தவிடுபொடியான பெங்களூர் எதிர்ப்பு.. ஓசூர் ஏர்போர்ட் வருவது உறுதி.. எங்கே? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்
ஓசூர்: வரவிருக்கும் ஓசூர் விமான நிலையத்திற்கான இடத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான இறுதி கட்டத்தை தமிழக அரசு நெருங்கி வருகிறது. இதையடுத்து தடை வரம்பு மேற்பரப்பு கணக்கெடுப்பு என்று அழைக்கப்படும் Obstacle Limitation Surface (OSL) surveyஐ மேற்கொள்ள ஆலோசகரை நியமிக்கத் அரசு திட்டமிட்டு வருகிறது. வனப்பகுதியில் எவ்வளவு பாதுகாப்பானது, பயணிகள் விமானங்கள் செல்ல எவ்வளவு பாதுகாப்பு என்பதை சர்வே எடுக்கும் சோதனை ஆகும் இது.
சமீபத்தில்தான் பெங்களூர் விமான நிலையத்தை நிர்வகிக்கும் ஃபேர்ஃபாக்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் உடன் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு மேற்கொண்டு உள்ளார். பெங்களூர் விமான நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரேம் வாட்சாவும் இந்த சந்திப்பில் உடன் இருந்தார். ஓசூர் சர்வதேச விமான நிலையத்தை அமைப்பதற்காக Fairfax நிறுவனத்துடன் தமிழக அரசு ஆலோசனையில் ஈடுபட்டு வந்த நிலையில்தான் இந்த சந்திப்பு நடந்தது.

சமீபத்தில்தான் ஜிஎம்ஆர் செஸ் நிலத்தில் அல்லது டாடா எலக்ட்ரானிக்ஸ் கிராமம் அல்லது தனேஜா ஏரோஸ்பேஸ்+ அருகே ஓசூர் விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இந்த வாரம் வர உள்ளதாம். ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான வரைவு சாத்தியக்கூறு அறிக்கையை இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இரண்டு தளங்களை ஆய்வு செய்து சமர்ப்பித்துள்ளது.
ஓசூர் ஏர்போர்ட்
அடுத்த கட்டமாக வான்வெளியைக் கண்டறிய விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இதை முடித்த பின்னரே, விமான நிலையம் அமைக்க ஒரு தளத்தை தேர்வு செய்ய முடியும். கடந்த அக்டோபரில், ஐந்து இடங்கள் ஆய்வுக்கு தேர்வு செய்யப்பட்டன. அதன்பின் இந்த 5 இடங்களின் நன்மை தீமைகளையும் எடைபோட்டு, சாத்தியக்கூறு அறிக்கையின் முதல் வரைவை AAI மாநில அரசுக்கு வழங்கியது. அதைத் தொடர்ந்து, அந்த 5 இடங்களில் இருந்து அரசாங்கம் இரண்டு தளங்களைத் தேர்ந்தெடுத்தது.
ஒன்று தனேஜா ஏரோஸ்பேஸ் அண்ட் ஏவியேஷன் லிமிடெட் (TAAL) ஏர்ஸ்ட்ரிப்பில் இருந்து 1.5 கிமீ தொலைவிலும் மற்றொன்று உலகம் என்ற பகுதிக்கு அருகே (ஓசூருக்கு கிழக்கு மற்றும் சூளகிரிக்கு வடக்கே) 15.5 கிமீ தொலைவிலும் உள்ளது. ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை அடுத்த மாதம் இறுதிக்குள் தமிழக அரசு உறுதி செய்ய உள்ளதாம். ஏப்ரல் இறுதிக்குள் இடம் உறுதி செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாக உள்ளது.
ஏற்கனெவே ஓசூரில் விமான நிலையம் அமைப்பதில் தமிழ்நாடு அரசு தீவிரமாக உள்ளது என்று மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை எழுப்பிய கேள்விக்கு விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு பதில் அளித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை எழுப்பிய கேள்விக்கு விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு அளித்த பதிலில், நாங்களும் உதவி செய்துவருகிறோம். எனினும், பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து 150 கி.மீ சுற்றளவில் வேறு விமான நிலையம் அமையக் கூடாது என்ற ஒப்பந்தம் சவாலாக உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு, கர்நாடக அரசு, விமான போக்குவரத்து அமைச்சகம் ஆகியவை ஒன்றாக அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கவேண்டும். கண்டிப்பாக நாங்கள் பாஸிடிவ் அணுகுமுறை எடுப்போம், என்று கூறி உள்ளார்.
ஓசூர் ஏர்போர்ட் இடம் தேர்வு:
ஏற்கனவே ஓசூரில் ரூ.400 கோடியில் டைடல் பார்க் அமைக்கப்படும். இங்கு அறிவுசார் தொழில்நுட்ப வழித்தடமும் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, இந்திய விமான நிலைய ஆணையம் (ஏஏஐ) ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 2 இடங்களை ஆய்வு செய்ய தொடங்கி உள்ளது. முதலில் 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் தற்போது 2 இடங்களாக அவை குறைக்கப்பட்டு உள்ளது. ஓசூர் விமானம் நிலையம் அமைப்பது குறித்து விரிவான ஆய்வை மேற்கொள்ள தொடங்கி உள்ளனர்.
AAI ஆல் ஆய்வு செய்யப்பட்ட ஐந்து தளங்களில், ஓசூரில் உள்ள தனேஜா ஏரோஸ்பேஸ் அண்ட் ஏவியேஷன் லிமிடெட் (TAAL) க்கு சொந்தமான தனியார் விமான ஓடுதளமும் அடங்கும். பெங்களூருக்கு அருகே அமைந்துள்ள தொழில்துறை நகரமான ஓசூரில் விமான நிலையத்தை உருவாக்குவதற்கான ஆரம்ப படிகளில் இதுவும் ஒன்றாகும்.
இந்த ஆய்வு, தமிழ்நாடு தலைநகருக்கான இரண்டாவது விமான நிலையத்தை உருவாக்குவதற்காக சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள நான்கு தளங்களில் AAI இன் ஆய்வுக்கு ஒப்பானது. பரந்தூர் விமான நிலையத்தின் அதே வேகத்தில் இந்த விமான நிலையத்தை அமைக்க முடிவு செய்துள்ளனர்.
மாநில அரசால் தேர்வு செய்யப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 5 இடங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. AAI இதையடுத்து ஆய்வு அறிக்கையை மாநில அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளது












Click it and Unblock the Notifications