சமைக்காத கோழிக்கறி.. சின்ன சிக்கன் பீஸை சாப்பிட தந்த அப்பா.. ஆடிப்போன ஆந்திரா.. தீவிர பறவை காய்ச்சல்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: எப்போமே முறையாக சிக்கனை சமைத்து சாப்பிட்டால் எந்த நோயும் நம்மை அண்டாது.. ஏனென்றால், பறவை காய்ச்சலை ஏற்படுத்தும் H5N1 வைரஸ் 70°C வெப்பத்தில் கொல்லப்பட்டுவிடும். ஆனால், சரியாக வேகவைக்கப்படாத சிக்கனை சாப்பிடும்போது, பல்வேறு உபாதைகள் ஏற்படுகின்றன.. அதிலும் சமைக்காமல் பச்சையாக சாப்பிட்டால்? இதோ ஆந்திர மாநிலத்தில் என்ன நடந்துள்ளது பாருங்கள்!

தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திராவில் பறவை காய்ச்சல் தீவிரமாகி வருகிறது.. கடந்த 2 மாதங்களுக்கு முன்பேயே, ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மற்றும் மேற்கு வங்காவரி மாவட்டத்தில் பறவை காய்ச்சல் வேகமாக பரவ துவங்கிவிட்டது..இதையடுத்து, பறவை காய்ச்சல் காரணமாக கோழிப் பண்ணைகளில் வளர்க்கப்படும் பல கோழிகள் தினமும் இறக்க ஆரம்பித்தன.. பின்னர், மேற்கு கோதாவரி மாவட்டம் தனுகு, வேல்பூர் உள்ளிட்ட பகுதிகள் சிகப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டது.. இந்த பகுதிகளில் 3 மாதங்களுக்கு கோழிப் பண்ணை வைக்கவும், சிக்கன், முட்டை விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது.

Andhra pradesh raw chicken bird flu
பறவைக்

காய்ச்சல் அதிகரிப்பு

இந்நிலையில், பறவை காய்ச்சலுக்கு2 வயது குழந்தை இறந்த விவகாரம் மிகப்பெரிய அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.. பல்நாடு மாவட்டத்தில் உள்ள நரசராவ் பேட்டையை சேர்ந்த தம்பதிக்கு 2 வயது பெண் குழந்தை உள்ளது.. குழந்தையின் அப்பா ஒரு தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார்..குழந்தைக்கு கடந்த பிப்ரவரி 28ம் தேதி, அவரது பெற்றோர் ஒரு சிறிய துண்டு சமைக்காத சிக்கனை ஊட்டி விட்டுள்ளனர்.

பச்சை சிக்கனை சாப்பிட்டதுமே, அந்த குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.. தொடர்ந்து வயிற்றுப்போக்கும், மயக்கமும் ஏற்பட்டுள்ளது.. இதைப்பார்த்து பதறிப்போன பெற்றோர், குழந்தையை உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.. ஆனால், குழந்தையின் உடல் நிலை மோசமாகிவிட்டது. அதனால், மேல்சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்...

ரத்த மாதிரிகள் சோதனை

உடனடியாக டெஸ்ட்கள் எடுக்கப்பட்டன.. மார்ச் 4ம் தேதி பறவைக் காய்ச்சல் அறிகுறிகள் குழந்தைக்கு தென்பட்டது. தொடர்ந்து சிகிச்சை தந்தபோதும்கூட, மார்ச் 16ம் தேதி குழந்தை இறந்துவிட்டது..

இதற்கு பிறகு நடந்த மருத்துவ பரிசோதனையில் பறவைக் காய்ச்சலால், அந்த குழந்தை இறந்தது தெரியவந்தது.. பிறகு, புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் மற்றும் குண்டூரில் உள்ள வைரஸ் ஆராய்ச்சி நிறுவனம் குழந்தைக்கு பறவை காய்ச்சல் இருந்ததை உறுதி செய்தன.. இதையடுத்து, அனைத்து மாவட்ட மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் காய்ச்சல் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டது.

நன்றாக வேக விடுங்கள்

இது குறித்து சுகாதார அதிகாரிகள் சொல்லும்போது, "சிறுமியின் குடும்பத்தினர் கோழிக்கறி வாங்கிய கடையில் கோழிக்கறி வாங்கியவர்களின் மாதிரியும் எடுத்து சோதனை செய்து பார்க்கப்பட்டது. சிக்கன் கடையிலிருந்து, சிக்கன் வாங்கியவர்கள் யார் யார் என்பதை கண்டறிந்து, அவர்களின் ரத்த மாதிரியை சோதனை செய்தோம். யாருக்கும் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்படவில்லை.. அனைவருமே நன்றாக சமைத்த கோழியை சாப்பிட்டுள்ளனர்.. இதனால் மற்ற குடும்ப உறுப்பினர்கள் ஆரோக்கியமாக உள்ளனர். எனவே பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் .. கோழி மற்றும் முட்டைகளை நன்றாக சமைத்த பிறகே சாப்பிட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

பச்சை சிக்கன்

உயிரிழந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து சொல்லும்போது, "இதற்கு முன்பும் இதேபோல சமைக்காத சிக்கனை சாப்பிட கொடுத்து இருக்கிறோம். அப்போது எந்த வித பிரச்சனையும் ஏற்படவில்லை. ஆனால் இப்போது மூச்சுவிடுவதில் சிரமம், வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்ற பிரச்சனை ஏற்பட்டது' என்றனர்..

2 வயது குழந்தை உயிரிழந்ததையடுத்து, அனைத்து கோழிப்பண்ணைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இதற்கு முன்பு கடந்த 2021-ம் ஆண்டு ஹரியானாவில் முதல் முறையாக பறவைக்காய்ச்சலுக்கு மனிதர்கள் உயிரிழப்பு நடந்தது. அதற்கு பிறகு இப்போதுதான் ஆந்திராவில் நடந்துள்ளது கவனிக்கத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+