ஈரோட்டில் விஜய் பொது கூட்டத்திற்கு அனுமதி மறுக்கலையே! மாற்று இடம் எதுக்குன்னா.. செங்கோட்டையன் தகவல்
ஈரோடு: ஈரோட்டில் தவெக பொதுத் கூட்டம் நடத்த கோரிய இடத்திற்கு போலீஸார் அனுமதி மறுத்ததால் மாற்று இடத்திற்கு அனுமதி கோருவதாக தகவல்கள் வெளியான நிலையில் இதை கட்சியின் நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டத்தில் வரும் டிசம்பர் 16ஆம் தேதி பொதுக் கூட்டம் நடத்த காவல் துறையிடம் அனுமதி கேட்டுள்ளோம். இதற்காக பவளத்தாம்பாளையம் அருகே தனியாருக்கு சொந்தமான 7 ஏக்கர் இடத்தில் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி கேட்டுள்ளோம்.
அதற்கு காவல் துறையிடம் இருந்து எந்த மறுப்பு கடிதமும் வரவில்லை. ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாங்களாகத்தான் இன்னொரு இடத்திற்கும் அனுமதி கேட்டுள்ளோம். ஈரோடு மாவட்டத்தில் இருந்து விஜய்யின் எழுச்சி பயணம் தொடங்கும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த 4 அல்லது 5 மாதங்களில் சட்டசபை தேர்தல் வர போகிறது. இதற்காக திமுக, அதிமுக, தேமுதிக, அமமுக, பாஜக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் எல்லாம் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில் கட்சியை தொடங்கி ஓராண்டே ஆன தவெகவும் தேர்தல் பிரச்சாரத்தில் குதித்துள்ளது. கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில் சிறிது நாட்கள் பிரச்சாரத்தை விஜய் தொடங்காமல் இருந்தார். இந்த நிலையில் புதுவையில் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி கேட்டு அதை கிடைத்துள்ள நிலையில் அந்த பொதுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், தற்போது தவெகவில் இணைந்துள்ள நிலையில் கொங்கு மண்டலத்தை விஜய் குறி வைத்துள்ளார். வரும் 16ஆம் தேதி ஈரோட்டில் மாபெரும் பொதுக் கூட்டத்தை நடத்த விஜய் தரப்பு திட்டமிட்டுள்ளதாம்.
இதுகுறித்து செங்கோட்டையன் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கேட்டுள்ளனர். அதாவது இந்த பொதுக் கூட்டத்தில் 75 ஆயிரம் பேர் கூடுவர் என்பதால் பவளத்தாம்பாளையம் அருகே தனியாருக்கு சொந்தமான 7 ஏக்கர் இடத்தில் கூட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்கப்பட்டது.
செங்கோட்டையன் போட்ட தூண்டிலில் சில பெரிய மீன்கள் சிக்கி, அவை அந்த கூட்டத்தில் விஜய் முன்பு இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பவளத்தாம்பாளையத்தில் தவெக அனுமதி கேட்டுள்ள இடத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
அதாவது 75 ஆயிரம் பேர் வரை கூடும் அளவுக்கு அந்த இடம் பாதுகாப்பானது இல்லை என்பதால் அனுமதி மறுத்ததாக போலீஸ் தரப்பு தெரிவிக்கப்பட்டதாம். இந்த நிலையில் இந்த தகவலை செங்கோட்டையன் மறுத்துள்ளார். பவளத்தாம்பாளையத்தில் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதாக போலீஸில் இருந்து எங்களுக்கு எந்த கடிதமும் வரவில்லை என்றார்.
-
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
தமிழ்நாட்டையே அதிர வைத்த திருமணம்.. தவெக வேட்பாளரான ஆர்.எஸ்.முருகன்.. விஜய் சீட் கொடுத்த பின்னணி! -
’ஆங்கிலோ இந்தியர்கள்’ நண்பரான விஜய் - பெரம்பூர் தொகுதி ஸ்பெஷல் தெரியுமா? -
ஆம்புலன்ஸுக்கு வழி விடாதது.. சட்டவிரோதம் என தெரிந்தும் விஜய் செய்த செயல்! பாய்ந்த வழக்கு -
விஜய் பேச்சை கேட்க ஆள் வரல! செல்ஃபி எடுக்க குவிந்த ரசிகர்கள்! இதுதான் பரப்புரையா! -
விஜய்க்கு அதிகாலையே சிம்ம சொப்பனமாக வந்த ஸ்டாலின்.. திருச்சியில் 'டீ' பிரேக் பாலிடிக்ஸ்.. செம மூவ்! -
கல்லூரியில் இருந்து டிராப் அவுட்.. 10, 12th தேர்வை தனித்தேர்வராக எழுதிய விஜய்.. வேட்புமனுவில் தகவல் -
கோவிலில் தேங்காய் உடைத்து பிரச்சாரத்தை தொடங்கிய தவெக முஸ்லிம் வேட்பாளர்கள் -
‘ஜனநாயகன்’ டிக்கெட்டை அதிக விலைக்கு விற்று மோசடி செய்தவர் தவெக வேட்பாளரா? சொந்த கட்சியினரே எதிர்ப்பு -
புதுச்சேரி ரங்கசாமி டபுள் சென்டிமென்ட் சக்ஸஸ்?விஜய்யும் அந்த எலுமிச்சை பழமும்.. அப்ப தான் CM யோகமா? -
வில்லிவாக்கத்தில் கொடி நாட்டுவாரா ஆதவ் அர்ஜுனா? சுத்துப் போட்ட திமுக! சூடு பிடிக்கும் களம் -
தவெக பெண் தொண்டர்கள் மீது மதுபாட்டில் வீச்சு.. ஆதவ் அர்ஜுனா பிரசாரத்தில் அதிர்ச்சி!












Click it and Unblock the Notifications