ஹேப்பி தீபாவளி.. மறந்தும்கூட தீபாவளிக்கு "இதை" மட்டும் பண்ணாதீங்க. கவனம் மக்களே.. பெருகட்டும் பேரன்பு
சென்னை: தீபாவளி பட்டாசு சத்தம் கேட்டு பறவைகள் மட்டுமல்லாமல், நாய்களும் அச்சம் கொள்ளும் என்பதால், இதுபோன்ற நேரங்களில் செல்லப்பிராணிகளை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
வழக்கமாக தீபாவளி திருநாளில் பட்டாசுகளை வெடிப்பது வழக்கம்.. வெடி இல்லாத தீபாவளியை தமிழர்கள் நினைத்துக்கூட பார்த்தது கிடையாது. ஆனாலும்கூட, ஜீவராசிகள் மீது பேரன்பு கொண்டவர்கள், வெடி வெடிக்காமலேயே தீபாவளியை கொண்டாடி வருகிறார்கள்.

வவ்வால்கள்: இன்றும்கூட தமிழகத்தின் பல்வேறு ஊர்களில், இந்த நடைமுறை உள்ளது.. 30 வருடங்களாக, 60 வருடங்களாக, தீபாவளியை கொண்டாடாத கிராமங்கள் உள்ளன.. வவ்வால்கள் உட்பட ஆயிரக்கணக்கான வேடந்தாங்கல் பறவைகள், குறிப்பிட்ட பகுதிகளுக்கு வந்து சென்று கொண்டிருகின்றன.
இவைகளுக்கு, தீபாவளி வெடியால் எந்த இடையூறும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே, கிராமங்களில் தீபாவளி கொண்டாடப்படாமலேயே உள்ளனர். சில கிராமங்களில், தீபாவளி தினத்தன்று பட்டாசு கடைகளையே தடை செய்துள்ளனர்.
வயல்வெளிகள்: அதனால், குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை பட்டாசு வெடிக்க ஆசைபட்டால் கூட, அருகில் உள்ள மற்ற கிராமங்களுக்கு சென்று வயல் பகுதியில்தான் வெடிப்பார்கள்.. பறவைகளுக்காக இந்த அளவுக்கு முக்கியத்துவம் தருவதைபோலவே, நாய்களுக்கும் தர வேண்டும் என்பதே விலங்குகள் நல ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது. காரணம், கிராமங்களைவிட, நாய்களை வளர்ப்பவர்கள் நகரங்களில் அதிகமாகவே உண்டு.
வெடி சத்தம் என்றாலே நாய்களுக்கும் அலர்ஜிதான்... ஒவ்வொரு தீபாவளி நாளிலும், பல்வேறு நாய்கள், வெடிசத்தம் கேட்டு, பயந்துகொண்டு, வீட்டை விட்டே ஓடிவிடுவதாக புளூகிராசிற்கு புகார்களும் வருகின்றன. அதனால், தீபாவளி நாளில், நாய்களை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும் என்கிறார்கள்.
பால்கனி: அதற்காக நாய்கள் ஓடிப்போய்விடக்கூடாது என்பதற்காக, வீட்டுக்கு வெளியே, பால்கனிகளில், அல்லது தனி ரூம்களில் கட்டி போடக்கூடாது என்றும், வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக அவைகளை அவிழ்த்து விட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.. மேலும், இதுபோன்ற கழுத்தில் அடையாள அட்டையை கட்டி வைத்தால், நாய்கள் தொலைந்து போனாலும், கண்டுபிடிக்க வசதியாக இருக்குமாம்.
உடனடி சிகிச்சை: செல்லப் பிராணிகளுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவ உதவி தேவைப்பட்டால், உடனடியாக மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications