Oneindia Tamil செய்தி எதிரொலி : ஒசூர் அருகே நரிக்குறவர் குடும்பங்களுக்கு உதவிய தொழிலதிபர்கள்
ஒசூர்: தமிழ் ஒன் இந்தியா செய்தி எதிரொலியாக ஒசூர் அருகே உணவின்றி தவித்து வந்த நரிக்குறவர் குடும்பங்களுக்கு தொழிலதிபர்கள் உதவியுள்ளனர்.
Recommended Video
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரிலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கரியசந்திரம் கிராமத்தில் 200 நரிக்குறவர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஊசி மணி, பாசி மணி, பொம்மைகள், வீட்டு அலங்கார பொருட்கள் உள்ளிட்டவை கிராமம் கிராமமாக சென்று விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கு
கடந்த ஆண்டு முதல் அலையின் போது இந்த சமூக மக்கள் வருமானமின்றி தவித்தனர். அது போல் இந்த இரண்டாவது அலையின் போதும் கொரோனா ஊரடங்கு காரணமாக வியாபாரமின்றி வீடுகளிலேயே முடங்கி இருப்பதால் வருமானமின்றி ஒருவேளை உணவிற்கே அவதிப்பட்டு வருகின்றனர்.

அத்தியாவசிய பொருள்
பணமாக இல்லாமல், பொருளாக உதவிட அரசு முன்வர வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்த செய்தியை 20 ஆம் தேதி நமது தமிழ் ஒன் இந்தியா இணையத்தில் விவரித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது. நமது செய்தியின் எதிரொலியாக ஒசூரை சேர்ந்த தொழிலதிபர்கள் கிருஷ்ணா, சம்பத்குமார் ஆகிய இருவரும் நரிக்குறவர்களுக்கு உதவ முன் வந்தனர்.

5 கிலோ அரிசி
இவர்கள் இருவரும் 200 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி, 5 கிலோ காய்கறிகள், 2 கிலோ கோதுமை, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களின் தொகுப்பு உள்ளிட்டவை வழங்கினர். அந்த பொருட்களை நரிக்குறவர் சமூக மக்கள் கொரோனா விதிகளை கடைப்பிடித்தபடி பெற்று சென்றனர்.

மனமார்ந்த நன்றி
இதுக்குறித்து நரிக்குறவர் சமூக மக்கள் செய்தியை வெளியிட்ட தமிழ் ஒன் இந்தியா நிறுவனத்துக்கும், உதவிய தொழிலதிபர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர். இருப்பவர்கள் இல்லாதோருக்கு கொடுத்துவிட்டு உணவு உண்பதே சிறந்த தானமாகும்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications