ஒரே இரவில் 20 நாய்கள்.. நடுத்தெருவில் அடங்காத வெறித்தனம்.. மாமியார் வீட்டுக்கு போற வழியிலயே.. ஓ காட்
ஹைதராபாத்: மாமியார் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தவர், இப்போது நிஜமாகவே மாமியார் வீட்டுக்கு போய்விட்டார்.. என்னவாம்? என்ன நடந்தது தெலுங்கானாவில்?
தெலங்கானா மாநிலம், மகபூப்நகர் பகுதியில் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்தது.. அன்றைய தினம் ஒரே இரவில் 20 தெருநாய்கள் இறந்துகிடந்தன.. அத்தனை நாய்களும் எப்படி இறந்தன என்பது தெரியவில்லை.

காலையில் பொதுமக்கள் தெருவில் நடந்து சென்றபோதுதான், கொத்து கொத்தாக நாய்கள் இறந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.. மெகபூப்நகர் மாவட்டத்தில் உள்ள பொன்னக்கல் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
போலீஸ் விசாரணை: உடனடியாக போலீசாரும், விலங்குகள் நல அமைப்பினரும் விரைந்து வந்து, உயிரிழந்த நாய்களின் உடல்களை மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த நாய்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விசாரணையும் ஆரம்பமானது..
அப்போதுதான், அத்தனை நாய்களையும் மர்மநபர்கள் நள்ளிரவில், காரில் வந்து சுட்டுக் கொன்றது தெரியவந்தது. அந்த மர்மநபர்கள் முகமூடி அணிந்து வந்திருக்கிறார்கள்.. காரிலிருந்து இறங்கியதுமே, துப்பாக்கியால், தெருவில் கண்ணில்பட்ட நாய்களை எல்லாம் சுட்டுள்ளனர். இதில், 20-க்கும் மேற்பட்ட நாய்கள் தெருவிலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்துள்ளதாக தெரியவந்தது.
மர்மநபர்கள்: எனவே, அந்த மர்மநபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி விலங்கு நல ஆர்வலர்கள் புகார் தந்தனர்.. இதையடுத்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு மேற்கொண்டனர்.. மேலும், அந்த பகுதியிலிருக்கும் அனைவரிடமும் விசாரணையை மேற்கொண்டனர்.
இறுதியில், நரசிம்ம ரெட்டி என்பவர் விசாரணையில் சிக்கினார்.. இவர் ஹைதராபாத்தை சேர்ந்தவர்.. தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து இப்படி ஒரு கொடுமையை நடத்தியது நரசிம்ம ரெட்டி என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஹைதராபாத்: அதாவது, இவரது மாமியார் வீடு மகபூப்நகர் கிராமத்தில் இருந்துள்ளது.. அதனால் தன்னுடைய மாமியார் வீட்டுக்கு நரசிம்மா ரெட்டி கடந்த மாதம் சென்றிருக்கிறார்.. அப்போது, அவரது 2 வளர்ப்பு நாய்களையும் தன்னுடனேயே மாமியார் வீட்டுக்கு அழைத்து சென்றிருக்கிறார்.
மாமியார் வீட்டில் தங்கியிருந்தபோது வாக்கிங் போனபோது, தன்னுடன் அழைத்து சென்ற 2 வளர்ப்பு நாய்களையும் அழைத்து சென்றிருக்கிறார். அந்த நேரத்தில், தெருநாய்கள் எல்லாம், இந்த வளர்ப்பு நாய்களை பார்த்ததுமே குரைக்க ஆரம்பித்துள்ளன..
புது நாய்கள்: புதிதாக வந்துள்ள நாய்கள் என்பதால், தெருநாய்கள் துரத்தி துரத்தி வளர்ப்பு நாய்களை கடித்திருக்கின்றன.. இதில், ஒரு வளர்ப்பு நாய் உயிரிழந்துவிட்டது.. இன்னொரு நாய்க்கு உடம்பெல்லாம் படுகாயம் ஏற்பட்டுவிட்டது. இதை பார்த்ததுமே நரசிம்மா ரெட்டி ஆவேசமானார்.. தன்னுடைய வளர்ப்பு நாயை கடித்து, கொலை செய்த அந்த தெருநாய்களையும் பழிக்கு பழிவாங்க முடிவு செய்தார்..
இதற்காகவே, காரில் தன்னுடைய நண்பர்களை ஏற்றிக் கொண்டு, துப்பாக்கியையும் எடுத்துக் கொண்டு, மாமியார் கிராமத்துக்கு போனார்.. நள்ளிரவு நேரத்தில், அந்த தெருநாய்கள் தூங்கி கொண்டிருந்தன.. அப்போது, கண்ணில் பட்ட எல்லா தெருநாய்களையும் துப்பாக்கியால் சுட்டு பொசுக்கினார்.. 20 நாய்களுக்கு மேல் சுருண்டு விழுந்து ஸ்பாட்டிலேயே இறந்துவிட்டன. மற்ற நாய்கள் படுகாயமடைந்து உயிருக்கு போராடியுள்ளன..
அதிர்ச்சி: இதெல்லாம் நரசிம்ம ரெட்டியின் வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது. இப்போது நரசிம்ம ரெட்டி மற்றும் அவரது 2 நண்பர்களையும் தெலங்கானா போலீஸார் கைது செய்துள்ளனர்.
தன்னுடைய வளர்ப்பு நாயை கடித்துக் கொன்றதற்காக, 20 தெருநாய்களையும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்படி ஒரு பழிக்குப்பழியா? என்று அதிர்ச்சியும், கவலையுமாய் உறைந்து போயிருக்கிறார்கள் விலங்குகள் நல ஆர்வலர்கள்...!!












Click it and Unblock the Notifications