Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணாமலை ஆக்‌ஷன்; சந்துரு ரியாக்‌ஷன்? 20 ஆயிரம் புத்தகம் படித்தவர், அறிக்கையை படித்தாரா?

Subscribe to Oneindia Tamil

ஓசூர்: 20 ஆயிரம் புத்தகங்களைப் படித்ததாகச் சொன்ன அண்ணாமலை தனது அறிக்கையைப் படிக்காமலே அதை எதிர்த்து தீர்மானம் போட்டது எப்படி? என்று முன்னாள் நீதிபதி சந்துரு கேள்வி எழுப்பி இருக்கிறார்.

கடந்த ஆண்டு நாங்குநேரியில் மாணவன் சின்னதுரை உறங்கிக் கொண்டிருந்தபோது, வீடு புகுந்த வேறு சாதியைச் சேர்ந்த சக மாணவர்கள் அவரை அரிவாளால் வெட்டினர். இந்தத் தாக்குதலால் படுகாயம் அடைந்த சின்னதுரை உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதற்காக மருத்துவச் செலவை அரசே ஏற்றது. இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Annamalai Justice Chandru

இந்தக் கொடூர சம்பவத்தை அடுத்து முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் ஒருநபர் குழுவைத் தமிழக அரசு அமைத்தது. கல்வி நிலையங்களில் மாணவர்களிடையே நிலவும் சாதிய வேறுபாடுகளைக் களைவதற்கு என்ன மாதிரியான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்பது பற்றி ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டிருந்தது.

அதன் அடிப்படையில் 650 பக்கங்கள் கொண்ட அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சந்துரு அளித்திருந்தார். அந்த அறிக்கையை எதிர்த்து அண்ணாமலை பேசியிருந்தார். "பள்ளிக்கூடங்களில் ஜாதிக்கு கடிவாளம் போட வேண்டும் என்பது உண்மைதான் . ஆனால் முன்னாள் நீதிபதி சந்துருவின் அறிக்கையை ஏற்க முடியாது. அதில் ஏற்றுக் கொள்ள முடியாத பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அறிக்கையில் உள்ள விசயங்களைச் செயல்படுத்தினால், பள்ளி மற்றும் கல்லூரிகளில் மேலும் ஜாதி ரீதியிலான பிரச்சினைகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன" என்றும் அண்ணாமலை கூறியிருந்தார்.

அண்ணாமலையின் பேச்சு பற்றி இதுவரை ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு ஒரு பதிலையும் அளிக்காமலிருந்தார். இந்நிலையில் அவர் ஓசூரில் நடந்த புத்தகக் கண்காட்சியில் கலந்து கொண்டு பேசும் போது அண்ணாமலை அறிக்கையைப் படிக்காமலேயே அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது எப்படி என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக சந்துரு பேசுகையில், “தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து ஒரு நபர் குழுவை அமைத்து, அந்தப் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தது. நான் அதற்காக ஒருசில மாதங்கள் கள ஆய்வு செய்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் இரண்டு வாரங்களுக்கு முன்னதாக ஒரு அறிக்கையை ஒப்படைத்திருந்தேன். அந்த அறிக்கை முதல்வரைத் தவிர வேறு யாரும் பார்க்கவில்லை. அவருக்கு மட்டும்தான் அதில் என்ன இருக்கிறது என்பது தெரியும். ஆனால், அறிக்கையில் என்னவெல்லாம் இடம்பெற்றுள்ளது என்பது பற்றி ஊடகங்கள் சில ஊகத்தின் அடிப்படையில் செய்திகளை வெளியிட்டிருந்தன.

அந்த அறிக்கை மொத்தம் 650 பக்கங்கள். அதில் என்ன உள்ளது என்பது தெரியாமலேயே இந்த மாநிலத்தை ஆள வேண்டும் என்று துடிக்கக்கூடிய ஒரு கட்சியின் மாநிலத் தலைவர், 'இந்த ஒட்டுமொத்த அறிக்கையை நாங்கள் புறக்கணிக்கிறோம்' என்று சொன்னார். அதில் என்ன இருக்கிறது? நீங்கள் எதைப் படித்தீர்கள்? யாருக்கும் தெரியாது. அவருக்கு அந்த அறிக்கையில் என்ன உள்ளது என்பது முக்கியம் இல்லை. அதை எதிர்க்க வேண்டும் என்பதுதான் நோக்கம்.

இன்றைக்குப் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மனதில் வைத்துத்தான் வகுப்புக்கான நேரங்கள் வகுக்கப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் காலையில் Morning Prayer வகுப்புகள் நடத்தப்படும் . அதில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய பிறகு ஒரு ஆசிரியர் நீதிக்கதை, அறநெறிக் கதைகளை ஒரு 5 நிமிடம் சொல்லுவார். அதைக் கேட்டுவிட்டு வகுப்புக்குப் பிள்ளைகள் சென்று விடுவார்கள்.

வாரத்தில் ஒரு நாள் தான் Morning Prayer . மற்ற கிழமைகளில் வகுப்பில் அமர்ந்தபடி வெளியே நடக்கும் அறநெறிக் கதையை கேட்டால் போதும். காரணம், பொதுத் தேர்வுக்கு மதிப்பெண் பெறுவதற்காக மாணவர்கள் படிக்க வேண்டும். ஆகவே கிடைக்கும் நேரத்தை வீணடிக்கக் கூடாது என ஆசிரியர்கள் நினைக்கிறார்கள். இந்தக் குறையை நான் சுட்டிக்காட்டினேன். குறைந்த பட்சம் ஒவ்வொரு பள்ளியிலும் 2 மணிநேரம் அறநெறி வகுப்புகள் பள்ளிகளில் நடத்த வேண்டும் என்று அறிக்கையில் கூறியிருந்தேன்.

நான் ஒரு பள்ளி நிர்வாகத்தில் தலைமை பொறுப்பு ஏற்றிருந்தேன். அப்போது மாணவர்களுக்கு அறநெறி வகுப்புகளுக்கு அதிக நேரத்தைச் செலவிட உத்தரவிட்டிருந்தேன். வாரம் ஒரு நாள் பல்வேறு ஆளுமைகளை அழைத்துப் பேசச் சொல்லி இருந்தோம். சில ஆண்டுகள் அப்படி நடத்தப்பட்டது. முடிவு பற்றி ஆய்வு செய்தபோது, அந்த ஆண்டுகளில் ஒரு மாணவர்கூட தேர்வில் தோல்வி அடையவில்லை. ஆகவே, அறநெறி வகுப்பைத் தொடர்ந்து நடத்த முடிவு செய்தோம். இதைத்தான் தமிழக அரசு அறிக்கையிலும் நான் சுட்டிக் காட்டி இருந்தேன்.

ஆனால், இந்த அறிக்கையைப் படிக்காமலே அதை நிராகரித்துள்ளார் ஒரு அரசியல் கட்சித் தலைவர். இதற்கே அவர் 20 ஆயிரம் புத்தகங்களைப் படித்துள்ளதாகச் சொல்லி இருக்கிறார். நீதிபதி சந்துரு தனது சொந்தக் கருத்தை எல்லாம் அதில் சொல்லி இருக்கிறார் என்கிறார் அவர். 650 பக்கமும் என் சொந்த கருத்தை அப்படிச் சொல்ல முடியுமா? அறிக்கையில் ஒரு கருத்தைச் சொல்ல வேண்டும் என்றால், ஆதாரம் தர வேண்டும். சான்று கொடுக்க வேண்டும். பொத்தாம் பொதுவாக எழுத முடியாது.

அந்தக் கட்சியின் சார்பில் கடந்த வாரம் செயற்குழு நடந்தது. அதில் என் அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டுள்ளார்கள். இவர்களுக்கு அறிக்கை மீது பயம் இல்லை. மக்கள் படித்து முன்னேறிவிடக்கூடாது. அப்படி முன்னேறிவிட்டால், அவர்களை வைத்து அரசியல் செய்ய முடியாது. மக்களுக்கு உண்மை தெரிந்துவிடும். உண்மை தெரியக்கூடாது என்றால் அவர்கள் படிக்கக் கூடாது. அந்தப் பயத்தில் இப்படிப் பேசுகிறார்கள்" என்று ஆவேசமாகப் பேசியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+