காலையிலேயே தெலுங்கானா மக்களை அதிர வைத்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவு
ஹைதராபாத்: தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 5.3 என பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
உலகளவில் பெரிய அளவிலான சேதத்தை ஏற்படுத்தும் இயற்கைப் பேரிடர்களில் முக்கியமானது நிலநடுக்கம். இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த காலங்களில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்கள் தற்போது ஏற்படுவதில்லை. அதேசமயம் நமது அண்டை நாடுகளான நேபாளம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் அவ்வப்போது ஏற்படும் நிலநடுக்கம் பெரும் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவில் டெல்லி, மும்பை, ஜம்மு காஷ்மீர், மணிப்பூர் போன்ற மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு வந்தது. சென்னை மற்றும் வங்கக்கடல் பகுதியிலும் லேசான நில அதிர்வுகள் அவ்வப்போது உணரப்பட்டு உள்ளன. இந்நிலையில், ஆந்திரா, தெலுங்கானா மக்களை இன்று அதிர வைத்துள்ளது நிலநடுக்கம்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. முலுகு, விஜயவாடா, திருவூரு, ஜக்கையா பேட்டை, ஹைதராபாத், ஹனுமகொண்டா, கம்மம், பத்ராத்ரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை 7.27 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3ஆக பதிகாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் சில விநாடிகள் நீடித்ததாக கூறப்படுகிறது. திடீரென நிலம் அதிர்ந்ததால் மக்கள் அச்சத்தில் அலறி அடித்து வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்துள்ளனர். எனினும் இந்த நிலநடுக்கத்தில் உயிர்சேதமோ, பொருள்சேதமோ ஏற்படவில்லை.
தெலுங்கானா மாநிலம் முலுகுவில் இன்று காலை 7:27 மணியளவில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது#earthquake #MuluguEarthquake #Mulugu pic.twitter.com/0Y2ZQytbiN
— M.M.NEWS உடனடி செய்திகள் (@rajtweets10) December 4, 2024
ஹைதராபாத்திலிருந்து சுமார் 250 கி.மீ தூரத்தில் இருக்கும் முலுகு மாவட்டத்தில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. முலுகு மாவட்டத்தை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3ஆக பதிகாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கு அடியில் 40 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று (டிசம்பர் 4) நள்ளிரவு 12.24 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வடக்கு பிலிப்பைன்ஸை தாக்கிய இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications