கிட்ட நெருங்கி "கவிழ்க்கும்" பெண்.. குமட்டும் பகீர்.. பரிதாப ஏழைகள்.. அந்த ஆண் நண்பர் வேற.. கொடுமை

26 வயது பெண்ணை ஆந்திர மாநில போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஒரு இளம்பெண்ணுக்கு இவ்வளவு குரூர குணம் இருக்குமா? என்று ஆந்திராவே அலறி போய் கிடக்கிறது..!!!

என்டிஆர் மாவட்டம் விஜயவாடாவை சேர்ந்தவர் அந்த பெண்.. 26 வயதாகிறது.. சின்ன வயசில் இருந்தே, ஆடை அலங்காரம் செய்து கொள்வதில் இவருக்கு ப்ரியமாம்.

அதற்கேற்றபடி, அங்குள்ள பகுதியிலேயே பெண்களுக்கான ரெடிமேட் துணிக்கடை ஒன்றையும் நடத்தி வருகிறார்.. இவரது கடைக்கு ஏராளமான பெண்கள் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள்..

கஸ்டமர்

கஸ்டமர்

காரணம், கஸ்டமர்களிடம் நன்றாகவும், அவர்களை கவரும்படியும் பேசுவாராம்.. அப்படி பேச்சு கொடுத்துக்கொண்டே அவர்களின் குடும்ப சூழலையும் கேட்டு தெரிந்து கொள்வாராம். அதிலும் ஏழை பெண்கள், இவரது கடைக்கு வருகிறார்கள் என்றால் கூடுதலாக பேசுவாராம்.. அக்கறையாக நெருங்கி, அவர்களை பற்றி விசாரிப்பார்.. இப்படித்தான், சில வாரங்களுக்கு முன்பு, இவரது கடைக்கு 20 வயது இளம்பெண் ஒருவர் புது டிரஸ் எடுப்பதற்காக வந்திருக்கிறார்.. கடைக்கு வந்த அந்த பெண்ணிடம், நாகசாயி தன் பாணியில் நட்புடன் பேசியுள்ளார்..

 ஆபாச வீடியோ

ஆபாச வீடியோ

அப்போது அந்த பெண், தன்னுடைய குடும்பத்தினர் கூலி வேலை செய்வதாகவும், வீட்டில் பணப்பிரச்சனை இருப்பதாகவும் புலம்பி உள்ளார்.. இதனை கேட்ட நாகசாயி, அந்த பெண்ணை தன்னுடைய வீட்டுக்கு வரும்படி அழைத்துள்ளார்... உடனே அந்த பெண்ணும் அப்பெண்ணின் பாசத்தை பார்த்து, அங்கு சென்றிருக்கிறார்.. வீட்டுக்கு வந்த பெண்ணுக்கு, கூல்டிரிங்ஸ் தந்துள்ளார் நாகசாயி.. ஆனால், அந்த கூல்டிரிங்ஸ்ஸில், ஏதோ கலந்து கொடுத்ததாக தெரிகிறது... அதை குடித்த அப்பெண் மயங்கி விழுந்தார்... அவரை நாகசாயி, ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார்...

 விஷப்பெண்

விஷப்பெண்

இந்த வீடியோவை எடுப்பதற்கு, நாகசாயிக்கு நெருங்கிய ஆண் நண்பர் ஒருவர் உடந்தையாக இருந்துள்ளார்... சிறிது நேரம் கழித்து அந்த பெண் மயக்கம் தெளிந்து எழுந்து உட்கார்ந்துள்ளார்.. அப்போது அவரிடம் இந்த வீடியோவை காட்டிய நாகசாயி, தான் சொல்வதுபோல நடந்துகொள்ளவேண்டும், இல்லாவிட்டால், வீடியோவை சோஷியல் மீடியாவில் பதிவிடுவேன் என மிரட்டி உள்ளார்.. இதைக்கேட்டு அந்த பெண் அதிர்ச்சியடைந்ததுடன், நடந்த சம்பவத்தையும் வெளியே சொல்லவில்லை.

உல்லாசம்

உல்லாசம்

இந்த பயத்தைதான் நாகசாயி தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டார்.- இன்ஸ்டாகிராமில் இளைஞர்கள் சிலருடன், விபச்சாரி போன்று அந்த பெண்ணை சாட்டிங் செய்ய வைத்துள்ளார்.. அப்போது புதிதாக ஒரு நபர் அறிமுகமாகி, அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருக்க விரும்பினார்... உடனே நாகசாயி, இவர்களுக்காக லாட்ஜில் ரூம் எடுத்து, அந்த புதுநபரையும், இளம்பெண்ணையும் தங்க வைத்தார்.. புதுநபரும் அப்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.. ஆனால், இதையும் நாகசாயியும், அவரது ஆண் நண்பரும் மறைந்திருந்து வீடியோ எடுத்துவிட்டனர்..

 லாட்ஜ் ரூமில்

லாட்ஜ் ரூமில்

புது நபருக்கு, அந்த வீடியோவை காட்டி, ரூ.2 லட்சம் தரவேண்டும். இல்லையென்றால் வீடியோக்களை இணையதளங்களில் பதிவிடுவேன் என்று மிரட்டியுள்ளனர்... இதனால் அதிர்ச்சியடைந்த அந்த புதுநபர், ரூ.1.90 லட்சம் தந்தாராம்.. அப்போதும் நாகசாயி அவரை விடவில்லை.. இன்னமும் பணம் தரவேண்டும் என்று நாகசாயி மிரட்டிக் கொண்டே இருந்துள்ளார்.. இதனால் வேறு வழிதெரியாமல், அந்த நபர், விஜயவாடா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்துவிட்டார்.. அப்போதுதான், நாகசாயி பற்றின விவரமே போலீசாருக்கு தெரியவந்தது..

 பாய் ஃபிரண்ட்

பாய் ஃபிரண்ட்

அவரையும் அவரது ஆண் நண்பரையும் அதிரடியாக கைது சய்துள்ளனர்.. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்தும் புகார் பெற போலீசார் முடிவு செய்துள்ளனர். நாகசாயியிடம் விசாரணை நடக்கிறது.. எத்தனை பெண்களை, இவர் இதுவரை சீரழித்துள்ளார் என்பது தெரியவில்லை.. எவ்வளவு பணம் பறித்துள்ளார் என்பதும் தெரியவில்லை.. 26 வயது பெண்ணின் இந்த கொடூரத்தை கண்டு போலீசாரே திகைத்து போயிருக்கிறார்கள்.

ஷாக்கிங்

ஷாக்கிங்

கைதான நாகசாயி மற்றும் அவரது ஆண் நண்பரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பாதிக்கப்பட்ட இந்த இளம்பெண்ணை போலவே, வறுமையால் வாடும் இளம்பெண்களிடம் நட்பாக பேசுவதுபோல் நடித்து, தன்னுடைய வீட்டுக்கு அழைத்து வருவாராம்.. கூல்டிரிங்ஸில், மதுபானம் கலந்து கொடுத்து ஆபாசமாக வீடியோ எடுத்து சாட்டிங் செய்ய வைத்து அந்த இளம்பெண்களை விலைமாதர்களாக ஆக்கி வந்துள்ளதும் தற்போது தெரியவந்துள்ளது. இதன்மூலம் பல இளைஞர்களிடம் பல லட்சம் பணம் ஏமாற்றி பறித்ததும் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் யார் யார் என்ற விசாரணையை தற்போது போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+