வணிகர் தின மாநாடு! தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகளுக்கு விடுமுறை! விக்கிரமராஜா அறிவிப்பு!
ஈரோடு: வணிகர் சங்க மாநாட்டையொட்டி தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் மே 5ஆம் தேதியன்று வணிகர் சங்கங்கள் சார்பில் வணிகர் தின மாநாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஈரோட்டில் நாளை மாநாடு நடைபெறுகிறது.
இதில் அமைச்சர்கள் வெள்ளக்கோவில் சாமிநாதன், முத்துச்சாமி, செந்தில்பாலாஜி, மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

இதனிடையே வணிகர் தின மாநாட்டை ஒட்டி மே 5ஆம் தேதியான நாளை மொத்த சில்லறை வணிக நிறுவனங்கள், உணவகங்கள், கடைகள் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிகர்கள் மாநாட்டில் பங்கேற்க வசதியாக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் நடைபெறும் வணிகர் தின மாநாட்டில், தமிழகம் முழுவதும் இருந்தும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் அவர்களுக்கான காலை, மதியம், இரவு என மூன்று வேளை சாப்பாடும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
20 ஏக்கர் பரப்பளவில் பந்தல் அமைக்கப்பட்டிருப்பதுடன் பஸ், கார், டூ விலர்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் இடவசதியும் செய்யப்பட்டுள்ளது. 1000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனத் தெரிகிறது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஈரோட்டில் மாநாடு நடத்துவது போல் இன்னும் சில வணிக அமைப்புகள் வெவ்வேறு ஊர்களில் வணிகர் தின மாநாடு நடத்துகின்றன.
இதனால் நாளைய தினம் பெரும்பாலான மளிகைக்கடைகள், உணவகங்கள் விடுமுறை விடப்படலாம் என்பதால் முன்கூட்டியே தேவையான பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications