புதருக்குள் சினேகா.. ஒதுக்குப்புறத்தில் நடந்த பயங்கரம்.. சிக்கிய கொடூரன்.. அதிர்ச்சியில் அனந்தபூர்.!

19 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: "19 வயசு பெண்ணை, ஒதுக்குப்புறத்தில் அழைத்து சென்று, எரித்து கொன்றதுடன், புதருக்குள்ளும் வீசிய சம்பவத்தில் அடுக்கடுக்கான பல தகவல்வகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.. அதனால் ஆந்திர மாநில போலீசாரின் விசாரணையும் விரிவடைந்து வருகிறது.

ஆந்திர மாநிலம் அனந்தபூரில் உள்ள அசோக் நகரை சேர்ந்தவர் சினேகலதா... 19 வயதாகிறது.. ராஜேஷ் என்பவரை ஒரு வருடமாக காதலித்தார்.. ராஜேஷ் ஒரு கொத்தனார்.

19 year old girl raped and murdered by boy friend in Andhra Pradesh

இந்நிலையில், தர்மாவரத்தில் உள்ள எஸ்பிஐ வங்கியில் சினேகாவுக்கு 2 வாரத்துக்கு முன்பு வேலை கிடைத்துள்ளது.. அக்ரிமென்ட் அடிப்படையில்தான் வேலை கிடைத்திருக்கிறது.. வேலைக்கு போனதில் இருந்தே, சினேகாவின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அந்த ஆபீஸில் வேலை பார்த்த பிரவீன் என்பவருடன் பழக ஆரம்பித்துள்ளார்.. மேலும் ராஜேஷூடன் பேசுவதும் குறைந்து போக தொடங்கியதாக தெரிகிறது.. இதுதான் ராஜேஷூக்கு ஆத்திரத்தை உண்டு பண்ணி உள்ளது.. பலமுறை போன் செய்தும் சினேகா அதை எடுக்காததால், மேலும் மேலும் கடுப்பாகி கொண்டிருந்தார் ராஜேஷ்.

அதனால்தான் சம்பவத்தன்று சினேகாவை தனியாக வரவழைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொன்றும் உள்ளார்.. இந்த சம்பவத்தில் 2 தகவல்கள் தற்போது மேலும் கசிந்துள்ளன.. படுகொலை செய்யப்பட்ட சினேகா தலித் வகுப்பை சேர்ந்த பெண் என்று கூறப்படுகிறது... மற்றொன்று, சமசரம் பேச வேண்டும் என்று தனியாக அழைத்து சென்ற ராஜேஷ், சினேகாவை அந்த ஒதுக்குப்புறத்திலேயே பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.. ஆனால், இது இன்னும் உறுதியாகவில்லை.

இறுதியில், சினேகாவின் கழுத்தை நெரித்து கொன்று, அங்கிருந்த ஒரு புதருக்குள் சடலத்தை வீசி உள்ளார்.. யாருக்கும் எந்த தடயமும் கிடைக்க கூடாது என்பதற்காக பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதும் தெரியவந்துள்ளது.. உண்மையிலேயே ஒரு வருடத்தில் ராஜேஷை உருகி உருகி காதலித்துள்ளார் சினேகா.. அதனால்தான், ஒரு வருஷத்தில் மட்டும் 1618 முறை ராஜேஷியிடம் சினேகா போனில் பேசி இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் மற்றொரு தகவலும் வெளியாகி உள்ளது.. வேலைக்கு சென்ற மகளை காணவில்லை என்று தர்மாவரம் ஸ்டேஷனில், சினாகாவின் பெற்றோர் புறார் அளித்தபோது, கார்த்தி, ராஜேஷ் ஆகியோர் என் மகளுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர் என்று குறிப்பிட்டு தெரிவித்திருந்தனராம்.. ஆனாலும், போலீசார் புகாரை பெற்றுக் கொண்டு அலட்சியமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. அதற்கு பிறகுதான், சினேகலதாவின் பெற்றோர், பெண்கள் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட டிஷா என்ற செல்போன் ஆப் மூலம் புகார் அளித்தனர்.

அதற்கு பிறகுதான் இந்த விஷயத்தில் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, சினேகாவின் சடலமும் புதருக்குள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்போது சினேகா கொலை சம்பவத்தின் விசாரணை உச்சக்கட்டத்தில் நடந்துள்ளது.. உண்மையிலேயே சினேகா எப்படி கொல்லப்பட்டார் என்பது குறித்து ராஜேஷிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்து வருகிறது... இந்த கொலை நடந்து 2 நாட்கள் ஆகியும் தொடர்ந்து அது பற்றின தகவல்கள் வெளியாகி கொண்டே இருப்பது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+