ஈரோடு கிழக்கு மக்கள்.. நெஞ்சை நிமிர்த்தி பெருமைப்படலாம்.. காளியம்மாள் ட்விட்டால் சூடாகும் ட்விட்டர்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சிக்கு டெபாசிட் கூட கிடைக்காத நிலையில், சுமார் 10 ஆயிரம் வாக்குகள் கிடைத்தது. அவர்களுக்கு வாழ்த்து சொல்லி அக்கட்சியைச் சேர்ந்த காளியம்மாள் ட்வீட் போட்டிருக்கிறார். ஈரோடு கிழக்கில் பணம் கொடுத்து வாக்குகள் வாங்கப்பட்டதாகவும் காளியம்மாள் தனது ட்வீட் பதிவில் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரங்கள் பெரிய அளவில் விவாதமாக மாறியது. ஆளும் திமுகவை கடுமையாக விமர்சித்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆளும் கட்சிக்கு எதிரான அதிருப்தி ஓட்டுக்களை மாற்ற வேண்டும் என்ற நோக்கில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

பாஜகவிற்கு எதிரான வாக்குகள், சிறுபான்மையினர் வாக்குகளை பெற ஆர்வம் காட்டிய சீமான், அருந்ததியர்கள் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

கட்டுப்பாடுகள்

கட்டுப்பாடுகள்

இதனிடையே சீமான் பிரச்சாரம் ஒரு பக்கம் கடுமையாக இருந்த நிலையில், திமுகவினர் இதற்கு பதிலடியும் கொடுத்தனர். ஒருகட்டத்தில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டு சண்டையாகவும் மாறியது. இதில் நாம் தமிழர் கட்சியனரின் மண்டையும் உடைந்தது. தேர்தல் பிரச்சாரத்தின் போது நாம் தமிழர் கட்சிக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அக்கட்சியின் வேட்பாளர் மேனகா நேரடியாக குற்றம்சாட்டினார். இது ஒருபுறம் எனில், அருந்ததியர்கள் குறித்து சீமான் பேசியதை வைத்து அவரை டார்க்கெட் செய்த கட்சிகள் கடைசி நேரத்தில் கடுமையாக அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்தன. இதுவும் நாம் தமிழர் கட்சிக்கு வர வேண்டிய வாக்குகளை குறைத்ததாகவும் கூறப்பட்டது

நாம் தமிழர் வாக்குகள்

நாம் தமிழர் வாக்குகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 1,10,156 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,922 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66 ஆயிரத்து 234 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 10,827 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 1,432 வாக்குகளும் பெற்றனர்.

 அருந்ததியர்கள் சர்ச்சை

அருந்ததியர்கள் சர்ச்சை

இந்த முறை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 10,827 வாக்குகள் பெற்றதால் டெபாசிட்டை இழந்தார். கடந்த தேர்தலில் இதே ஈரோடு கிழக்கு தொகுதியில் 11629 வாக்குகளை பெற்றிருந்த நாம் தமிழர் கட்சி இம்முறை 825 வாக்குகள் மட்டுமே குறைவாக பெற்றிருக்கிறது. இதை பார்க்கும் போது நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கியில் பெரிய சரிவு ஏற்பட்டதாக தெரியவில்லை. அருந்ததியர்கள் சர்ச்சை எழாமல் இருந்திருந்தால் நாம் தமிழர் கட்சி கூடுதல் வாக்குகளை வாங்கியிருக்கும் என்று ஒரு பேச்சு நிலவுகிறது.

400 கோடி செலவு

400 கோடி செலவு

அதேநேரம் ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்களை காசு கொடுத்து விலைக்கு வாங்கி ஓட்டு போட வைத்திருப்தாக திமுக மீது நாம் தமிழர் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர் பணபலத்தால் வென்றுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதன் செய்தியாளர்களிடம் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. "மக்களின் வறுமையை மூலதனமாக பயன்படுத்துகிறது திமுக. ரூ.400 கோடி செலவு செய்திருக்காங்க.. நாளை ரூ.4000 கோடி கொள்ளையடிக்கப் போறாங்க.. 39 லட்சம் மட்டும் செலவு செய்து இந்த தேர்தலை சந்தித்து இருந்தால் திமுக கூட்டணி காங்கிரஸ் காணாமல் போய் இருக்கும். மக்களுக்கு கொடுத்த ரூ.20,000 பணமெல்லாம் டாஸ்மாக்குக்கு போய்விட்டது.. பட்டியில் அடைத்து வைத்ததால் அவர்கள் யாருமே வேலைக்கும் போகவில்லை.

தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம்

இனிமேல்தான் அவங்களுக்கு கஷ்டப்படுவாங்க.. அதனால், தேர்தலுக்கு பிறகு கொடுப்பதாக சொன்ன ரூ.5,000 மதிப்பிலான மளிகை பொருட்களை மக்களுக்கு இப்பவே கொடுத்துவிடுங்கள். திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது என பாராட்டு விழாவையெல்லாம் நடத்துவார்கள். அதுகூடவே, தேர்தல் ஆணையத்துக்கு ஒரு பாராட்டு விழாவையும் கொண்டாடுங்கள்.. ஏன் என்றால், அவர்கள் மட்டும் இல்லாவிட்டால், இந்த வெற்றி சாத்தியமில்லை. ஒவ்வொரு முறையும் புகார் அளித்தும் அப்படியா? அப்படியா? என்று கேட்ட தேர்தல் ஆணையத்துக்கு நிச்சயமாக பாராட்டு விழா நடத்தியே ஆகவேண்டும்" என மேனகா நவநீதன் தெரிவித்தார்.

விலைபோகவில்லை

விலைபோகவில்லை

நாம் தமிழர் கட்சியின் இடும்பவனம் கார்த்திக் வெளியிட்டிருந்த ட்வீட் பதிவில், 10,804 ! நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் விலைபோகாத மண்ணின் மக்களின் சாட்சியம்! நேர்மைக்கும், உண்மைக்கும் எப்போதும் இடமுண்டு என நீதியின் பக்கம் நிற்கும் இனமானத் தமிழர்களின் அங்கீகாரம்! சனநாயகம் செத்துவிடக் கூடாது எனக் கருதி நிற்கும் உண்மைத்தமிழர்களின் உளவிருப்பம்! என்று கூறியுள்ளார்.

தமிழனின் இனம் காக்க

தமிழனின் இனம் காக்க


நாம் தமிழர் கட்சியின் காளிம்மாள் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், "ஈரோடு கிழக்கு நல்ல விலைக்கு விற்பனையானது. 10,804 பேரும் நெஞ்சை நிமிர்த்து பெருமை பட்டுக்கொள்ளுங்கள்.நீங்கள் தமிழனின் இனமானம் காக்க, தூய்மை அரசியல் பிறக்க இந்த மண்ணையும், மக்களையும் நேசிக்க கூடிய நேர்மையாளருக்கு தான் வாக்களித்தோம் என்று." என கூறியுள்ளார். அவரது ட்வீட் பதிவினை நாம் தமிழர் கட்சியினர் பலரும் அமோதித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+