கங்களில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று பாதிக்கபட்டு அதில் ஒரு சிங்கம் பலியாதனாக பூங்கா நிர்வாகம் அதிர்ச்சி தகவல் தெரிவித்தது. அந்த சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு உத்தரவு
இதனை தொடர்ந்து அங்குள்ள மற்ற விலங்குகளுக்கும் கொரோனா பரிசோதனை செயப்பட்டது. தொற்றால் பாதிக்கப்பட்ட சிங்கங்களும் தனியாக வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றன. இதனையடுத்து தமிழகத்தில் பல்வேறு முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த வனத்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.

யானைகளுக்கு பரிசோதனை
இந்த நிலையில் முதுமலையில் உள்ள தொப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் உள்ள 28 யானைகளுக்கு இன்று காலை கொரோனா பரிசோதனை செயப்பட்டது. வன கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் தலைமையில் மருத்துவர்கள் யானைகளின் தும்பிக்கை மற்றும் ஆசனவாய் பகுதியில் இருந்து மாதிரிகளை சேகரித்தனர். பரிசோதனைக்கு முரண்டு முடித்த யானைகளுக்கு பாகன்கள் உதவியுடன் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

முடிவு எப்போது தெரியும்?
சேகரிக்கப்பட்ட மாதிரிகளை உத்தரப்பிரதேசத்தில் உள்ள கால்நடை ஆராய்ச்சி மையத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்க உள்ளனர். சில நாட்களில் பரிசோதனை முடிவுகள் தெரிய வரும். இது தவிர தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

யானைகளுக்கு சமூக இடைவெளி வேண்டும்
உணவு வழங்குவதற்காக யானைகளை வரிசையில் நிறுத்தக் கூடாது, யானைகளுக்கு இடையே சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், பாகன்கள் தேவையின்றி ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் இதில் அடங்கும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications