ஈரோடு கிழக்கு.. தைரியமாக முடிவு எடுத்த எடப்பாடி.. போட்டிக்கு ஓபிஎஸ் இறக்கும் "ஆள்".. அவரா? அச்சச்சோ!
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் போட்டிக்கு ஓ பன்னீர்செல்வம் அவர் சார்பாக ஒரு வேட்பாளரை களமிறக்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் பெரும் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. அங்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைப்பெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடக்கும் என்று இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கே அதிமுக கூட்டணி சார்பாக தமிழ் மாநில காங்கிரஸின் யுவராஜா போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இங்கே தமிழ் மாநில காங்கிரசுக்கு பதிலாக அதிமுகவே போட்டியிடும் என்ற முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளார்.

ஓ பன்னீர்செல்வம்
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் வேட்பாளருக்கு போட்டியாக ஓ பன்னீர்செல்வம் அவர் சார்பாக ஒரு வேட்பாளரை களமிறக்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஓபிஎஸ் இந்த முடிவை எடுக்க பல்வேறு காரணங்கள் உள்ளன. ஈரோடு கிழக்கில் எடப்பாடி ஆளுக்கு எதிராக தனது ஆளை ஓபிஎஸ் நிறுத்தி சின்னத்தை முடக்க முயற்சி செய்யலாம். அப்படி செய்யும் பட்சத்தில், அதிமுகவில் பிளவு மேலும் பெரிதாகும். ஓபிஎஸ்ஸை சமாளிக்க எடப்பாடி இறங்கி வர வாய்ப்புகள் உள்ளன. சின்னம் முடங்கிவிட்டதே என்று எடப்பாடி இறங்கி வரலாம். அல்லது எடப்பாடி பக்கம் இருக்கும் டாப் நிர்வாகிகள் சிலர் ஓபிஎஸ் பக்கமும் தாவும் வாய்ப்புகள் உள்ளன.

எடப்பாடி பழனிச்சாமி
ஓபிஎஸ் வேட்பாளர் , எடப்பாடி வேட்பாளர் இருவரும் இந்த தேர்தலில் போட்டியிட்டால் கண்டிப்பாக வாக்குகள் பிரியும். அப்படி வாக்குகள் பிரியும் பட்சத்தில்.. பாருங்க என்னை சேர்த்தால்தான் உங்களுக்கு வெற்றி. நான் இல்லாமல் உங்களுக்கு வெற்றி கிடையாது. என்னை சேர்க்கவில்லை என்றால் தோல்விதான் என்று ஓபிஎஸ் வாதம் வைக்க முடியும். அதிமுக ஒருங்கிணைந்து இருக்க வேண்டும் என்று ஓபிஎஸ் வைக்கும் வாதத்திற்கு இது வலு சேர்க்கும். ஓபிஎஸ் இதற்காகவே தனது தரப்பு வேட்பாளரை களமிறக்கும் வாய்ப்புகளும் உள்ளன.

ஓபிஎஸ் ஆள், எடப்பாடி ஆள்
இன்னொரு பக்கம் கொங்கில் எடப்பாடி தனக்கு பெரிய ஆதரவு இருப்பதாக கூறி வருகிறார். அதே கொங்கில் வெள்ளாள கவுண்டர்கள் இல்லாத மற்ற ஜாதியினர் இருக்கின்றனர். அவர்களை குறி வைத்து ஓபிஎஸ் வேட்பாளரை களமிறக்கினால், அதிமுகவின் வாக்குகள் சில்லு சில்லாக சிதறும். முக்கியமாக முதலியார் பிரிவை சேர்ந்த நிர்வாகி ஒருவரை ஓபிஎஸ் இங்கே களமிறக்க திட்டமிட்டுள்ளதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன. அவர் ஒரு மூத்த நிர்வாகியாம். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜாதி வாக்குகள் பிரிந்து எடப்பாடி தரப்பின் தோல்விக்கும் அது காரணம் ஆகும். இதன் மூலம் பாருங்க கொங்கிலேயே உங்களுக்கு சப்போர்ட் இல்லை என்று ஓபிஎஸ் வாதம் வைக்கும் நிலை ஏற்படும். ஓபிஎஸ் இதற்காகவே தனது தரப்பு வேட்பாளரை களமிறக்கும் வாய்ப்புகளும் உள்ளன.

கொங்கு ஆதரவு
இது தொடர்பாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ஈரோடு கிழக்கில் எடப்பாடி தனியாக ஒரு வேட்பாளரை நிறுத்தினார் என்றால் ஓ பன்னீர்செல்வம் போட்டிக்கு இன்னொரு வேட்பாளரை நிறுத்துவார். ஓபிஎஸ் பெரும்பாலும் முதலியார் வேட்பாளரை நிறுத்துவார் . ஈரோடு கிழக்கில் இதனால் எடப்பாடிக்கு எதிராக நிலைமை மாறும் வாய்ப்புகள் உள்ளன. ஈரோடு கிழக்கில் மட்டும் எடப்பாடிக்கு ஓபிஎஸ் செக் வைத்தார் என்றால், அது எடப்பாடிக்கு பெரிய பாதிப்பாக அமையும். இந்த ஒரு தேர்தலை வைத்து நான் இல்லாமல் நீங்கள் வெல்ல முடியாது என்று ஓ பன்னீர்செல்வம் நிரூபிக்க முடியும், தனக்கு எல்லா மாவட்டங்களிலும் சப்போர்ட் இருக்கிறது என்று ஓபிஎஸ் சொல்லும் சூழ்நிலையை இது உருவாக்கிவிடும்.

ரவீந்திரன் துரைசாமி
எடப்படியால் ஓபிஎஸ் இல்லாமல் தனியாக நின்று ஸ்டாலினை எதிர்க்க முடியாது. அப்படி செய்தாலும் கூட வெள்ளாள கவுண்டர்கள் இல்லாதோர் வாக்குகள் எடப்பாடிக்கு கொங்கில் கிடைக்காது. முக்குலத்தோர் வாக்கும் தெற்கில் கிடைக்காது. எடப்பாடி நினைத்தால் நிற்கலாம். ஆனால் அது எடப்பாடிக்கு தோல்வியை கொடுக்கும். ஸ்டாலினுக்கு வெற்றியை கொடுக்கும். இதனால்தான் அதிமுகவில் இருப்பவர்கள் சிலரே ஓ பன்னீர்செல்வத்தை கட்சிக்குள் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறார்கள், என்று கூறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications