Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பேருந்து நிலையத்திலேயே மோதல்.. மாறி மாறி தாக்கிக்கொண்ட பள்ளி மாணவர்கள்.. மதுரையில் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

பேரையூர் : மதுரை மாவட்டம் பேரையூர் பேருந்து நிலையத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.பள்ளி மாணவர்கள் அடித்துக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை அடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Recommended Video

    பேருந்து நிலையத்திலேயே மோதல்.. மாறி மாறி தாக்கிக்கொண்ட பள்ளி மாணவர்கள்.. மதுரையில் அதிர்ச்சி

    கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஒரு ஆண்டாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் சில மாதங்களுக்கு முன்னர்தான் பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வந்தது. கொரோனாவின் பாதிப்பு சற்று குறையத் தொடங்கியதால் கல்லூரிகளிலும் வாரம் 6 நாட்கள் பாடம் நடத்தலாம் என்றும், அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளில் வகுப்புகள் நடத்தலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

    இதனால் தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலும் மாணவர்கள் வழக்கமாக பள்ளிக்கு செல்லத் தொடங்கி உள்ளனர்.

    நீ பெரியவனா? நான் பெரியவனா?

    நீ பெரியவனா? நான் பெரியவனா?

    தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் என எங்கு சென்றாலும் மாணவர்கள் இருதரப்பாக பிரிந்துத்தான் செயல்பட்டு வருகின்றனர், சீனியர், ஜுனியர் என்ற அடிப்படையிலும், இரண்டு சமூகம் என்ற அடிப்படையிலும் ஒருவித பகை உணர்வோடுத்தான் சென்று வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் சென்னையில் அடிக்கடி நிகழும் பேருந்து மற்றும் ரயில்களில் பிரபல கல்லூரி மாணவர்கள் அடிக்கடி தாக்கிக் கொள்ளும் சம்பவங்களை பார்த்து வருகிறோம்.

    பஸ் ஸ்டாண்டில் தகராறு

    பஸ் ஸ்டாண்டில் தகராறு

    மதுரை மாவட்டம் பேரையூர் பேருந்து நிலையத்தில் நவம்பர் 16ம் தேதி பேருந்தில் செல்வதற்காக மாணவர்கள் காத்துக் கொண்டிருந்தனர். அரசுப் பள்ளியில் படிக்கும் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களிடையே முன்விரோதம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் +1 மாணவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது +2 மாணவர்கள் அவர்களை கலாய்த்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த +1 தரப்பு வாக்குவாதத்தில் ஈடுபட மோதல் தொடங்கியது.

    சமாதானம் செய்த பயணிகள்

    சமாதானம் செய்த பயணிகள்

    ஆரம்பத்தில் சாதாரணமாக ஆரம்பித்த சண்டை இருதரப்பினரிடையே சாதிக் கலவரம் போல் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டனர். இருதரப்பு மாணவர்களை விலக்கி விட சில மாணவர்கள் முயன்றனர். பேருந்து நிலையத்தில் இருந்த பெண்களும் சமாதானப்படுத்தும் முயற்சியில் இருதரப்பினரையும் திட்டினர். சிலர் நமக்கெதுக்கு வம்பு என எதுவும் தெரியாததுபோல் கடந்து சென்றனர். ஆனால் இருதரப்புக்கு கோபம் அடங்கவில்லை.

    பயணி ஒருவர் படம்பிடித்தார் ஸ்டண்ட் காட்சிகள் படம்பிடிப்பு

    பயணி ஒருவர் படம்பிடித்தார் ஸ்டண்ட் காட்சிகள் படம்பிடிப்பு

    இந்நிலையில் இவர்கள் மோதிக்கொள்ளும் சம்பவத்தை பேருந்தில் இருந்த பயணி ஒருவர் தனது செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தமிழ்நாடு முழுவதும் வைரலாகி வருகிறது.இந்த சம்பவம் குறித்து சிலர் பேரையூர் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, அதற்கு போலீசார் இதுபோன்று மாணவர்கள் அடித்துக்கொள்ளும் சம்பவம் அடிக்கடி நடப்பதுதான்.

    வழக்கமான ஒன்றுதான்

    வழக்கமான ஒன்றுதான்

    இந்த வீடியோ வைரல் ஆனதால் பேசப்படுகிறது அவ்வளவுதான் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருந்தாலும் இந்த வீடியோ வைரல் ஆனதால் போலிசார் வீடியோ காட்சிகளில் பதிவாகியுள்ள மாணவர்கள் அடையாளம் கண்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+