பாரதிராஜா இறுதி சடங்கிற்கு பிறகு மனைவி வெளியிட்ட உருக்கமான அறிக்கை.. ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்
சென்னை: தமிழ் சினிமாவின் வரலாற்றை மாற்றிய இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு, திரையுலகத்தையும் ரசிகர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கிராமத்து மண்வாசனையை உலகம் முழுவதும் கொண்டு சென்ற அந்த மகத்தான கலைஞர் இனி நம்மிடையே இல்லை என்ற உண்மை, பலராலும் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே உள்ளது.
பாரதிராஜாவின் மறைவையொட்டி தமிழகம் முழுவதும் இரங்கல் அலை எழுந்தது. அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என ஆயிரக்கணக்கானோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் சொந்த ஊரான தேனியில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதி நிகழ்வில் பொதுமக்கள் முதல் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் வரை பலரும் கலந்துகொண்டு கண்ணீருடன் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

பாரதிராஜா மனைவி அறிக்கை
இந்த நிலையில், பாரதிராஜாவின் மனைவி சந்திரலீலா பாரதிராஜா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அந்த அறிக்கையில், தனது குடும்பத்தின் துயர நேரத்தில் உடனிருந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். குறிப்பாக தனது கணவரின் இறுதிச் சடங்கை முழு அரசு மரியாதையுடன் நடத்த உத்தரவிட்ட தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு சிறப்பு நன்றியை தெரிவித்துள்ளார்.
மேலும், இறுதி நிகழ்வுகளை சிறப்பாக நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்த அரசு அதிகாரிகள், காவல்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் குடும்பத்தின் சார்பில் நன்றியை பதிவு செய்துள்ளார்.
அதோடு, நேரிலும் சமூக வலைதளங்களிலும் ஆறுதல் தெரிவித்த மக்கள், ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அனைவரின் அன்பும் ஆதரவும் இந்த துயர நேரத்தில் தங்களுக்கு ஆறுதலாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மறையாத புகழ்
ஒரு மனிதன் மறைந்த பிறகும் அவரது சாதனைகள், அவர் விதைத்த அன்பு, அவர் உருவாக்கிய உறவுகள் உயிருடன் இருப்பதை பாரதிராஜாவின் இறுதி நிகழ்வுகள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளன. அவரது படைப்புகள் வாழும் வரை அவர் மறைய மாட்டார் என்பதே ரசிகர்களின் உணர்வாக உள்ளது.
ரசிகர்கள் ஆறுதல்
இயக்குநர் பாரதிராஜா இந்த மண்ணில் கலந்துவிட்டாலும், அவர் காட்டிய கிராமத்து பாதைகள், அவர் உருவாக்கிய கதாபாத்திரங்கள், அவர் சொல்லிய மனித உணர்வுகள் தமிழ் சினிமா இருக்கும் வரை தலைமுறைகளை கடந்து பேசிக்கொண்டே இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினரின் நன்றிக் கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் பலரது மனதையும் உருக்கி வருகிறது. பலரும் பாரதிராஜாவின் மனைவிக்கு ஆறுதல் சொல்லி வருகிறார்கள்.
-
"இந்த உலகத்தை விட்டு போக பயமாக இருக்கிறது..." ஏனென்றால்! மறைவுக்கு முன் பாரதிராஜா சொன்ன வார்த்தை -
"இனி யாரோடு பாடுவேன்? பாரதிராஜாவை சிரிக்க வைத்த வீடியோவை பகிர்ந்து உருகிய வைரமுத்து!" ரசிகர்கள் ஆறுதல் -
தேனி மண்ணில் பாரதிராஜா உடல் .. கை குழந்தைகளுடன் காத்திருக்கும் பெண்கள்.. பிரபலங்களின் நெகிழ்ச்சி செயல் -
2 வருஷமா போராட்டம்.. 3 மாசத்துக்கு முன்பு பேசினேன்! அப்போது கூட.. பாரதிராஜா பற்றி நெப்போலியன் உருக்கம் -
Bharathiraja: பாரதிராஜா உடலை பார்த்து சிவகுமார் பேசிய வார்த்தை.. கண்கலங்க வைத்த காட்சி -
உன் நடிப்பு பிடிக்காதுன்னு பாரதிராஜா சொல்லுவாரு.. கடைசிவரை நான் நினைச்சது நடக்கல! ரஜினிகாந்த் உருக்கம் -
Ilaiyaraaja: நண்பன் பாரதிராஜாவின் அசைவற்ற உடல்.. வித்தியாசமாக பேசிய இளையராஜா -
Bharathiraja: இறப்பதற்கு முன் பாரதிராஜா கூறிய கடைசி ஆசை? ரசிகர்களை கலங்க வைக்கும் நினைவுகள்! -
பாரதிராஜா, இளையராஜா வாழ்க்கையில் நடந்த "ஒரே” துயரம்.. நம்பிக்கை நாயகனுக்கு இப்படியா நடக்கணும்! -
Bharathiraja: "கூட இருப்பவர்களையே நம்ப முடியாது..." ரசிகர்களை கலங்க வைக்கும் பாரதிராஜாவின் கடைசி பேட்டி -
உடைந்த பாரதிராஜா.. மகன் மனோஜ்ஜை மறக்க முடியாமல் தேம்பி தேம்பி அழுது, புத்திர சோகத்தாலேயே போன உயிர் -
"என் குருநாதர்.. என்னால வர முடியாம போச்சு.." பாரதிராஜா மறைவு.. கண் கலங்கிய நெப்போலியன்.. அஞ்சலி! -
பாரதிராஜா செய்ததை மறக்க முடியுமா? கதறிய நெப்போலியன்! சரத்குமார், குஷ்பூ, ரேவதி வருத்தம் -
பாரதிராஜாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு.. தீவிர மருத்துவ கண்காணிப்பு! இமய இயக்குனருக்கு என்ன ஆச்சு -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு














Click it and Unblock the Notifications