விஜய் கட்சியில் மாஜி அதிமுக தலைவர்கள்? கையெடுத்து கும்பிட்ட செங்கோட்டையன்! அடுத்து சொன்னது முக்கியம்
ஈரோடு: தவெக சார்பில் வரும் 18ம் தேதி ஈரோட்டில் கூட்டம் நடைபெறும் நிலையில், பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தை செங்கோட்டையன் ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், தவெக கூட்டம் தொடர்பாகப் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். மாஜி அதிமுக தலைவர்கள் விஜய் கட்சிக்கு வர வாய்ப்பு இருக்கிறதா எனச் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு செங்கோட்டையன் கொடுத்த பதில் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் சம்பவத்திற்குப் பிறகு பிரச்சாரத்திற்கு நீண்ட கேப் கொடுத்த விஜய், இப்போது தான் மீண்டும் பரப்புரையை ஆரம்பித்துள்ளார். இம்மாதத் தொடக்கத்தில் தான் அவர் புதுச்சேரியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அடுத்து ஈரோட்டில் பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தை நடத்த தவெகவினர் திட்டமிட்டுள்ளனர். செங்கோட்டையன் இதற்கான பணிகளைக் கவனித்து வருகிறார்.

செங்கோட்டையன்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சாலையில் விஜயமங்கலத்தில் வரும் 18ஆம் தேதி இந்தப் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை செங்கோட்டையன் இன்று ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன் பல முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
இது தொடர்பாக செங்கோட்டையன் மேலும் பேசுகையில், "வேறு மாவட்டங்களில் இருந்து தவெகவினர் வரக்கூடாது என நாங்கள் சொல்லவே இல்லை. வேறு மாவட்டங்களில் இருந்து வர வேண்டாம் என போலீசார் கோரிக்கை வைத்துள்ளனரே தவிர.. நாங்கள் வரக்கூடாது என்று சொல்லவில்லை. அதை முதலில் தெளிவுபடுத்திக் கொள்கிறேன்.
யார் வேண்டுமானாலும் வரலாம்
அனைத்து மாவட்டங்களில் இருந்து வந்தால் கூட்டம் அதிகமாக இருக்கும். இடம் தாங்காது.. கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாது என நினைத்தே போலீசார் மற்ற மாவட்டங்களில் இருந்து தவெகவினர் வர வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளனர். மற்றபடி நாங்கள் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எங்களுக்கு எல்லோரும் வரவேண்டும்.. எல்லோரும் ஒன்று இணைய வேண்டும் என்பதுதான் நோக்கம். ஊர் கூடினால் தான் தேர் இழுக்க முடியும். நாங்கள் யாரையும் வேண்டாம் என சொல்லவில்லை.
நீங்களாகவே ஒரு கேள்வி கேட்டு மடக்க வேண்டாம். இந்த மாவட்டம் அமைதியான மாவட்டம்.. அருமையான மக்கள் இருக்கும் இடம். எனவே, கூட்டம் அமைதியாக நடக்கும். அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்" என்று சொல்லி கையெடுத்து கும்பிட்டார்.
மாஜி அமைச்சர்கள்
ஈரோட்டில் நடக்கும் கூட்டத்தில் உங்களைப் போல அதிமுகவில் இருந்து மாஜி அமைச்சர்கள் தவெகவில் இணைய வாய்ப்பு இருக்கிறதா என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு ஒரு நொடி யோசித்த செங்கோட்டையன், "வேறு முன்னாள் அமைச்சர்கள் இணைய வாய்ப்பு இருக்கிறதா எனக் கேட்கிறீர்கள்.. அதைப் பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்" என்று மட்டும் பதிலளித்தார்.
விஜய் பிரச்சாரம்
கடந்த காலங்களில் ஜெயலலிதாவுக்கு தேர்தல் காலகட்டத்தில் பிரச்சாரத் திட்டங்களையும் வியூகங்களையும் வகுத்துக் கொடுத்தவர் செங்கோட்டையன். அதேபோல விஜய்க்கும் பிரச்சாரத் திட்டத்தை வடிவமைப்பீர்களா எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், "அவர் விருப்பப்பட்டால் இதைச் செய்யவும் தயாராக இருக்கிறேன். இப்போது தான் முதலில் ஈரோட்டில் நிகழ்ச்சியை நடத்துகிறோம். அதன் பிறகு பார்க்கலாம்" என்றார்.
மேலும் அவர், "விஜய் பிரச்சாரத்திற்கு வருவோருக்குக் குடிநீர் வசதி ஏற்பாடு செய்து தருவோம். 1 லட்சம் தண்ணீர் பட்டில்களை வழங்கத் திட்டமிட்டுள்ளோம். கழிப்பறை வசதியும் ஏற்படுத்துகிறோம். டிரோன் மூலம் கண்காணிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படும். மருத்துவ வசதியும் செய்து தரப்படும். தேவையான அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்.
-
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
சென்னை ஆன்லைன் கட்டிட அனுமதியில் அதிரடி மாற்றம்.. ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு பறந்த மெசேஜ்! -
“வேண்டுமென்றே சிலர் ஃபியூசை எடுத்துச் செல்கின்றனர்” - மின்வெட்டுக்கு அமைச்சர் சொன்ன பகீர் காரணம்! -
செந்தில் பாலாஜி.. கே.என் நேரு.. அடுத்து அவர்தான்.. செஸ் போர்டில் அடுத்தடுத்து காய் நகர்த்தும் விஜய்! -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
”ஆபரேசன் அக்னி கலசம்” வன்னியர் ஓட்டுகளை அள்ளுவது எப்படி? விஜய் அமைத்த வியூகம்! பரபரப்பான ’நார்த்’ -
தமிழக அரசியலில் விஜய்யின் புதிய 'ஃபார்முலா'.. பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் ஏன் ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக்? -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
“வல்லாரை கீரை சாப்பிடுங்க விஜய்”.. முதல்வருக்கு தபாலில் அனுப்ப வந்த 3 பேர் கைது! -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
கோவில்ல பிஸினஸ் நடக்குது.. விஜய் போட்ட பெரிய ஆர்டர்! யாரும் தப்ப முடியாது! இசஅ அமைச்சர் ரமேஷ் உறுதி!












Click it and Unblock the Notifications