ஈரோடு புஷ்பராணி.. காதலனுக்கு அடிக்கடி உல்லாச அழைப்பு.. ஓசூரில் இருந்த கோலம்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபி பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்த புஷ்பராணி என்பவர் தனியார் ஜவுளி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். கணவனை இழந்த புஷ்பராணிக்கு மகேந்திரன் என்பவருடன் திருமணத்தை மீறிய காதல் இருந்துள்ளது.. இந்த காதல் காரணமாக அடிக்கடி புஷ்பராணி உல்லாசத்துக்கு அழைத்தாராம். இதனால் மகேந்திரன் செய்த செயலால் சிறையில் கம்பி எண்ணி வருகிறார்.
திருமணத்தை மீறிய உறவு என்பது பெரும்பாலும் சமூகத்தில் அழிக்க முடியாத கரையாகும். இது பெரிய குற்றமாகவும் இருக்கிறது. சட்ட ரீதியாக தண்டனை இல்லை என்றாலும், அவமானம் மற்றும் அசிங்கம் என்பதால் பலரும் வீட்டிற்கு தெரியாமல் தொடர்கிறார்கள். அப்படி வாழ்ந்த கோபி பெண்ணை காதலன் என்ன செய்தார் என்பதை பார்ப்போம்.

ஈரோடு மாவட்டம் கோபி பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்த வடிவேல். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். அவருடைய மனைவி புஷ்பராணிக்கு 43 வயது ஆகிறது. இவர் வேட்டைகாரன்கோவிலில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 25-ந் தேதியில் இருந்து புஷ்பராணியை காணவில்லை. இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்துள்ளார்கள். இதில், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே தொப்பையாறு என்ற இடத்தில் புஷ்பராணி கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டுபிடித்தனர்.
என்ன நடந்தது
புஷ்பராணியின் செல்போனுக்கு வந்த பல்வேறு அழைப்புகளை போலீசார் ஆய்வு செய்தார்கள். அதில் கவுந்தப்பாடி ஆலத்தூர் ஜீவா நகர் குளமேட்டைச் சேர்ந்த 32 வயதாகும் மகேந்திரன் அடிக்கடி புஷ்பராணியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சந்தேகத்தின் பேரில் அவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்
மகேந்திரனிடம் நடத்திய விசாரணையில், அவர் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையத்தைச் சேர்ந்த தனது அக்காள் கணவர் சதீஷ் (35) என்பவருடன் சேர்ந்து புஷ்பராணியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மகேந்திரனிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் பார்ப்போம்.
புஷ்பராணி வேலை செய்த ஜவுளி நிறுவனத்தில் மகேந்திரனும் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அவர்கள் 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியிருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளாக 2 பேரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ஆனால் புஷ்பராணி அடிக்கடி மகேந்திரனை உல்லாசத்துக்கு வருமாறு அழைத்துள்ளார். அதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால் தகாத உறவு குறித்து மகேந்திரனின் மனைவியிடம் கூறிவிடுவதாக புஷ்பராணி மிரட்ட தொடங்கினாராம்.
இதுகுறித்து சதீஷிடம் மகேந்திரன் தெரிவித்துள்ளார். பின்னர் 2 பேரும் சேர்ந்து புஷ்பராணியை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர். இதனால் மகேந்திரன் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி புஷ்பராணியை கடந்த 25-ந் தேதி காரில் ஒகேனக்கல் அழைத்துச் சென்றுள்ளார். உடன் சதீஷும் சென்றுள்ளார்.
இதைத் தொடர்ந்து 3 பேரும் காட்டூர் கருப்பராயன் கோவில் அருகே உள்ள வனப்பகுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு வைத்து புஷ்பராணியிடம் தன்னை மறந்துவிடுமாறு மகேந்திரன் கூறியுள்ளார். அதற்கு அவர் முடியாது என்று மறுத்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் தாங்கள் தயாராக வைத்திருந்த கட்டுக்கம்பியால் புஷ்பராணியின் கழுத்தை இறுக்கியுள்ளனர். இதில் அவர் உயிரிழந்தார். பின்னர் அவருடைய பிணத்தை காரில் எடுத்துச் சென்று தொப்பையாறு என்ற இடத்தில் வீசிவிட்டு தப்பித்துச் சென்று தலைமறைவாக இருந்து வந்தனர். இந்த நிலையில் புஷ்பராணியின் செல்போனில் பதிவான அழைப்புகளால் இருவருமே சிக்கியுள்ளனர். சிறையில் கம்பி எண்ணுகிறார்கள்.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications