Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓசூரில் ராக்கெட் வேகத்தில்.. உயரும் நிலத்தின் மதிப்பு.. மார்க்கெட் வேல்யூவே அடியோடு மாறுதே.. அசத்தல்

Subscribe to Oneindia Tamil

ஓசூர்: பெங்களூர் அருகே ஓசூரில் அமையவுள்ள புதிய விமான நிலையத்திற்கான இறுதி ஒப்புதலுக்காக தமிழ்நாடு அரசு காத்திருக்கும் நிலையில், அப்பகுதியில் நிலத்தின் விலை வெகுவாக உயர்ந்து வருகிறது.

ஓசூர் மற்றும் சுற்றுவட்டார விமானப் பயணத்தையும், தொழில்சார் சரக்குப் போக்குவரத்தையும் மாற்றி அமைக்கும் விதமாக, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஓசூர் பசுமை விமான நிலையத்திற்கான இடத்தை தமிழக அரசு தேர்வு செய்துள்ளது. பெங்களூரின் அத்திப்பள்ளி எல்லையிலிருந்து 26.2 கி.மீ தொலைவில் உள்ள பேரிகை-பாகலூர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த இடம், தமிழக-கர்நாடக எல்லையில் அமைந்துள்ளது. தமிழ்நாடு அரசு பெரிகை மற்றும் பாகலூர் அருகே இடத்தை இறுதி செய்துள்ளதால், ஓசூரில் சொத்து மதிப்புகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளன.

Hosur

ஓசூர்: தொடர்ந்து உயரும் நிலத்தின் மதிப்பு

பெங்களூரு அருகே உள்ள ஓசூரில், அமையவுள்ள புதிய விமான நிலையம் காரணமாக நிலத்தின் விலை உயர்ந்து வருகிறது. பெரிகை, பாகலூர், அத்திப்பள்ளி, மற்றும் சர்பூர் போன்ற பகுதிகளில் நிலத்தின் விலை ஒரு சதுர அடிக்கு ₹1,500 முதல் ₹3,500 வரை உள்ளது.

தமிழ்நாடு அரசின் இறுதி ஒப்புதல் கிடைத்தவுடன், 25-40% வரை விலை உயரும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

2,200 ஏக்கரில் அமையவுள்ள இந்த விமான நிலையத் திட்டம், நிலத்தின் விலைகளை ராக்கெட் வேகத்தில் உயர்த்தி வருகிறது. பெரிகை, பாகலூர், அத்திப்பள்ளி மற்றும் சர்பூர் போன்ற பகுதிகள் இந்த உயர்வின் மையமாக உள்ளன.

இந்த முக்கியப் பகுதிகளில் தற்போது நிலத்தின் விலை ஒரு சதுர அடிக்கு ₹1,500 முதல் ₹3,500 வரை உள்ளது. திட்டத்திற்கு இறுதி நிர்வாக ஒப்புதல் கிடைத்தவுடன், நில மதிப்புகள் 25-40% வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விமான நிலையம் வெறும் பயண மையமாக மட்டும் இல்லாமல், ஓசூரில் விரிவான வளர்ச்சிக்கு காரணமாக அமையும். இதன் காரணமாகே ரியல் எஸ்டேட் சந்தையில் உற்சாகம் ஏற்கனவே தென்படுகிறது. முதலீட்டாளர்கள் ஓசூரின் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளதால் அங்கே அதிக அளவில் முதலீடு செய்து வருகிறது.

ஓசூர் இடம் தேர்வானது எப்படி?

பெங்களூரை மக்கள் அதிகம் சார்ந்து இருப்பதை தவிர்க்கும் விதமாக வேகமாக காய் நகர்த்தி வருகிறது. ஓசூரின் வடகிழக்கில் உள்ள பேரிகை-பாகலூர் பகுதி, தக்காண ஹெரால்டு செய்திப்படி, ஒரு தடையற்ற மேற்பரப்பு (OLS) ஆய்வு நடத்தப்பட்ட பிறகு இறுதி செய்யப்பட்டது. இந்த ஆய்வு, தனியார் TAAL விமான நிலையம் அமைந்துள்ள பெலகொண்டப்பள்ளியை விட பேரிகை-பாகலூரை விரும்பியது.

பெங்களூர்செயற்கைக்கோள் நகர ரிங் சாலையின் (STRR) தமிழகப் பகுதிக்கு அருகாமையில் இந்த இடம் அமைந்துள்ளதால், எலக்ட்ரானிக் சிட்டி, சர்ப்பூர் மற்றும் ஒயிட்ஃபீல்ட் போன்ற பெங்களூருவின் முக்கிய பகுதிகளுக்கு எளிதான சாலை இணைப்பு கிடைக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட இடம், பெங்களூரு சாட்டிலைட் டவுன் ரிங் ரோடுக்கு அருகாமையிலும், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இரு மாநில மக்களுக்கும் அணுகக்கூடியதாகவும் இருந்ததால், அதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

யார் பயனடைவார்கள்?

பயணிகள்: தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு நீண்ட தூரம் பயணம் செய்ய சோர்வடைந்த பெங்களூரு வாசிகளுக்கு, குறிப்பாக பெங்களூர் தெற்குப் பகுதியில் வசிப்பவர்களுக்கு, ஓசூர் விமான நிலையம் ஒரு விரைவான மாற்றாக அமையும்.

தொழில்நுட்ப மற்றும் தொழில் மையங்கள்: பொம்மசந்திரா, ஜிகானி மற்றும் அத்திப்பள்ளி பகுதிகளில் உள்ள ஐடி பூங்காக்கள் மற்றும் உற்பத்தி அலகுகள் விரைவான சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்தால் பயனடைவார்கள்.

சரக்கு போக்குவரத்து: ஓசூரின் தொழில்துறை பலம் மற்றும் பெங்களூருவின் தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட ஏற்றுமதி பொருளாதாரத்துடன், இந்த விமான நிலையம் ஒரு முக்கிய சரக்கு போக்குவரத்து மையமாக மாறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+