அப்பதான் கோர்ட்டை விட்டு வெளியே வந்தனர்.. விரட்டி விரட்டி.. சாக்கடையில்.. கொல்லப்பட்ட 2 குற்றவாளிகள்

ஈரோட்டில் 2 குற்றவாளிகள் வெட்டி கொல்லப்பட்டனர்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: கோர்ட்டில் ஆஜராகிவிட்டு அப்போதுதான் வெளியே வந்தனர் 2 குற்றவாளிகளும்.. வளைத்து பிடித்து, விரட்டி விரட்டி அவர்களை அரிவாளாலேயே கொன்று சாய்த்துவிட்டது ஒரு கும்பல்.

ஈரோடு அருகே உள்ள கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் குணா என்ற குணசேகரன், 38 வயதாகிறது.. அதேபோல, கிருஷ்ணம்பாளையத்தை சேர்ந்தவர் கலை என்ற கலைச்செல்வம்.. 30 வயதாகிறது!

இவர்கள் 2 பேருமே கொலை குற்றவாளிகள்.. 2019-ல்பிரகலாதன் என்ற ஒரு பெரிய ரவுடியை வெட்டி கொன்று விட்டார்கள்.. குணா தான் மெயின் குற்றவாளி, கலை இரண்டாவது குற்றவாளி.

கொலை

கொலை

ஜாமீனில் வெளியே இருந்துள்ளனர்.. அடிக்கடி ஈரோடு கோர்ட்டுக்கு சென்று விசாரணைக்கும் ஆஜராகி வந்தனர்.அப்படித்தான், நேற்று காலையில், குணாவும் கலையும் ஆஜராகினர்.. இவர்களுடன் அதே கொலை வழக்கில் தொடர்புடைய 11 பேரும் ஆஜராகினர்.

 அரிவாள் வெட்டு

அரிவாள் வெட்டு

பிறகு, மதியம் 2 மணி இருக்கும்.. கோர்ட்டை விட்டு, குணாவும், கலையும் வெளியே வந்தனர்.. அப்போது திடீரென ஒருசிலர் இவர்களை வழிமறித்து, வீரப்பன்சத்திரம் தெப்பக்குளம் அடுத்த பெரியகுட்டை வீதிக்கு வருமாறு வரவழைத்தது... அங்கு அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் குணசேகரனையும், கலைச்செல்வனையும் ஓட ஓட விரட்டி வெட்டியது.. குணா, கலையின் முகம், இடுப்பு, நெஞ்சு போன்ற பகுதிகளில் சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது.

பாறாங்கல்

பாறாங்கல்

அப்போது, அவர்களிடம் இருந்து தப்பிக்க, அங்கிருந்த ஒரு சாக்கடையில் குதித்தார் குணசேகரன்.. ஆனால், அவர் அதிலேயே மயங்கி விழுந்துவிட்டார்.. மயங்கி விழுந்ததை பார்த்த கும்பல், ஒரு பெரிய பாறாங்கல்லை எடுத்து, அவர் தலையிலேயே தூக்கி போட்டு கொன்றது.. அதற்குள் கலைச்செல்வன் தப்பி ஓட முயன்றார்.. ஆனாலும் விரட்டி விரட்டியே அவரையும் வெட்டி சாய்த்தது அந்த கும்பல்.. கொஞ்ச நேரத்திற்கெல்லாம் 2 உசுரும் அநியாயமாக பிரிந்துவிட்டது..

விசாரணை

விசாரணை

நடுரோட்டில், மதிய நேரத்தில் படு பயங்கரமாக இந்தகொலைகள் நடந்துள்ளது.. இது குடியிருப்புகள் நிறைந்த பகுதியாகும்.. தகவல் அறிந்த ஈரோடு வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையும் நடத்தினர். கொலை நடந்த இடத்தில் ஒரு பெரிய அரிவாளை மீட்டுள்ளனர்.. கொலை கும்பலுடன் இருந்ததாக ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்றனர். கொலையைச் செய்த குற்றவாளிகள் யார்? எதற்காக கொலை நடந்தது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+