லாக்டவுன் நீட்டிப்பு: கர்நாடகா மதுபான கடைகளில் காலையிலேயே சாக்கு பைகளுடன் குவிந்த தமிழக குடிமகன்கள்
ஓசூர்: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் மதுபானங்களை வாங்க மாநில எல்லைகளில் உள்ள கர்நாடக மதுபான கடைகளில் தமிழக குடிமகன்கள் குவிந்தனர்.
Recommended Video
தமிழகத்தில் மே 10-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த லாக்டவுன் காலத்தில் அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளும் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

மதுகடைகளில் அமோக விற்பனை
இதையடுத்து குடிமகன்கள், 2 வார காலத்துக்கு தேவையான மதுபானங்களை வாங்கி குவித்தனர். அதேபோல் கள்ள சந்தையில் மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்யவும் பெட்டி பெட்டிகளாக விற்பனையாகின. இதனால் தமிழக டாஸ்மாக் மதுபான கடைகளில் வரலாறு காணாத விற்பனை இருந்தது.

மேலும் ஒருவாரம் நீட்டிப்பு
இந்தநிலையில் தளர்வுகளற்ற ஊரடங்கை மேலும் ஒருவாரம் நீட்டிப்பு செய்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதற்காக அனைத்து கடைகளும் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டன. ஆனால் டாஸ்மாக் மதுபானகடைகள் மட்டும் திறக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டது.

கர்நாடகா எல்லைகளில்...
இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பகுதிகளில் உள்ள குடிமகன்கள், சில கிலோ மீட்டர்கள் தூரமே உள்ள கர்நாடக மாநிலத்தில் உள்ள மதுக்கடைகளுக்கு இன்று படையெடுத்தனர். கர்நாடக மாநிலத்தில் காலை 6 மணிமுதல் காலை 10 மணி வரை மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றனர்.

கர்நாடகாவில் தமிழக குடிமகன்கள்
கர்நாடகா கடைகளில் ஒருவாரத்திற்கு தேவையான மதுபானங்களை வாங்க மாநில எல்லைகளில் உள்ள மதுக்கடைகளில் குடிமகன்கள் குவிந்தனர். இதனால் எல்லைகளில் உள்ள கர்நாடகா மதுபான கடைகளில் குடிமகன்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது.
-
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications