55 வயசு தேவிக்கு 30 வயசு இளைஞரோடு உறவு.. முடித்து விட்டு குடித்தபோது தகராறு.. இறுதியில் ஒரு கொலை!
கள்ளக்காதலியை கழுத்து அறுத்து கொன்றவர் கைது செய்யப்பட்டார்
ஈரோடு: 55 வயசு தேவிக்கு 30 வயசு இளைஞரோடு கள்ளக்காதல் தேவைதானா? வெறும் 7500 ரூபாய் கடனுக்காக தேவியின் கழுத்தை நெறித்து கொலையே செய்துவிட்டார் இளைஞர்!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள மூலக்கடை பகுதியை சேர்ந்தவர் தேவி. வயசு 55. கர்நாடக மாநிலம் சீரங்கப்பட்டணத்தை சேர்ந்தவர்.
சத்தியமங்கலம் அடுத்த மூலக்கரையில் வசித்து வந்தார். இவரது கணவர் பெயர் சுரேஷ். லாரி கிளினராக உள்ளார். அடிக்கடி வேலைக்கு லாரியில் வெளி மாநிலத்துக்கு இவர் போய் விடுவார்.

காலி மதுபாட்டில்
அதனால் தேவி பெரும்பாலும் வீட்டில் தனியாகத்தான் இருப்பார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் தேவி சடலமாக கிடந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் சொல்லவும் விசாரணை ஆரம்பமானது.

தனிப்படை
இதுதொடர்பாக தனிப்படையும் அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வந்தனர். தேவி சடலத்துக்கு பக்கத்தில் ஒரு காலி மது பாட்டில் கிடந்தது. அப்போதுதான் ராமகிருஷ்ணன் என்பவரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தபோது எல்லா உண்மையும் வந்தது.

ராமகிருஷ்ணன்
55 வயசு தேவியுடன் ராமகிருஷ்ணன் என்ற 30 வயது இளைஞனுக்கு கள்ள உறவு இருந்திருக்கிறது. ராமகிருஷ்ணன் கரும்பு வெட்டும் வேலை பார்ப்பவராம். இவர்களுக்குள் பண விஷயத்திலும் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்துள்ளது. அப்படித்தான் தேவி இவரிடம் ரூ.7,500 கடன் வாங்கி உள்ளார். சம்பவத்தன்று இருவரும் தண்ணி அடித்துவிட்டு ஜாலியாக இருந்துள்ளனர்.

வாக்குவாதம்
அந்த சமயத்தில், கொடுத்த 7500 ரூபாய் கடனை ராமகிருஷ்ணன் கேட்க, பணம் இல்லை என்று தேவி சொல்ல.. இது வாக்குவாதமாக மாறி உள்ளது. பிறகுதான் ஆத்திரத்தில் ராமகிருஷ்ணன் அரிவாளால் தேவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த ராமகிருஷ்ணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications