அனுமதி மறுத்த போலீசார்.. தவெக பொருளாளர் வெங்கட்ராமன் வாக்கு வாதம்.. கண்டுக்காமல் போன புஸ்ஸி ஆனந்த்?

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: விஜய் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த தவெக பொருளாளர் வெங்கட்ராமனை விவிஐபி கேட்டில் போலீசார் தடுத்து நிறுத்தினர். விவிஐபிக்கான பதிவெண் பட்டியலில் அவர் பெயர் இல்லை எனக்கூறி போலீசார் நிறுத்தியதால் போலீசாருடன் அவர் வாக்குவாதம் செய்தார். பின்னர் பவுன்சர்கள் அவரை அடையாளம் காட்டிய பிறகு போலீசார் வெங்கட்ராமனுக்கு அனுமதி கொடுத்தனர்.

ஈரோட்டு விஜயமங்கலம் அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு பொதுவெளியில் நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் விஜய் கூட்டத்திற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

vijay-erode-public-meeting-tvk-venkataramanan-in-heated-argument-with-police-at-vvip-gate

தவெக பொருளாளர் வெங்கட்ராமன்

தவெக நிர்வாகிகள் 10 ஆயிரம் பேர், பொதுமக்கள் 25 ஆயிரம் பேர் என மொத்தம் 35 ஆயிரம் பேர் அனுமதிக்கப்படுவர்கள் என்று தவெக நிர்வாகிகள் கூறியுள்ளனர். தவெக பொதுக்கூட்டத்தில் பொதுமக்கள் வருவதற்கு ஒருவழி,வெளியேறுவதற்கு ஒருவழி என நெரிசல் இன்றி செல்வதற்காக விரிவான வசதிகளை போலீசார் அறிவுறுத்தலின் பேரில் தவெகவினர் செய்து வைத்துள்ளனர்.

அதேபோல, விஜய் செல்லும் பாதை தனியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. விவிஐபிக்களுக்கு மட்டுமே அப்பகுதி வழியாக அனுமதி அளிக்கப்படும் கட்சியின் உயர் மட்ட நிர்வாகிகள் ஒரு சிலரை மட்டுமே அந்த வழியில் போலீசார் அனுமதித்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் தவெக பொருளாளர் வெங்கட்ராமன் இன்று காலை தவெக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்தார்.

அனுமதி மறுத்த போலீசார்

அப்போது விவிஐபி கேட்டில் போலீசார் அவரை அனுமதிக்க மறுத்துவிட்டனர். உடனே அவர் காரில் இருந்து இறங்கி வந்து நான் தவெக பொருளாளர் என்னை அனுமதிக்க மாட்டீர்களா என்று கேட்டார். ஆனாலும் போலீசார் அனுமதிக்க மறுத்தனர். விவிஐபி லிஸ்ட்டில் வெங்கட்ராமன் பெயரோ, அவரது கார் பதிவெண்ணோ இல்லை என்பதால் அவரை அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

முன்கூட்டியே பதிவெண் நம்பரை கொடுங்கள்

பிறகு தனது காரில் இருந்தபடியே வெங்கட்ராமன் யாருக்கோ போன் செய்தார். இதையடுத்து அங்கே வந்த தனியார் பாதுகாவலர் ஒருவர், வெங்கட்ராமனை அடையாளம் காட்டிய பிறகு உள்ளே அனுமதித்தனர். இதையடுத்து வெங்கட்ராமன் உள்ளே சென்றார்.

அதன்பிறகு தவெக நிர்வாகிகளிடம் இங்கே இருந்து நீங்களே அடையாளம் காட்ட வேண்டும். இல்லையென்றால் முன்கூட்டியே பதிவெண் நம்பரை கொடுங்கள் இல்லையென்றால் அனுமதிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். முன்னதாக மாமல்லபுரத்தில் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி கரூர் கூட்ட நேரிசலில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து விஜய் ஆறுதல் கூறும் நிகழ்வு நடைபெற்றது.

கரூர் கூட்டத்தின்போதும் அனுமதிக்கவில்லை

இந்த கூட்டத்திற்கு வந்த போதும், வெங்கட்ராமனை தனியார் பாதுகாவலர்கள் உள்ளே விட மறுத்தனர். பிறகு தனது காரில் இருந்தபடி உள்ளே இருந்தவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்கள் அனுமதிக்க சொல்லிய பிறகு வெங்கட்ராமன் உள்ளே சென்றார்.

பின்னர் இது தொடர்பாக செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த வெங்கட்ராமன், காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்துள்ளது. புதுசு புதுசா செய்வதில் இதுபோன்ற (உள்ளே விட அனுமதி மறுத்தது) சம்பவங்கள் நடக்கும். புஸ்சி ஆனந்தை நான் கூப்பிட்டும் கண்டுக்கமால் போனதாக கேட்கிறீர்கள். புஸ்சி ஆனந்தை நான் பார்க்கவில்லை.. பசங்களை கூப்பிட்டேன்' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+